கருவேப்பிலையில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா..!

  • by
health benefits of curry leaves

சைவ பிரியர்களாக இருந்தாலும் சரி அசைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி இருவருமே சமையலின் ருசி கூட்டுவதற்காக அதிக அளவில் பயன்படுத்த கூடிய ஓர் மூலிகை இலை தான் இந்த கருவேப்பிலை. கிட்டத்தட்ட வேப்பிலைக்கு நிகரான மருத்துவ குணங்களைக் கொண்டது தான் இந்த கருவேப்பிலை. இதை சமையலுக்கு மற்றும் மருத்துவத்திற்கும் இன்றும் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். உணவின் ருசியை அதிகரிப்பதற்கும் மற்றும் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பதற்கும் இந்த கருவேப்பிலை இலையை சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள். எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் மிக எளிமையாக வளரக்கூடிய இந்த கருவேப்பிலைச் செடியை எல்லா விவசாயிகளும் தங்கள் தோட்டத்தில் வைத்திருப்பார்கள்.

இரும்புச்சத்து

ஒரு சிலருக்கு இரும்புச் சத்து குறைபாடினால் ரத்த சோகை பிரச்சினை ஏற்படும். ஆனால் இவர்கள் என்னதான் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டாலும் அந்த இரும்புச்சத்தை உறிஞ்சும் தன்மை உடலில் இல்லை என்றால் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் அனைத்தும் வீணாகும். எனவே இது போன்ற சக்திகளை உறிஞ்சும் திறனை அதிகரிக்க கறிவேப்பிலை உதவுகிறது. எனவே ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் இரண்டு கருவேப்பிலை இலையை காலையில் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு இரும்புச்சத்து அதிகரிக்கும்.

மேலும் படிக்க – ஊரடங்கு காலத்தில் வீட்டில் வளர்க்க வேண்டியது

வயிற்றுப்போக்கு பிரச்சினை

கருவேப்பிலையில் இயற்கையாகவே பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருக்கிறது. எனவே இதிலிருந்து எடுக்கப்படும் சாறை நாம் பயன்படுத்துவதன் மூலமாக மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனை குணமாகும். அதேபோல் கருவேப்பிலை இலையை பொடியாக்கி அதில் தேன் கலந்து சாப்பிடுவதன் மூலமாக, மூல நோய்க்கு தீர்வாக இருக்கும். கருவேப்பிலையின் வேர், பட்டை, இலை பூக்கள் என எல்லாவற்றையும் தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த நீரை குடிப்பது மூலமாக வயிற்றில் ஏற்படும் அனைத்து விதமான தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம்.

சிகராகும் ரத்த ஓட்டம்

மாதவிடாய் சமயங்களில் பெண்கள் கருவேப்பிலையில் செய்யப்பட்ட பொடியை சாதத்தில் கலந்து சாப்பிடுவதன் மூலமாக அவர்களுக்கு ஏற்படும் தலைசுற்றல், மயக்கம் மற்றும் அதிக ரத்தப்போக்கு போன்றவற்றை கருவேப்பிலை தீர்க்கிறது. அதேபோல் அதிகளவிலான வலிகளை குறைத்து இரத்தத்தை சீராக்கும் தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு. பூஞ்சைகளால் ஏற்படும் தோல் நோய்களை தடுக்கும் தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு.

கீமோ தெரபி

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோ தெரபியை மருத்துவரின் பரிந்துரையின்படி அவ்வப்போது செய்தாக வேண்டும். வேதி சிகிச்சை மற்றும் கதிரியக்கச் சிகிச்சை போன்றவைகளை புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்வார்கள், இதனால் இவர்களுக்கு ஏராளமான பக்கவிளைவுகள் ஏற்படும். அது அனைத்தையும் தடுப்பதற்கு நீங்கள் கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு கீமோதெரபியினால் அவர்களின் எலும்பு அதிகமாக பாதிக்கும், இது போன்ற சமயங்களில் நீங்கள் கருவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் உங்கள் எலும்புகளின் பாதிப்புகள் குறையும்.

கண் ஆரோக்கியம்

கருவேப்பிலையில் இருக்கும் வைட்டமின் ஏ சக்தி உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை வலுவாக்கும். கண்ணிலுள்ள கார்னியா சேதமடையாமல் இருப்பதற்கும் மற்றும் உங்கள் பார்வைத்திறன் அதிகரிப்பதற்கும் கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குருட்டுத் தன்மை, பார்வை இழப்பு மற்றும் மாலைக்கண் நோய்களுக்கு கருவேப்பிலை ஒரு நல்ல மருந்தாகும்.

கல்லீரல் பாதுகாப்பு

நமது உடல் ஆரோக்கியத்தின் பங்கை அதிகரிப்பதற்காக உதவுவதுதான் கல்லீரல். கருவேப்பிலையில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்தானது உங்கள் கல்லீரலை வலுவாக்கும் மற்றும் அதன் செயல்பாட்டை வலிமையாக்கவும் உதவுகிறது. ஒரு சில பெண்கள் தங்கள் கூந்தலை ஆரோக்கியத்திற்காக கருவேப்பிலையை அதிகமாகப் பயன்படுத்துவார்கள். அதேபோல் தலைகளுக்கு பயன்படுத்தக் கூடிய இயற்கை எண்ணெய்களிலும் கருவேப்பிலையின் பங்கு அதிகமாக இருக்கும். எனவே உங்களுக்கு கருமையாக மற்றும் நீளமாக கூந்தல் வேண்டுமென்றால் கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கெட்ட கொழுப்புகள்

தேவையற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக உங்கள் உடலில் ஏராளமான கெட்ட கொழுப்புகள் உருவாகும். இதனால் உங்கள் உடலில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட்டு உடல் பருமன் அதிகரிக்கும். எனவே உங்கள் உடலை சுத்தமாகவும் மற்றும் கொழுப்புகளை குறைப்பதற்கு நீங்கள் கருவேப்பிலை பயன்படுத்தலாம். அதேபோல் உங்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு எதிராக போராடி நல்ல கொழுப்புகளை உற்பத்தி செய்ய கறிவேப்பிலை உதவுகிறது.

மேலும் படிக்க – தயிர் யோகர்டில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

நீரிழிவு நோய்

நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது அது நீரிழிவு நோயாக மாறுகிறது. இதன் மூலமாக உடல் பருமன் மற்றும் உணவு முறைகளில் மாற்றம் என ஏராளமான பிரச்சினைகளுக்குள் நாம் தள்ளப்படுவோம். ஒரு சிலருக்கு பரம்பரை மூலமாக நீரிழிவு நோய் ஏற்படும், எனவே இதுபோன்ற சிக்கலை தடுப்பதற்கு கருவேப்பிலையை கொதிக்க வைத்த நீரை தொடர்ந்து மூன்று மாதங்கள் குடிக்க வேண்டும்.

நீங்கள் உண்ணும் உணவை மிக எளிதில் செரிமானம் செய்வதற்கும் கறிவேப்பிலை உதவுகிறது. எனவே எல்லாக் கடைகளிலும் இலவசமாக கிடைக்கக்கூடிய இந்த கருவேப்பிலையை பயன்படுத்தி உங்கள் உடல் ஆரோக்யத்தை அதிகரியுங்கள். அதேபோல் மிக எளிதில் வளரக்கூடிய இந்த செடிகளை உங்கள் வீட்டில் தோட்டத்தில் வளர்த்து அதன் பயனை அதிகரியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன