தொற்றுகளில் இருந்து நம்மை காக்கும் ஏலக்காய் கசாயம்..!

  • by
health benefits of drinking cardamom drink

கேரளா, ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் உற்பத்தியாகும் ஏலக்காய் நமக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கிறது. சிறிதளவு ஏலக்காய் நாம் சாப்பிடும் உணவில் சேர்ப்பதன் மூலமாக நம் உணவின் ருசியை மற்றும் நறுமணத்தை முழுமையாக மாற்றும் தன்மை ஏலக்காய்க்கு உண்டு. இதை உணவில் சேர்ப்பதன் மூலமாகவும் மற்றும் கசாயமாக குடிப்பதன் மூலமாகவும் நமக்கு எந்த ஒரு நோய் தொற்றுகளும் உண்டாகாமல் நம்மை பாதுகாக்கும்.

உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும்

நான்கைந்து ஏலக்காய்களை தண்ணீரில் போட்டு அதை கொதிக்க வைத்து அதை கஷாயமாக மாற்றி பனை வெல்லத்தைப் போட்டு குடிப்பதன் மூலமாக உங்கள் உடல் குளிர்ச்சியடையும். அதை தவிர்த்து வாந்தி, மயக்கம் மற்றும் வெயிலில் சுற்றுவதால் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

மேலும் படிக்க – என்சைமினால் நம் உடலில் செய்யப்படும் செயல்பாடுகள்..!

தொண்டை வறட்சியை நீக்கும்

கோடை காலத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் தொண்டையில் ஏற்படும் வறட்டு இருமல், நீர்சுருக்கு, மார்பு சளி போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் அவர்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

மன அழுத்தத்தை போக்கும்

மன அழுத்தம் உள்ளவர்கள் கொதிக்கும் நீரில் சிறிதளவு தேனீர் பொடியும் அதிக அளவில் ஏலக்காயை போட்டு குடிப்பதன் மூலமாக அவர்களுக்கு உண்டான பிரச்சினை விலகும். ஏலக்காயில் இருந்து வெளிவரும் நறுமணம் மற்றும் அதில் இருக்கும் சிறிய இனிப்பு சுவை உங்களை அமைதியாக்கி உங்கள் எண்ணங்களை ஒருநிலைப்படுத்தும்.

வாயுத்தொல்லை உள்ளவர்கள்

ஏலக்காயை வெயிலில் நன்கு காயவைத்து அதை பொடியாக்கி நீரில் கொதிக்கவிட்டு உணவு அருந்துவதற்கு முன் அதை குடிப்பதன் மூலமாக உங்களுக்கு ஏற்படும் வாயு பிரச்சனை விலகும்.

குழந்தைகளை பாதுகாக்கும்

குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பு மற்றும் சளி பிரச்சனையை போக்குவதற்கு நாம் ஏலக்காயை நெருப்பில் காட்டி அதிலிருந்து வரும் புகையை குழந்தைகளை நுகரச் செய்ய வேண்டும். இதன் மூலமாக அவர்களுக்கு ஏற்படும் சுவாச பிரச்சனை தீரும்.

மேலும் படிக்க – தினமும் செய்யப்படும் உடற்பயிற்சியினால் உங்கள் நோய்களை தடுக்கலாம்..!

தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்

ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட ஏலக்காயை, கசாயமாக குடிப்பதன் மூலமாக நமக்கு உண்டாகும் தொற்றுகள் அனைத்தும் விலகும். ஏலக்காய் பொடி, மஞ்சள், கிராம்பு போன்றவை ஒன்றாக நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து பின்பு அதில் துளசி இலையை போட்டு கசாயமாக குடித்தால் உங்களை எந்தவொரு நோய்த்தொற்றும் அண்டாது.

இதைத் தவிர்த்து ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட சிறிய ஏலக்காயை நாம் தினமும் எல்லா வகை உணவுகளிலும் சேர்த்து பயன்படுத்தலாம். அதன் நறுமணம் மற்றும் ருசி உங்களுக்கு பல நன்மையை அளிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன