மல்லிவிதையினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of coriander leaves

கொத்தமல்லி விதையை நாம் எல்லாம் சமையலுக்கும் பயன்படுத்துகிறோம். பெரும்பாலான மக்கள் கொத்தமல்லி விதையை நாம் காரத்திற்காக பயன்படுத்தப்படும் மிளகாய் தூளில் சேர்த்து சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலமாக நம்முடைய உணவின் ருசி அதிகரிப்பது மட்டுமல்லாமல் நமக்கு பலவிதமான நன்மைகளை இந்த கொத்தமல்லி விதை தருகிறது.

மல்லி விதையின் அருமை

நம்மை அறியாமல் நம் சமையலில் அதிகம் சேர்க்கப்படும் இந்த மல்லி தூளில் ஏராளமான சக்திகள் இருக்கிறது. வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரோட்டின், எனர்ஜி போன்றவைகள் போதுமான அளவு இருப்பதினால் இதை சமையலில் சேர்ப்பதன் மூலமாக இந்த அனைத்து சக்திகளும் நமக்கு கிடைக்கிறது.

மேலும் படிக்க – தித்திப்பான  தேன் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான தகவல்கள்.!

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மல்லி தூளை சமையலில் அதிகமாகச் சேர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். உங்கள் ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை பராமரிக்கும், அதைத் தவிர்த்து உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

பெண்கள் பிரச்சனைக்கு தீர்வு

மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் வெள்ளைப்படுதல் போன்றவைகள் இருந்தால் அதற்கு மல்லி விதையை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து பின்பு அந்த நீரை வடிகட்டி தினமும் குடிப்பதன் மூலமாக உங்களுக்கு வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் தீரும் அதை தவிர்த்து மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும்

நாம் உணவில் மல்லி விதையை சேர்ப்பதன் மூலமாக நமக்கு ஏற்படும் அஜீரணக் கோளாறு, வயிற்றுப் பிரச்சனை போன்ற அனைத்தையும் தீர்க்கிறது. எனவே உங்களுக்கு அஜீரணக் கோளாறுகள் ஏற்பட்டால் கொத்தமல்லி விதையை ஊறவைத்த நீரை அருந்துங்கள். இதன் மூலமாக உடனடித் தீர்வு உங்களுக்கு கிடைக்கும்.

கண்களில் பிரச்சனை

ஒருசிலருக்கு கண்களில் பல பிரச்சினைகள் இருக்கும். கண்சிமிட்டல், கண் அழற்சி, பார்வை கோளாறு, கண் சிவத்தல் போன்றவைகள் இருந்தால் நீங்கள் இந்த மல்லி விதையை பயன்படுத்தி உங்களுக்கு இருக்கும் பிரச்சினையை அடியோடு அழிக்க முடியும். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் மட்டுமல்லாமல் கண்களில் ஆற்றலையும் அதிகரிக்கிறது.

மேலும் படிக்க – நாட்டுப் பழங்கள் ஹைப்ரிட் பழங்கள் எவ்வாறு வேறுபாடு  கண்டறிவது???

இரத்தசோகை

ரத்தசோகை உள்ளவர்கள் கொத்தமல்லி விதையை உணவில் சேர்ப்பதன் மூலமாக அவர்களின் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியை சமமாக வைக்கும். இதன் மூலமாக உங்களுக்கு ரத்த சோகை பிரச்சனைகள் ஏற்படாது. அதைத் தவிர்த்து எலும்புகள் பிரச்சனையையும் மல்லிவிதை தீர்க்கிறது. எனவே இதை உணவில் சேர்ப்பதன் மூலமாக உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

மல்லி விதையை நீரில் ஊறவைத்து அதை குடிப்பதன் மூலமாக நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. இதைத்தவிர்த்து நம் சமையலில் அதிகளவில் சேர்ப்பதனால் நம்மையறியாமல் நம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. எனவே உங்கள் ஆரோக்கியத்தை சமநிலையில் வைப்பதற்காக மல்லி விதையை நீராக அருந்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன