யோகாவில் இருக்கும் முத்திரைகளை செய்வதினால் நமக்கு கிடைக்கும் பலன்கள்.!

  • by
health benefits of doing yoga mudras

நாம் வாழும் உலகில் எப்படி நீர் நிலம் காற்று நெருப்பு வானம் என பஞ்ச பூதங்கள் இருக்கின்றதோ அதே போல் தான் நம் உடலுக்குள்ளும் இந்த பஞ்சபூதங்கள் இருக்கின்றன. இது போல் நம் உடலில் இருக்கும் பஞ்ச பூதங்களுக்கு எதவது தீங்குகள் வந்தால் நமது உடல் கோளாறுகள் ஏற்படுகிறது. உடலில் நீர்ச்சத்து அதிகரித்தாலோ அல்லது ஒரு பிணம் அதிகரித்தாலோ நமக்கு ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்படும் இவை தவிர்த்து வாயு பூமியின் என ஏதாவது ஒரு பிரச்ச னைகள் ஏற்படும் இது அனைத்தும் நம் உடல் எப்போது சமநிலையில் இருந்து தவறுகிறது அப்போது ஏதாவது ஒரு பிரச்சினை நம் உடலுக்கு ஏற்படும் இதை தடுப்பதற்காகவே நாம் யோகாவில் இருக்கும் முத்திரை யோகாவை பின் தொடர வேண்டும்.

யான் முத்ரா

யான் முத்திரை என்றால் அறிவு முத்திரை என்பார்கள் அதாவது நம்முடைய அறிவின் ஆற்றலை அதிகரிப்பதற்காக இந்த முத்திரை அறிவைப் பயன்படுத்துவார்கள். இது உங்கள் மன அழுத்தம் மற்றும் மன பதட்டத்தை குறைக்கும் உங்களில் அறிவின் ஆற்றலை அதிகரித்து நம்முடைய கவனத்தை ஒருநிலை படுத்தும். நம்முடைய எல்லா உணர்வுகளையும் இந்த முத்தரவை செய்வதன் மூலமாக கட்டுபதுத்தாலம்.

நம்முடைய ஆட்காட்டி விரலை கட்டை விரல் மூலமாக மற்ற மூன்று விரல்களையும் நீட்டி வைத்திருக்க வேண்டும். இதை அதிகாலையில் 30 முதல் 40 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க – இரவில் திறக்கப்படும் கோவில்…எங்கு தெரியுமா?

வாயு முத்திரை

வாயு முத்திரை என்றால் காற்றை சமநிலைப்படுத்தும் முத்திரை. இது தொடர்ந்து வேலை செய்பவர்களுக்கு போதுமான ஓய்வு அளிக்கும், வாயு பிரச்சனை வயிற்று பிரச்சனை மற்றும் மூட்டுகளில் வலிகள் போன்ற அனைத்தையும் குணப்படுத்தும். உங்கள் உடலை ஆரோகியமாக பார்த்துக் கொள்ளும் ஜலதோஷம் தும்மல் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும்.

ஆள்காட்டி விரலை மடக்கிக் கொண்டு உங்களின் கட்டை விரலை அதன் மேல் வைத்து அழுத்த வேண்டும் இதை தினமும் 45 நிமிடங்கள் செய்ய வேண்டும் இல்லை எனில் மூன்று விதம் என 15 நிமிடங்கள் செய்யலாம்.

பிராண முத்திரை

நம்முடைய வாழ்க்கைக்கு சக்தியை அளிக்கக் கூடியது இந்த பிராண முத்திரை. நம்முடைய ஆரோக்கியத்தை அதிகரித்து ஆற்றல் அளிக்கிறது கண்பார்வையை அதிகரிக்கும் வைட்டமின் குறைபாடுகளை சரிசெய்யும், விரதம் இருக்கும் சமயங்களில் உங்களின் பசி உணர்வைத் தடுக்கும், உங்கள் உடலின் நோய் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும்.

உங்கள் கட்டை விரலின் முனையை சுண்டு விரல் மற்றும் மோதிர விரலைக் கொண்டு தொட வேண்டும் மற்ற விரல்களை நேராக நிமிர்த்தி மூச்சை இழுத்து விட வேண்டும். இதை தினமும் காலை 30 முதல் 40 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

சூன்ய முத்திரை

சோனியா முத்திரை மன நிறைவைத் தரும். இதை செய்வதன் மூலமாக காதுவலி, கண்களில் நீர் வடிவது, காது கேட்கும் சக்தியை அதிகரிக்கும் மற்றும் உங்கள் எலும்புகளை வலுப்படுத்தும், இருதய நோய் நீரிழிவு நோய் மற்றும் தொண்டை பிரச்சனைகளை வரவிடாமல் தடுக்கும்.

உங்களின் நடுவிரலை உள்ளங்கை நோக்கியவாறு மடக்கிக் கொள்ள வேண்டும் பின்பு கட்டை விரலைக் கொண்டு அதை அழுத்தி பிடித்து மற்ற மூன்று விரல்களை நீட்டிக் கொள்ள வேண்டும் இதற்காக நீங்கள் சரியாக அமர்ந்து தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

மேலும் படிக்க – சிவராத்திரியில் நான்கு கால பூஜை வழிபாடும்

அப்பன் முத்ரா

செரிமானத்தை அதிகரிக்க உதவும் முத்திரை. இந்த முத்திரையை பயன்படுத்துவதன் மூலமாக மூலநோய் நீரிழிவு நோய் சிறுநீரக மற்றும் பல் பிரச்சனை போன்றவற்றை போக்கும். வயிற்றில் உள்ள நச்சுகளை அகற்றும்.

இதை செய்வதற்கு மோதிர விரல் மற்றும் நடு விரலை மடக்கிக் கொள்ள வேண்டும் அதன் முனையை கட்டை விரலைக் கொண்டு பிடிக்க வேண்டும் மற்ற இரண்டு விரல்களையும் நீட்டியவாறு வைத்து தினமும் அதிகாலையில் இதை செய்ய வேண்டும்.

சூரிய முத்திரை

இந்த முத்திரையை செய்வதன் மூலமாக உங்கள் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரும். உங்கள் உடல் உஷ்ணத்தைப் போக்கி சமநிலையில் வைக்கும். உடலில் இருக்கும் அதிகப்படியான குளிர்ச்சி யையும் போக்கும். உடல்நடுக்கம் ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளை தடுக்கும்.

மோதிர விரலின் நுனி கட்டை விரலின் ஆரம்பத்தில் வைக்க வேண்டும் பின்பு கட்டை விரலை கொண்டு மோதிர விரலை அழுத்தி பிடித்து மற்ற மூன்று விரல்களை நீட்டிக் கொள்ள வேண்டும்.

வருண் முத்திரை

வருண் முத்திரை என்றால் நீர் முத்திரை. எனவே உங்கள் சருமத்தை எப்போதும் ஈரப்பதம் ஆக வைத்துக் கொள்ள இந்த முத்திரை உதவுகிறது. வறட்சி அரிப்பு மற்ற சரும பிரச்சனைகள் அனைத்தையும் இது போக்கும்.

உங்கள் சுண்டுவிரல் மற்றும் கட்டை விரல் இரண்டும் இணையும் படி வைத்துக் கொள்ள வேண்டும் மற்ற விரல்களை சாதாரணமாக வைத்து எப்போது வேண்டுமானாலும் இந்த முத்திரையை செய்யலாம்.

மேலும் படிக்க – காலத்தை கட்டுப்படுத்தும் காலா என்கிற காளி..!

லிங்க முத்திரை

உங்கள் உடல் எடையை அதிகரிக்க உதவும் முத்திரை தான் இது. இதை செய்வதின் மூலமாக குளிர்காலத்தில் கூட உங்கள் உடல் உஷ்ணத்தை அதிகரிக்க முடியும். ஆஸ்துமா ஜலதோஷ பிரச்சனை மூலப் பிரச்சினை போன்ற அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வரும்.

உங்கள் இரு கைகளையும் ஒன்றாக இணைத்துக் கொள்ளுங்கள் அப்படி நினைக்கும் போது உங்களின் கட்டை விரல் மேல் நோக்கி இருக்க வேண்டும். இதை காலையில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

இந்த முத்திரைகள் அனைத்தையும் நாம் தரையில் அமர்ந்து யோகா செய்யும் வடிவில் உட்கார்ந்து செய்ய வேண்டும். நம் மனதை ஒருநிலைப்படுத்தி எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் இந்த முத்திரைகளை செய்வதன் மூலமாக நல்ல பலன்கள் கிடைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன