உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்..!

  • by
health benefits of cucumber

கோடைக் காலங்களுக்கு ஏற்ற உணவுகளில் மிக முக்கியமான உணவு வெள்ளரிக்காய். இது 96% நீரால் நிரப்பப்பட்டுள்ளது. எனவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் காயாகவே இருக்கிறது இந்த வெள்ளரிக்காய்.

வெள்ளரிக்காயில் இருக்கும் சத்துக்கள்

வெள்ளரிக்காயில் வைட்டமின் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, கந்தகம், பாஸ்பரஸ், சிலிகான், குளோரின் போன்றவைகள் உள்ளது. வெள்ளரிக்காயை சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் ஏற்படும் வறட்சியைப் போக்கி நமக்கு பசி உணர்வை தூண்டும்.

மேலும் படிக்க – ராஜ்மா சாப்பிட்டி வந்தால் ராஜா போல் தேகம் ஆரோக்கியம் பெறும்..!

ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கும்

வெள்ளரிக்காயில் பொட்டாஷியம் மிகுதியாக இருப்பதால் நமது இரத்தத்தில் இருக்கும் சிகப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் நமது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டுவந்து நம்முடைய உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.

நமது உடலில் தாக்கக்கூடிய எந்த வேதிப் பொருளையும் எதிர்த்து போராடுகிறது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதினால் வேறு எந்த வியாதியும் உங்களை அண்டாதவாறு பார்த்துக் கொள்கிறது.

மேலும் படிக்க – ஆப்ரிகாட் பழத்தின் அதிசயம் இதுதானுங்க..!

மூளை வளர்ச்சிக்கு உதவும்

நமது உடல் வலிமை பெறுவதற்கு மிகவும் உதவுவது நமது மூளை தான். ஏனென்றால் நம் மூளை செயல்பாட்டை பொறுத்து தான் ஒருவர் தனது ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும். எனவே இத்தகைய செயலை அதிகமாக செய்வதன் மூலமாக நமது மூளை உஷ்ணமடைந்து சிந்திக்கும் திறனை தற்காலிகமாக இழக்கிறது. இதை தவிர்ப்பதற்கு வெள்ளரிக்காயை உண்பதினால் நமது தலை குளிர்ச்சி அடைந்து மூளையின் ஆற்றலை அதிகரிக்கிறது.

வெள்ளரிக்காயை சாப்பிடுவதன் மூலம் நமக்கு ஏற்படும் மூட்டுவலி, வீக்கங்களை போக்குகிறது என்று சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.

பித்தம் தணிக்கும்

வெள்ளரிக்காயில் நார்சத்து அதிகமாக இருப்பதினால் நமக்கு ஏற்படும் பித்தத்தை தணித்து நம்மை புத்துணர்ச்சியாக வைக்கிறது. இதில் நீர் சக்தி அதிகமாக இருப்பதினால் நமக்கு ஏற்படும் சிறுநீரக கோளாறுகளை குணப்படுத்துகிறது. அதேபோல் நீரிழிவு நோய் உள்ளவர்களின் எடையை குறைப்பதற்கும் இது உதவுகிறது.

மேலும் படிக்க – இரவு தூக்கத்தை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சினைகளும்….. தீர்வுகளும்….!

உடல் எடை குறைக்கும்

வெள்ளரிக்காய் நமக்குத் தேவைப்படும் நீர் ஆகாரத்தை தருவதினால் நாம் எப்போதும் புத்துணர்ச்சியாக இருப்போம். எனவே உடல் சோர்வில் இருந்து நம்மை காக்க வெள்ளரிக்காய் மிகவும் உதவுகிறது.

அதேபோல் இதில் இருக்கும் நீர் சக்தி நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்றுகிறது. அதை தவிர்த்து நமக்கு தேவையான ஆற்றலைத் தருவதோடு நம் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைப்பதற்கு வெள்ளரிக்காய் உதவுகிறது.

மிக எளிமையாக அங்காடிகளில் கிடைக்கக்கூடிய வெள்ளரிக்காயை தினமும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை தோல் உரித்து சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிட்டால் தான் உங்களுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் கிடைக்கும். எனவே இனிமேல் உங்கள் உணவுக்கு முன்பு அல்லது உணவு அருந்திய பிறகு வெள்ளரிக்காயை சாப்பிடுவது மிகவும் நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன