சைக்கிளிங் செல்வதினால் கிடைக்கும் பயன்கள்..!

  • by
health benefits of cycling

குழந்தைகள் தங்கள் வயது ஆரம்ப காலத்தில் முதலில் ஓட்டும் வாகனம் இந்த சைக்கிள் தான். ஆனால் நாம் அடுத்த நிலைக்கு வளரும் பொழுது சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை விட்டு மோட்டார் வாகனத்திற்கு தாவி விடுகிறோம். சைக்கிள் ஓட்டும் பொழுது நம்மை அறியாமல் ஏகப்பட்ட நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கிறது. ஆனால் இப்போது நாம் சைக்கிளை மறந்து மற்ற வாகனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளேம், இதனால் நமது உடல் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. நாம் மீண்டும் சைக்கிள் ஓட்டுவதினால் கிடைக்கும் நன்மைகளை காணலாம்.

மூளையின் ஆற்றலை அதிகரிக்கும்

தினமும் சைக்கிள் ஓட்டுவதினால் உங்களின் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் அல்சைமர் போன்ற வியாதிகள் தடுக்கப்படும். சைக்கிள் ஓட்டுவதினால் குழந்தைகளின் மன வளர்ச்சி அதிகரித்து, முதியவர்களில் ஞாபக சக்தியை வலுவாக்குகிறது.

மேலும் படிக்க – தூக்கத்தின் அவசியம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

மூட்டு வலிக்கு நிவாரணம்

சில வயதைக் கடந்தவுடன் எல்லோருக்கும் ஏற்படும் பிரச்சனைதான் மூட்டுவலி. இதனால் அவர்கள் வெளியே செல்வதை முற்றிலுமாகத் தவிர்த்து விடுவார்கள். எனவே இதுபோன்ற சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டால் தினமும் 10 நிமிடம் சைக்கிள் ஓட்டி பழகுங்கள். இதன் மூலமாக உங்கள் மூட்டு வலுவாகி மூட்டு பிரச்சனைக்கு தீர்வளிக்கும். அதேபோல் கீல்வாத பிரச்சனையையும் தீர்க்கும்.

இருதயம் வலுவாகும்

தினமும் சைக்கிள் ஓட்டுபவர்களை வைத்து செய்யப்பட்ட ஆய்வில் 31 சதவீதம் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் நல்ல நிலைக்கு திரும்பி உள்ளார்கள். மிதிவண்டி மற்றும் மற்ற உடற்பயிற்சிகளை செய்யும் பொழுது நமது இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். தினமும் சைக்கிள் ஓட்டினால் நமக்கு உடலுக்குத் தேவையான ஆற்றல் அனைத்தும் கிடைக்கும், அதாவது உடல் எடை மற்றும்  தேவையற்ற கொழுப்புகளை குறைந்து நமது உடலில் புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் அனைத்தையும் அழிக்கிறது.

ஆயுளை அதிகரிக்கும்

எங்கு செல்வதாக இருந்தாலும் சைக்கிள் பயன்படுத்துவர்களையும் மற்றவர்களை ஒப்பிடுகையில் 70 சதவீதம் ஆயுள் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு அதிகமாக உள்ளது. நீங்கள் பல வருடம் நீடித்து சுறுசுறுப்பாகவும், இளமையாக வாழ வேண்டும் என்றால் தினமும் சைக்கிள் ஒட்டி பழகுங்கள்.

மேலும் படிக்க – பருப்பு வகைகளில் இருக்கும் நன்மைகள்..!

கவர்ச்சியான தோற்றம்

நீங்கள் ஜிம்முக்கு சென்று பல மணி நேரம் உடற்பயிற்சிக்குப் பிறகு கிடைக்கும் கவர்ச்சியான தோற்றம் தினமும் சைக்கிள் ஓட்டினால் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் சைக்கிள் ஓட்டுவதன் மூலமாக உங்கள் தசைகள் அனைத்தும் இறுக்கி எல்லா கொழுப்புகளை அகற்றுகிறது. இதனால் உங்கள் உடல் வலிமையாகவும் அழகாகவும் மாறுகிறது.

எனவே இனிமேல் எங்கு செல்வதாக இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் சைக்கிளை எடுத்து செல்லுங்கள். மற்றவர்களைப் பார்த்து உங்களை மாற்றிக் கொள்ளாமல், உங்களை பார்த்து மற்றவர்கள் மாற்றிக் கொள்ளும் அளவிற்கு உயர்ந்து சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன