தினமும் மோர் குடிங்க மொழுமொழுனு இருப்பீங்க..!

health benefits of drinking butter milk daily

கோடை காலங்களில் நம் உடலுக்கு அதிக அளவில் நீர்ச்சத்து தேவைப்படுகிறது. என்னதான் நாம் அவ்வப்போது நீராகாரத்தை அருந்தி வந்தாலும் உடல் மிக விரைவில் வறட்ச்சி அடைந்து விடுகிறது. இது போன்ற சமயங்களில் நாம் குளிர்பானங்கள் போன்றவைகளை வாங்கி அருந்துகிறோம் ஆனால் இது அனைத்திற்கும் மேலாக நாம் வீட்டிலேயே எளிமையான முறையில் மோரை தயாரித்து சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.

கோடைக்காலத்தின் சிறந்த பானமாக மோர் இருக்கிறது. இதனால் பலரும் தெரு ஓரங்களில் விற்கும் மோர் அல்லது வீட்டில் இருந்தே மோர் தயாரித்து அருந்து வருகிறார்கள். இதை தாகத்திற்காக முதலில் பயன்படுத்துகிறார்கள் ஆனால் அதை தவிர்த்து இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் மறைந்துள்ளது அது என்னவென்று இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிக்க – உங்கள் உடலை ரீசார்ஜ் செய்து ஆற்றலை அதிகரிப்பது எப்படி..!

நாம் காரமான உணவுகளை உட்கொண்ட பிறகு நமது வயிற்றில் எரிச்சல் ஏற்படும். இதனால் ஒவ்வொரு வேளை உணவையும் அருந்திய பின்பு மோர் குடிப்பது நல்லது. இது உங்கள் வயிற்றில் குளிர்ச்சி ஏற்படுத்தும் அது மட்டுமல்லாமல் தேவையற்ற கொழுப்பு படலங்கள் மற்றும் வயிற்றெரிச்சலை மோர் அருந்துவதனால் தடுக்கப்படுகிறது.

உடல் பருமன் கொண்டவர்கள் அதிகமான உணவுகளை உட்கொள்வதினால் அசௌகரியங்கள் ஏற்படும். இதை தவிர்ப்பதற்கு ஒரு டம்ளர் மோர் குடித்தால் போதும் உங்களை லேசாக உணர வைக்கும். அதை தவிர்த்து உங்கள் வயிற்றிலிருக்கும் கொழுப்புக்களையும் கரைத்து மேலும் உங்கள் உடல் பாதிப்பு அடையாமல் பார்த்துக் கொள்ளும். மோரில் இஞ்சி, புதினா, மிளகு, சீரகம் போன்றவர்களை கலந்து குடிப்பதனால் செரிமானம் சீராகும்.

ஒரு சிலருக்கு பால் பொருட்கள் என்றாலே அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால் அவர்கள் பாலினால் தயாரிக்கப்பட்ட எல்லா உணவுகளையும் தவிர்த்து விடுவார்கள். இவர்களுக்கு போதுமான அளவு கால்சியம் சக்தி இருக்காது. இது போன்றவர்கள் மோர் குடித்து வந்தால் அலர்ஜிகள் ஏதும் ஏற்படாமல் உங்களுக்குத் தேவையான கால்சியத்தை இது தருகிறது.

மோரில் வைட்டமின்-பி, கால்சியம், பொட்டாசியம், புரோட்டீன்கள் அதிகமாக உள்ளது இதனால் உங்களுக்கு வைட்டமின் குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது அதுமட்டுமல்லாமல் உங்கள் ஹார்மோன்களை சீராக சுரக்க உதவுகிறது. வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் மோரில் சற்று அதிகமாக நீர் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

மேலும் படிக்க – தூக்கத்தின் அவசியம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

மோரில் மோரில் புற்றுநோய் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு போன்ற தன்மைகள் உள்ளது. இதனால் உங்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்து ரத்த அழுத்தத்தை குறைகிறது.

இது அனைத்திற்கும் மேலாக, கோடை காலங்களில் ஏற்படும் சரும பிரச்சனைகளை தடுக்கிறது. உடல் வறட்சியை சரி செய்து உங்களை மென்மையாக பார்த்துக் கொள்ள உதவுகிறது. அதேபோல் சருமத்தில் ஏதாவது அரிப்பு, சுருக்கம், காயங்கள் ஏற்பட்டால் ஒரு துணியில் சிறிதளவு மோர் ஊற்றி அந்த பகுதியில் வைப்பதன் மூலம் இதுபோன்ற பிரச்சினையை உடனடியாக குணப்படுத்த முடியும். இத்தகைய மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய குணங்களை கொண்டுள்ள மோரை தினமும் அருந்துவது நல்லது. இதனுடன் புதினா, கொத்தமல்லி, சிறிதளவு உப்பு என அனைத்தையும் சேர்த்து சாப்பிட்டால் இதன் ருசியும் அதிகரிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன