பருப்பு வகைகளில் இருக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of different types of dal

பொதுவாக அசைவ உணவுகளை உண்பவர்களுக்கு புரதச்சத்து குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஏனென்றால் அசைவ உணவுகளில் தான் அதிக அளவிலான புரதங்கள் இருக்கும். ஆனால் அதற்கு இணையாக சைவ உணவுகளிலும் புரதங்களை அள்ளிக் கொடுப்பது இந்த பருப்பு உணவுகள் தான். அதாவது துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பச்சைப் பருப்பு, மைசூர் பருப்பு போன்றவைகள் தான். இவைகளை தினமும் நம் உணவில் எடுத்துக் கொள்வதினால் நமக்கு ஏகப்பட்ட பயன்கள் கிடைக்கின்றன.

துவரம் பருப்பு

துவரம் பருப்பில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், ஃபோலிக் அமிலங்கள், நார்சத்து மற்றும் புரதம் அதிகமாக உள்ளது. எனவே இதை உணவில் எடுத்துக் கொள்வதின் மூலமாக குடலியக்கம் சீராக இருக்கும், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் வராது.

மேலும் படிக்க – தினமும் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

பாசிப்பருப்பு

பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் அதிகமாக இதில் இருக்கிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதை தவிர்த்துக் கொழுப்புகள் எதுவும் உங்கள் உடலில் தங்காமல் பார்த்துக் கொள்கிறது.

மைசூர் பருப்பு

பருப்புகளின் மைசூர் பருப்பு சிறப்பு மிக்க ஒன்றாகும். ஏனென்றால் இதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருக்கிறது. இதில் உடலில் இருக்கும் பித்தக் கற்களை அகற்றும். அதை தவிர்த்து புற்றுநோயை உண்டாக்கும் செல்களை தடுக்கும். நம் உடலில் இருக்கும் இரத்தம் அனைத்து இடங்களுக்கும் சீராக செல்ல உதவும்.

பச்சைப் பருப்பு

பச்சைப் பருப்பில் புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம், பி காம்ப்ளக்ஸ் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை உண்பதினால் உங்கள் செரிமானம் அதிகரிக்கும். அதைத் தவிர்த்து உடலில் எந்த ஒரு கொழுப்பும் தங்க விடாமல் பார்த்துக் கொள்ளும்.

கடலைப்பருப்பு

கடலைப்பருப்பில் ஃபோலிக் அமிலம், மெக்னீசியம், மங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் போன்றவைகள் சிறப்பாக உள்ளது இது மற்ற பருப்புகளை விட 2 மடங்கு புரோட்டின் இருப்பதினால் இதை செரிலோடு சாப்பிட்டால் உடல் வலுவடையும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் நீரிழிவு நோய் மற்றும் கரோனரி இருதய நோய் தீரும்.

மேலும் படிக்க – தூங்குவதற்கு முன்பாக நாம் செய்ய வேண்டியவை..!

சிவப்பு காராமணி

சிவப்பு காராமணியில் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இதைத் தவிர்த்து இதில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. புற்று நோய் மற்றும் கொலஸ்டிரால் பிரச்சனைகள் ஏற்படுவதை குறைக்கும். இது நமது மூளை சிறப்பாகச் செயல்பட வைத்து எலும்புகளை உறுதியாக்கும்.

தட்டைப் பயிறு

மிகவும் சுவை மிக்க பருப்பு வகையை சேர்ந்ததுதான் தட்டை பயிறு. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் உங்கள் இருதயத்தை பாதுகாக்கும். அதை தவிர்த்து இளமையில் ஏற்படும் முகச்சுருக்கங்களை தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

உடல் ஆரோக்கியத்தை அதிகமாக்க, வலுவாக்க உதவும் பருப்பு உணவுகளில் கொண்டைக்கடலை மற்றும் கருப்பு கடலை போன்றவைகளும் அதிகமாக உதவுகிறது. எனவே எல்லா உணவுகளும் உங்கள் உடலை வலுவாக்கவும், உடல் உறுப்புக்களை சீராக செயல்படவும் உதவுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன