கருசீரகத்தில் கனிவு நிறைந்த கேர்..!

health benefits of cumin seeds

ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட கருஞ்சீரகத்தில் தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் இருக்கிறது, இது வேறு எந்த தாவரத்திலும் கிடைக்காத ஒன்று. இதில் அமினோ அமிலங்கள், வைட்டமின், கால்சியம், இரும்புச் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதனால் உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்றி உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

இருதய நோய், புற்றுநோய் போன்றவர்களை குணப்படுத்தும் சக்தி கருஞ்சீரகத்திற்கு உள்ளது. இது உடல் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்துமா சுவாசப் பிரச்சனை போன்றவர்களை வரவிடாமல் தடுக்கிறது.

மேலும் படிக்க – பருப்பு வகைகளில் இருக்கும் நன்மைகள்..!

உங்களின் மூட்டி எலும்புகளை வலுப்படுத்தும், அதை தவிர்த்து மூக்கடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை பொடியாக்கி அதை தேங்காய் எண்ணெயில் கலந்து சூடு ஏற்றி இரண்டு சொட்டு உங்கள் மூக்கில் விட்டால் உடனடியாக மூக்கடைப்பு பிரச்சினை தீரும். சிறுநீரக பிரச்சனை, பித்தப் பை கட்டி உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை பொடியுடன் தேன் கலந்து காலை, மாலை என இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

உங்களின் நுரையீரலில் இருக்கும் சளியை அகற்றுவதற்கு கருஞ்சீரகப் பொடியுடன் பூண்டு விழுதினை சேர்த்து சாப்பிடவேண்டும். தோல் பிரச்சினைகள் ஏதாவது இருந்தால் கருஞ்சீரகப் பொடியை உடம்பில் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் உங்கள் உடம்பில் ஏற்பட்டிருக்கும் சொரியசிஸ், கரப்பான் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும் அதை தவிர்த்து அதனால் ஏற்பட்டிருக்கும் தழும்புகள் மற்றும் காயங்களை குறைக்கும்.

மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு ஏற்படும் அவஸ்தைகளின் தீர்வாக கருஞ்சீரகப்பொடி இருக்கிறது. இதை நன்கு வறுத்து அதை பொடியாக்கி தேன் அல்லது கருப்பட்டியை கலந்து மாதவிடாய் ஏற்படும் நாளைக்கு பத்து நாட்களுக்கு முன்பிலிருந்து சாப்பிட வேண்டும். இதனால் மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் வலி, ரத்தப்போக்கு மற்றும் சிறுநீரக பிரச்சனை அனைத்தயும் சரிசெய்யும்.

கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டால் குழந்தை பெற்ற பின்பு கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் இருக்கும் அழுக்கை போக்க உதவும். இதை குழந்தை பெற்ற 3வது நாளில் இருந்து காலை, மாலை என தொடர்ந்து ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். கருஞ்சீரகப் பொடியுடன் வெந்தயப்பொடி, ஓமம் இது அனைத்தையும் ஒன்றாக கலந்து இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் உங்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேறிவிடும். இந்த நீரை இரவில் குடித்த பிறகு வேறு எந்த உணவையும் சாப்பிட கூடாது.

மேலும் படிக்க – வாழ்வை இனிமையாக்கும் வாழையிலை குளியல்!

இறப்பைத் தவிர மீதி எல்லா நோய்களையும் குணப்படுத்தும் என்று நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறார். இது தவிர்த்து கருஞ்சீரகத்தின் மகிமையை பைபிளிலும் குறிப்பிட்டுள்ளார்கள். யுனானி மருத்துவத்தில் கருஞ்சீரகத்தை பயன்படுத்துகிறார்கள். அரபு நாடுகளில் இதன் மகிமையை அறிந்து அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த கருஞ்சீரகத்தை நீங்களும் இதில் குறிப்பிட்டதைப் போல் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன