கருவேப்பிலையில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

  • by
health benefits of curry leaves

கருவேப்பிலை இல்லாமல் சைவ உணவும், அசைவ உணவும் இருக்காது. எல்லோருக்கும் மிகப்பிடித்தமான கருவேப்பிலையை நாம் சமையலுக்கு வாசனைக்காக மட்டும் தான் பயன்படுத்துகிறோம். இது தவறான கருத்து, உண்மையில் அதில் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதனால்தான் சித்த மருத்துவத்தில் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது கருவேப்பிலை. இதை சமையலில் சேர்ப்பதற்கு நம் முன்னோர்கள் அறிவுறுத்தியது தற்கான காரணத்தையும், இதிலிருக்கும் ஏராளமான மருத்துவ குணத்தையும் பார்க்கலாம்.

ரத்த சோகைக்கு சிறந்தது

இரும்பு சத்தின் குறைபாடினால் ஏற்படுவதுதான் ரத்தசோகை, அதை தடுப்பதற்கு நாம் அதிக அளவிலான இரும்பு சத்துகளை கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலமாக தினமும் நீங்கள் சிறிதளவு கறிவேப்பிலையை சமையலில் சேர்ப்பதன் மூலமாக உங்களுக்கு தேவையான இரும்புச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதனால் ரத்த சோகை உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வை அளிக்கிறது.

மேலும் படிக்க – சீத்தாப்பழம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

வயிற்றுப்போக்கு மற்றும் மூல நோய்

கருவேப்பிலையை நாம் பொடி செய்தும் சாப்பிடலாம், இல்லை எனில் அதில் சாறு எடுத்தும் அருந்தலாம். இதன் மூலமாக உங்கள் உடல் குளிர்ச்சியடைந்து மூல நோய் போன்ற நோய் வர விடாமல் தடுக்கும். அதேபோல் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் கருவேப்பிலை சாறுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் அவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

பெண்களுக்கு சிறந்தது

தலைசுற்றல் வாந்தி மயக்கம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கருவேப்பிலை சாறுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் எல்லா பிரச்சினைகளும் குறையும். அதை தவிர்த்து மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அவஸ்தைகளை குறைக்க உதவும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் களைப்பு மற்றும் மயக்கம் குறையும்.

ரத்த ஓட்டத்தை சீராக்கும்

மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு இரத்த ஓட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கருவேப்பிலைப் பொடியை உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் அவர்கள் மாதவிடாய் பிரச்சனைகளில் ஏற்படும் வலிகள், தசை பிடிப்பு, சீரான ரத்த போக்கு அதைத் தவிர்த்து கறிவேப்பிலையில் உள்ள காரம் நமது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.

புற்றுநோய்க்கு பாதுகாப்பு

புற்று நோய் உள்ளவர்களுக்கு செய்யப்படும் கீமோதெரபியினால் அவர்களின் உடல்நிலை பல வகையில் பாதிப்படைகிறது. அவர்களின் முடி உதிர்தல், உடல் மெலிதல், எலும்புகள் வலு இழுதல் மற்றும் மன அழுத்தம், சோர்வு போன்ற எல்லா பிரச்சினைகளையும் தடுப்பதற்கு கருவேப்பிலையை உட்கொள்ளலாம்.

மேலும் படிக்க – கூந்தல் பராமரிப்பு குறிப்புகள் வீட்டிலேயே செய்யலாம்

சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியம்

சருமத்தில் ஏற்படும் நோய்த் தொற்றுகளை வரவிடாமல் தடுக்கும் சக்தி கறிவேப்பிலைக்கு உண்டு. இதில் இருக்கும் பாக்டீரியா, அழற்சி எதிர்ப்பு பண்பு, உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது. அதை தவிர்த்த முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் சருமப் பிரச்சினைகள் அனைத்தையும் தடுக்கிறது.

பெண்களின் கூந்தலின் கருமைக்கு கருவேப்பிலையை பயன்படுத்துவார்கள். நம் தலைக்கு பயன்படுத்தப்படும் சீயக்காயில் கருவேப்பிலையை சேர்த்து அரைத்து நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். அதே வழியை நாம் பின்தொடர்ந்தால் நமது கூந்தல் கருமையாகவும், நீளமாகவும், வலிமையாகவும் இருக்கும்.

கண் பார்வைக்கு சிறந்தது

கருவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ உங்கள் கண்கள் பார்வையை வலுவாக்க உதவுகிறது. குருட்டுத் தன்மை, பார்வையிழப்பு, மாலைக்கண் நோய் போன்ற அனைத்திற்கும் கருவேப்பிலை சிறந்த உணவு.

உடல் எடையை குறைக்கும்

கருவேப்பிலையை உண்பதினால் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் குறைந்து உங்களின் தோற்றத்தை முழுமையாக மாற்றி அமைக்கும். அதேபோல் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிக அளவில் உள்ள கறிவேப்பிலையை சாப்பிடுவது சிறந்தது.

நீரிழிவு நோயை தடுக்கும்

நீரிழிவு நோய் என்பது பரம்பரை பரம்பரையாக வரக்கூடிய நோய். இதை தடுப்பதற்காக நாம் தினமும் தொடர்ந்து மூன்று மாதங்கள் கறிவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிடவேண்டும். இதன் மூலமாக நீரிழிவு நோயிலிருந்து பெரிதளவு உங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க – கொரனோ தடுப்புக்கு மத்திய மாநில அரசு அறிவுரை

கருவேப்பிலை என்பது ஒரு வகையான வேப்பிலை என்றே சொல்லலாம், அதில் இருக்கும் அனைத்து சக்திகளையும் கொண்டுள்ளதால் இதை கருவேப்பிலை என்கிறார்கள். இது மிக எளிதில் குறைந்த பராமரிப்பில் வளர்க்கப்படுவதினால் இதன் உற்பத்தி அதிகரித்து நமக்கு என்னேரமும் கிடைக்கிறது. இது இலவசமாக கிடைக்கும் இதை தினமும் உணவில் சேர்த்து அல்லது பொடி செய்து சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன