சீதாப்பழ கொட்டைகளுக்கு இருக்கும் குணங்கள்..!

  • by
health benefits of custard apple seeds

சீதாப்பழம் மிகவும் ஆரோக்கியமான பழங்களில் ஒன்று இது எந்த அளவிற்கு நம்மை ஆரோக்கியமாக்கிறதோ அந்த அளவிற்கு இதன் கொட்டை நாம் நினைத்துப் பார்க்காத பல வேலைகளை செய்கிறது. பொதுவாகவே நாம் பழங்களை உண்ட பின்பு கொட்டைகளை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் ஒருசில கொட்டைகளில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் சீத்தா பழத்தை விட இதன் கொட்டைகள் உற்பத்தி அதிகரித்து உள்ளார்கள். அப்படி இந்த கொட்டையில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்.

சீதாப் பழக்கொட்டை இயற்கையாகவே பூச்சிக்கொல்லி பண்புகள் உள்ளது இதனால் உங்கள் தலையில் பேன், பொடுகு, ஈறு போன்ற பிரச்சினைகள் இருந்தால் சீதாப்பழ கொட்டையை பொடி ஆக்கி கொண்டு அதை தண்ணீரில் கலந்து உங்கள் தலையில் தடவி, பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை மாதத்திற்கு 3 முறை செய்தால் நிரந்தரமாக உங்கள் தலையில் இருந்து பேன்கள் அழிந்துபோகும்.

மேலும் படிக்க – காலிபிளவர் கணக்கில் அடங்கா சத்துகொண்ட சைவக்காய்

உங்கள் வீட்டில் பூச்சிகள் தொல்லை அதிகமாக இருக்கிறதா அல்லது எறும்புகள், கரப்பான் பூச்சிகள் போன்றவை அவ்வப்போது உங்களை தொந்தரவு செய்தால் இந்த சீதாப் பழக்கொட்டை பொடியாக்கி அதை தண்ணீரில் கலந்து மூன்று நாட்கள் ஊறவைத்து பூச்சிகள் அதிகமாக இருக்கும் இடத்தில் வைத்துவிட்டால் போதும். இதன் தாக்கத்தினால் உங்கள் வீட்டில் பூச்சிகள் அண்டாமல் சுத்தமாக இருக்கும்.

விவசாயம் செய்பவர்கள் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி பயன் படுத்துகிறார்கள். இது நமக்கு எந்த அளவு தீங்கு தருகிறது என்பது பல ஆய்வில் நிரூபணமாகியுள்ளது ஆனால் சீதாப் பழக்கொட்டை மற்றும் வேப்ப இலை கொட்டை இரண்டையும் ஒன்று சேர்த்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்துவதன் மூலம் நமக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது இது மட்டுமல்லாமல் இது இயற்கையான பூச்சிக் கொல்லி என்பதினால் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாது.

ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சீதாப் பழக்கொட்டை எரிவாயு உற்பத்தி காகவே தயாரிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் சீதாப் பழக்கொட்டை கொண்டு கருக்கலைப்பு செய்ய முடியும். இதனால் கருக்கலைப்பு மாத்திரைகளுக்காக சீதாப் பழக்கொட்டைகளை பயன்படுத்துகிறார்கள்.

மேலும் படிக்க – வெற்றிலையில் இருக்கும் நாம் அறிந்திராத மருத்துவ குணங்கள்.!

சீதாப்பழத்தில் ஆரோக்கியம் இருந்தாலும் இதன் கொட்டையை ஒரு வகையான பூச்சிக்கொல்லி என்பதினால் இதை அதிகளவில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதிலும் கர்ப்பிணிப் பெண்கள் இதை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன