கிளின்சிங் செய்வதினால் ஏற்படும் நன்மைகள்..!

  • by
cleansing

நமது உடல் மற்றும் சருமம் என எல்லாவற்றுக்கும் கிளின்சிங் மிக முக்கியம். ஒருசிலர் அவர்களுடைய மேல் தோற்றதற்கு மட்டும் கிளின்சிங் செய்கிறார்கள். ஆனால் மேல் தோற்றம் என்பது நிரந்தரமற்ற ஒன்று, நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது நமது உள்உறுப்புகள், எனவே இதற்கு கிளின்சிங் மிக முக்கியமானது. நம்முடைய சருமம் மற்றும் உடலை எப்படி கிளீன் செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.

சருமத்திற்கு கிளின்சிங்

எப்போதெல்லாம் வெளியே சென்று மீண்டும் வீட்டிற்கு வருகிறோமோ நிச்சயம் சருமம் ஏதேனும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும். வெளியில் இருக்கும் காற்று அழுக்கு, மாசு நிறைந்ததாக இருக்கும். எனவே நம் சருமத்தில் இருக்கும் சிறு துளைகளில் கூட இது பதிந்துவிடும். இதனால் நம் சருமம் நாளடைவில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். அதேபோல் சூரிய ஒளியின் தாக்கத்தினால் நம் சருமம் மிக எளிதில் வறட்சி அடைந்து தோலுரிதல், சரும அழற்சி போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இதை தடுப்பதற்கு நாம் கிளேன்சிங் செய்வது அவசியம்.

மேலும் படிக்க – இயற்கை அழகிற்கு பழங்களின் ஃபேஸ் மாஸ்க்..!

முதலில் வெதுவெதுப்பான நீரில் தன் முகத்தை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். இயற்கை ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். பின்பு காட்டன் பஞ்சை கொண்டு நம் முகத்தில் டோனரை மெலிதாகத் தேய்க்க வேண்டும். உங்கள் கண்களையும் சுத்தம் செய்வது அவசியம், எனவே அதை மறவாமல் செய்யுங்கள். பிறகு மாய்ஸ்சரைசர் முகத்தில் தடவி உங்களுக்கு தேவையான ஒப்பனை செய்து கொள்ளலாம்.

உடல் கிளின்சிங்

நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகங்களையும் ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளவேண்டும். ஆனால் நம்முடைய தவறான உணவு முறைகளினால் நமது உடல் உறுப்புகள் அதிகமாக பாதிப்படைகிறது. இதை தடுப்பதற்கு நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் நம் உடலில் இருக்கும் ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள், கழிவுகள் போன்ற அனைத்தையும் அகற்றி நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகளை தினமும் கடை பிடித்து உண்ண வேண்டும்.

ஆரோக்கியமான உணவுகள்

இயற்கை மூலமாக உருவாக்கப்படும் எல்லா உணவுகளுமே ஆரோக்கியமாகதான் இருக்கும். ஆனால் நாம் நச்சுத் தன்மை குறைவாக இருக்கும் உணவுகளை உட்கொள்வதன் மூலமாக நமது உடலை சுத்தப்படுத்தலாம். அதற்கு நாம் காலையில் பழங்கள் சாப்பிடலாம், பிறகு இடைவெளி விட்டு கிரீன் டீ அருந்த வேண்டும். பின்பு மதிய உணவிற்கு முன்பாக உலர்ந்த பழங்களை சாப்பிடலாம். மதியம் மிகக் குறைந்த அளவு கலோரிகளை கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். மாலை நேரத்தில் நட்ஸ் சாப்பிடலாம். மீண்டும் இரவில் எண்ணெய் சேர்க்காத உணவை சிறிது எடுத்துக் கொண்டு, பிறகு ஏதேனும் பழரசத்தை அருந்தலாம்.

மேலும் படிக்க – பூங்ககாய் எனும் பூந்திக்காயின் தூய்மை பயன்கள்

செரிமான சக்தியை அதிகரிக்கும்

நாம் எப்போது நம் உடலுக்கு தேவையற்ற உணவுகளை அருந்துகிறோமோ அது செரிமான பாதைகளில் அடைப்புகளை ஏற்படுத்தும். இதனால் உங்கள் உணவு செரிமானம் அடையாமல் உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே உடனே கிளீன் செய்யும் பொழுது நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மிக எளிதில் செரிமானம் அடையும்.

உங்கள் ஆற்றலை அதிகரிக்கும்

கிளின்சர் டயட் மேற்கொள்வதினால் உங்களின் அன்றாட சக்திகள் அதிகரிக்கும். மற்ற உணவினால் உங்கள் உடலுக்குள் அரிப்புகள், அசௌகரியங்கள் உண்டாகும். இதை தடுப்பதற்கு கிளின்சிங் செய்யும் உணவுகளை உண்ணுவதால் உங்களுக்கு அசௌகரியங்களை தவிர்த்து சிந்திக்கும் திறனை அதிகரிக்கும். எல்லாவற்றையும் தெளிவாக நோக்கும் வலிமை உங்களுக்கு கிடைக்கும். உங்களின் எண்ணங்களை எப்போதும் சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும்.

கின்செங் செய்யும் மற்றொரு முறை

ஜப்பானில் இருக்கும் மக்கள் எப்படி எப்போதும் ஒல்லியாகவே இருக்கிறார்கள் என்பதைப் பற்றி என்றாவது நீங்கள் சிந்தித்து உள்ளீர்களா. அவர்கள் தங்களின் உடலில் இருக்கும் நச்சுகளை போக்குவதற்காக தண்ணீரை பயன்படுத்துகிறார்கள். காலை எழுந்த உடன் வெறும் வயிற்றில் கிட்டத்தட்ட ஒரு லிட்டர் தண்ணீரை அருந்துகிறார்கள் பிறகு இடைவெளி விட்டு அடுத்த அரை லிட்டர் தண்ணீரை அருந்துகிறார்கள் எனவே இது போல் தினமும் அதிகாலையில் தண்ணீரை குடிப்பதன் மூலமாக அவர்களின் சிறுநீரக வழியாகவே உடலில் இருக்கும் அனைத்து நச்சுக்களும் வெளியேறி விடுகிறது. இதுதான் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

மேலும் படிக்க – வீட்டிலிருந்தபடியே சர்மத்தில் ஏற்படும் வெள்ளைத் திட்டுகளை அகற்றுவது எப்படி?

நச்சுகளை அகற்றுவதினால் கிடைக்கும் நன்மைகள்

நம் உடலில் இருக்கும் நச்சுக்களை அகற்றுவதற்கு ஏற்ற உணவுகளை உட்கொள்வது அவசியமான ஒன்றாகும். அதை தவிர்த்து தினமும் பால் கலக்கப்பட்ட உணவுகளை உண்ணாமல் அதற்கு பதிலாக கிரீன் டீ போன்றவைகளை அருந்தலாம். அதேபோல் எப்போது இதுபோன்ற நச்சுத்தன்மையை அழிக்க முயற்சிகள் எடுக்கிறோமோ அப்போது முதல் உங்கள் சருமம் பளபளப்பாக மாறும். பிறகு உங்கள் உடல் வலிமை, மன வலிமை அதிகரிக்கும்.

எனவே நேற்று வாங்கும் ஒரு இயந்திரத்தை கூட நாம் சரியாக பராமரிக்கிறோம் ஆனால் நம்முடன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பயணம் செய்யும் நம் உடலின் ஆரோக்கியத்தை நாம் எப்படி பராமரிக்க வேண்டும். எனவே அதை அறிந்து உங்கள் உடலை கிளின்சிங் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன