பிரணயமா செய்வதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்.!

  • by
health benefits of doing pranayama

உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் தங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக யோகா பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் உடற்பயிற்சி செய்வதற்கு நம் உடம்பில் ஆற்றல் மற்றும் வலிமை அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் யோகா பயிற்சியை அதுபோன்ற ஏதும் தேவையில்லை. நம் மனதை ஒருநிலைப்படுத்தி நம் உடலை வளைத்து நெளித்தால் போதும். யோகா எளிதில் செய்து விடலாம். ஆனால் இதற்கு பொறுமை மிக அவசியம். இந்த யோகா வகையை சேர்ந்ததுதான் பிரணயமா. அப்படி என்றால் இயற்கையை கட்டுப்படுத்துவது.

நம்முடைய சுவாசம் எப்படி இருக்கும்

என்றாவது நாம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை சுவாசிக்கிறோம் என்று எண்ணி இருப்போமா. ஆனால் நம்முடைய ஆரோக்கியம் நம் சுவாசிக்கும் கணக்குகள் வைத்து தீர்மானிக்கப்படுகிறது. பிரணயமா என்பதை நம்முடைய சுவாச சம்பந்தப்பட்ட செயலகம். நாம் எவ்வளவு மெதுவாக, ஆழமாக சுவாசிக்கிறேமோ நம்முடைய ஆரோக்கியம் அவ்வளவு ஆழமாக இருக்கிறது. நாம் பிரணயமா வாயில் மூலமாக சுவாசிக்கும் போது நம்முடைய நுரையீரல் வலுவடைகிறது. அதுமட்டுமல்லாமல் நம்முடைய நரம்பு மண்டலத்தை உறுதியாக்கிறது.

மேலும் படிக்க – ராகு கேது பெயர்ச்சி பலன்கள்..!

பிரணயமா செய்வதற்கு நாம் பின்பற்றவேண்டியவை

நாம் பிரணயமா செய்ய வேண்டும் என்றால் அந்த இடம் நல்ல காற்றோட்டமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை இரண்டு முறை பிரணயமா 15 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். நாம் பிரணயமா செய்யும் இடம் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். முதல் நாள் எங்கிருந்து தொடங்குகிறேம்மோ அதே இடத்தில்தான் தினமும் செய்ய வேண்டும். இதை நாம் வெறும் வயிற்றில்தான் செய்ய வேண்டும். அப்படியில்லையென்றால் சாப்பிட்டு நான்கு மணி நேரத்துக்குப் பிறகு செய்வது நல்லது. அதேபோல் இதை செய்வதற்கான இடம் மிக அமைதியாக இருக்க வேண்டும். அதைசுற்றி எந்த சத்தங்களும் இருக்கக் கூடாது.

வயிற்று மற்றும் செரிமான பிரச்சனைக்கு பிரணயமா

உங்கள் செரிமான குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. உங்கள் வயிற்றை சுற்றி எந்த குழப்பங்களும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. உங்கள் சுவாசப் பாதையில் தடைகள் இல்லாமல் மிக ஆரோக்கியமாக சுவாசிக்க உதவுகிறது. இதை 12 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் முயற்சி செய்யக்கூடாது.

சுவாசிக்கும் பொழுது நம் சுவாச அழுத்தத்திற்கு ஏற்றால் போல் நம்முடைய நுரையீரல் வேலை செய்யும். எனவே அதற்கேற்ப பாதித்த நம்முடைய நுரையீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க – காசியின் காவலர் காலபைரவர் வேண்டியதை தருபவர்..!

பிரமரி பிரணயமா

பிரணயமாவிக் இருக்கும் மூன்று வழிகளில் கடைசி வழி இதுதான். இதன் மூலமாக உங்களின் நரம்பு மண்டலத்தில் சக்தியை அதிகரிக்கிறது. இதை தினமும் பயிற்சி செய்வதன் மூலமாக உங்களுக்கு போதுமான அளவு மன அமைதியை தரும். உங்களின் எல்லா உணர்களையும் உங்களால் கட்டுப்படுத்த முடியும்.

எனவே இவை அனைத்தும் உங்களுக்கு நடக்க வேண்டும் என்றால் பிரணயமா பயிற்சியை நன்கு செய்ய வேண்டும். இதை நாம் தரையில் அமர்ந்து கொண்டு யோகா பயிற்சி செய்வதை போல் எளிமையாக செய்யலாம். இதை கொண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன