மண் பானைகளில் சமைப்பதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of cooking clay mud pots

நம்முடைய முன்னோர்கள் அக்கால வாழ்க்கை முறையில் சமையலுக்காக அதிகளவில் பயன்படுத்தியது பானைகள் தான். அதிலும் இயற்கையால் செய்யப்பட்ட மண்பானைகளில் இவர்கள் பல விதமான உணவை சமைத்து அதை உண்டு மிக ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். அதனால் இப்போது நாம் அதை அனைத்தையும் மறந்து சில்வர் பாத்திரங்களில் சமைத்து வருகிறோம். இதைத் தவிர்த்து நாம் மீண்டும் பானைகளில் சமைப்பதன் மூலமாக நமக்கு கிடைக்கும் நன்மைகளை காணலாம்.

பாக்டீரியாக்களை அழிக்கும்

நாம் பானைகளில் சமைப்பதன் மூலமாக நம்மை அறியாமல் நம் உணவில் சேர்க்கப்படும் நஞ்சுகள் அனைத்தும் வெளியேறும். இதைத் தவிர்த்து நீங்கள் சமைக்கப்படும் உணவை சரியாக வேக வைத்து அதை பல மணி நேரம் ருசியாக வைத்துக் கொள்ள உதவும். உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் உதவக்கூடிய இந்த மண் பானைகளை எல்லாவித உணவுகள் தயாரிப்பதற்கும் நாம் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – இரவில் குளிப்பதனால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள்..!

சக்திகள் அளிக்கும்

நம் உணவை மண்பானையில் சமைப்பது மூலமாக நமக்கு கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சல்ஃபர் மற்றும் இரும்புச் சத்து என எல்லாவிதமான கனிமச் சத்துக்களும் நமக்கு கிடைக்கிறது. இதை பயன்படுத்தி  சமைப்பதன் மூலமாக உணவுகளில் இருக்கும் சக்திகள் எதுவும் குறையாமல் நமக்கு அப்படியே கிடைக்கின்றன.

எண்ணெய் அளவை கட்டுப்படுத்தும்

மண்பானைகளில் நாம் எண்ணெய்களை ஊற்றி பொறிக்கப்படும் உணவுகள் ஆரோக்கிய மானவை. நாம் பயன்படுத்தப்படும் எண்ணெய்யில் இருக்கும் கொழுப்புத் தன்மையை குறைக்கிறது. அதைத் தவிர்த்து குறைந்த எண்ணெய்யில் நமக்கு தேவையான ருசியை தருவதினால் இதில் சமைப்பது மூலமாக நாம் எண்ணெய் குறைவாகப் பயன்படுத்தி ஆரோக்கியமான உணவை சாப்பிடலாம்.

ருசியை அதிகரிக்கும்

மண்பானைகளில் நாம் சமையலை மெதுவாக செய்வதின் மூலமாக அதன் ருசி மற்றும் நறுமணம் வெளியேறாமல் அப்படியே இருக்கும். இந்த பானைகளினால் வெப்பம் சற்று குறைவாக ஏறுகிறது. ஆனால் ஒருமுறை இதில் சூடு ஏறி விட்டால் அது குறைவதற்கு அதிக நேரம் எடுக்கும். இதன் மூலமாக உங்கள் உணவும் பல மணி நேரம் சுட சுட இருக்கும்.

மேலும் படிக்க – ஆரஞ்சு பழம் சாப்பிடுவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

விலை குறைவானது

நீங்கள் வாங்கப்படும் சில்வர் பாத்திரங்களை ஒப்பிடுகையில் மண்பானைகளில் நிலை மிகக்குறைவு, அதைத் தவிர்த்து இதில் ஏராளமான ஆரோக்கிய குணம் இருக்கின்றன, எனவே உங்கள் பணத்தை சரியாக பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை வலிமைப் படுத்துங்கள்.

நாம் மீண்டும் பழைய காலங்களுக்கு சென்று அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை பின்தொடர்ந்தாள் மட்டுமே நம் உடலில் ஏற்படும் புற்றுநோய், இருதய நோய், நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு போன்ற அனைத்தையும் போக்க முடியும். எனவே பழங்கால வழிகளை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை வலுவூட்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன