மல்லி விதைகளில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

  • by
health benefits of coriander seeds

நாம் சமையலுக்குப் பயன்படுத்த கூடிய மசாலா பொருட்கள் வகையை சேர்ந்தது தான் இந்த மல்லி விதை. கொத்தமல்லியில் இருக்கும் சுவையை போலவே அந்த மல்லியின் விதைகளிலும் இருக்கின்றன. எனவே இதை காய வைத்து அதை அப்படியே அல்லது பொடியாக்கும் பயன்படுத்தலாம். இதை தென்னிந்தியாவில் எல்லா சமையலுக்கு இதை பயன்படுத்துகிறார்கள். சீனர்கள் மற்றும் மேலை நாடுகளிலும் இதில் இருக்கும் மருத்துவ குணங்களை அறிந்து இதை அதிக அளவில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சமையல் களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

மல்லி விதை சாறு

மல்லி விதையில் வைட்டமின் ஏ மற்றும் பி1, இரும்புச் சத்து, புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட் மற்றும் எனர்ஜி போன்றவைகள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை வெறுமனே தண்ணீரில் நன்கு ஊறவைத்து அந்த நீரைக் குடித்தால் உங்களுக்கு இந்த அனைத்து சக்திகளும் கிடைத்துவிடும். எனவே மல்லி விதையை இரவில் ஊறவைத்து அடுத்த நாள் அதிகாலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

மேலும் படிக்க – திருநீற்றுப்பச்சிலை நமக்கு இவ்வளவு நன்மைகளை தருகிறதா..!

நீரிழிவு நோய்

கொத்தமல்லியில் இயற்கையாகவே எதிர்ப்பு மருந்து அதிகமாக இருக்கிறது என ஏராளமான மருத்துவர்கள் கூறி உள்ளார்கள். எனவே மல்லிவிதை உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி நல்ல கொழுப்புகளை உருவாக்குகிறது. இதன் மூலமாக உங்கள் உடல் எடையையும் சமநிலையில் வைத்து நீரிழிவு பிரச்சினையில் இருந்து உங்களை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளலாம்.

மாதவிடாய் பிரச்சனை

மாதவிடாய் சுழற்சியில் பிரச்சினை உள்ளவர்கள் மல்லி விதையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பின்பு அந்த நீரை வடிகட்டி தேன் கலந்து கொடுக்க வேண்டும். இதன் மூலமாக உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்து மாதவிடாய் சுழற்சியை சீராக்கும். அதைப்போல ஒரு சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினை இருக்கும், அவர்களும் இந்த கொத்தமல்லி விதையை ஊறவைத்த நீரை குடித்தால் இந்த பிரச்சினை முழுமையாகத் தீரும்.

ஆஸ்டியோபோரோசிஸ்

கொத்தமல்லி விதையில் போலிக் அமிலம், கரோட்டின், நியாசிக் மற்றும் வைட்டமின் சி மற்றும் ஏ இருப்பதினால் உங்கள் உடலில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கிறது. எனவே உங்களுக்கு ஏற்படும் அனைத்து எலும்பு பிரச்சினையும், மற்றும் மூட்டு பிரச்சினையும் இது குறைத்து உங்களை உறுதியாக வைத்துக் கொள்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை முதியவர்களை விட இளைஞர்களை அதிகமாகத் தாக்குகிறது. எனவே இது போன்ற பிரச்சினையை இளம் வயதில் உங்களை தாக்காமல் இருப்பதற்கு கொத்தமல்லி விதையை பயன்படுத்துங்கள்.

மேலும் படிக்க – இபோலா மற்றும் கொரோனா வைரஸிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது..!

இரத்த சோகை

இப்போது வளர்ந்து வரும் சமூகத்தில் ஏராளமான இளம் பெண்களுக்கு ரத்த சோகை பிரச்சினை இருக்கிறது. இதன் மூலமாக அவர்களின் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்து மாதவிடாய் சுழற்சியிலும் மற்றும் குழந்தைகள் பிறக்கும் சமயங்களிலும் அவர்கள் ரத்தத்தின் அளவு குறைகிறது. எனவே இவர்கள் கொத்தமல்லி விதையை ஊறவைத்த நீரை குடித்து வந்தால் இரத்த சோகை பிரச்சினை முழுமையாக குறையும்.

எனவே நம் சமையலறையில் இருக்கும் மிகவும் ஆரோக்கியமான பொருள்தான் இந்த கொத்தமல்லி விதை, இதை பயன்படுத்தி உங்கள் பிரச்சனைகளை தடுக்கலாம். இதைத் தவிர்த்து கொத்தமல்லி விதையை நீரில் கலந்து குடித்தால் உங்கள் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் போக்கலாம். இனிமேல் இந்த கொத்தமல்லி விதையை சமையலில் சேர்த்து உங்கள் ஆரோக்கியத்தை அதிகரியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன