தாய்ப்பாலுக்கு நிகரான தேங்காய்….!

  • by
health benefits of coconut milk which is equivalent to breast milk

நாம் இன்று தேங்காயை சமையலறையில் பயன்படுத்துவதை விட அதிகமாக சாமி கும்பிடுவதற்காக தான் அதிகம் பயன்படுத்துகிறோம். காரணம், தேங்காயில் உள்ள கொழுப்பு உடல் எடையை அதிகரிக்கும் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் போன்ற பல தவறான கருத்துக்கள் நம்மிடையே நிலவுவது தான். 

முன்னோர்களின் அத்தியாவசிய உணவு தேங்காய்

நம் முன்னோர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர்களது உணவில் தேங்காய் ஆனது அத்தியாவசியமான அவசியமான உணவு பொருளாக இருந்திருக்கிறது. கேரள மக்கள் இன்னமும் அவர்களது மூன்று வேளை உணவில் தேங்காயையும் தேங்காய் எண்ணெயும், சார்ந்த பொருட்களை பயன்படுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள். அதிகம் தேங்காய் சாப்பிட்டால் மாரடைப்பு வரும் என்ற தவறான கருத்தினால் நாம் அதை பயன்படுத்துவதற்கு பயப்படுகிறோம்.

மேலும் படிக்க – சீனா கொரோனா வைரஸை எப்படி கட்டுப்படுத்தியது..!

அப்படி மாரடைப்பு வருவதாக இருந்தால் நம் முன்னோர்களுக்கும் கேரளாவில் உள்ள அனைத்து மக்களுக்குமே வந்திருக்க வேண்டுமல்லவா? அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானதல்ல.  இதை மக்களிடையே பரப்ப வணிக ரீதியாக பல காரணங்கள் இருக்கின்றன. வணிகர்களின் திட்டமிட்ட சதி. வணிக ரீதியாக ஒரு பொருளை உயர்வானதாக காட்ட வேண்டும் எனில், மற்றொரு பொருளுடன் ஒப்பிட்டால் மட்டுமே அதை உயர்வாக காட்ட முடியும்.

அப்படி தான்  வளர்ந்த வெளிநாடுகளில் அவர்களது தாவர எண்ணெய் வித்துக்கள் ஆன சன்பிளவர் எண்ணெய், சோயா போன்றவை உடலுக்கு பல மடங்கு நன்மை அள்ளித் தருவதாக அவர்கள் செய்த விளம்பரம் தான். தேங்காய் எண்ணெய் நம் உணவில் இருந்து அறவே விலகி நிற்க காரணம்.

தாய்ப்பாலுக்கு நிகரான தேங்காய்எண்ணெய் 

தேங்காயில் இருக்கும் மிக முக்கிய அமிலம் லாரிக் அமிலம். இது  மற்ற உணவுகளை காட்டிலும் தேங்காயில் தான் இந்த லாரிக் அமிலத்தின் செறிவு அதிகமாக இருக்கிறது. இதே அளவு லாரிக் அமிலம் உள்ள ஒரு உணவு தான் தாய்ப்பால்.

குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு அடுத்து கொடுக்கும் முதல் திட உணவில் நிச்சயம் சேர்க்க வேண்டிய ஒரு பொருள் தேங்காய் எண்ணெய். குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்கவும் நோயற்று வளமாக வாழவும் சந்தைகளில் விற்கும் டானிக்குகளை விட பல மடங்கு சத்து மிகுந்த ஒரு உணவு மருந்தாக செயல்படும் நம் தேங்காய் எண்ணெய் தான்.

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நிச்சயம் தேவைப்படும் தேங்காய்எண்ணெய் 

குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் அதிக நோய்த்தொற்றுகள் அவர்களை தாக்கும் படி அவர்கள் உடல் அமைப்பு இருக்கும். அவர்களின் உடல் எடை அதிகரிப்பிற்கு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய உணவில் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்வது, உடல் எடையை அதிகரிக்கும். தேங்காயில் இருக்கும் டிரைகிளிசரைட் பயன்படுத்திதான் உடல் எடை அதிகரிக்கும் பல டானிக்குகள் தயாரிக்கப்படுகின்றன.

நாம் தேங்காயை நேரடியாக உணவில் சேர்ப்பதால் இந்த டிரைகிளிசரைடு அவர்கள் உடலுக்குள் நேரடியாக செல்கிறது. இதனால் உடல் எடையும் அதிகரிக்கும்.

இதயநோய் மருந்தில் தேங்காய் 

தேங்காயில் உள்ள அதிகப்படியான லாரிக் அமிலம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்று பல தவறான கருத்துக்கள் உள்ளன. தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் இருப்பது உண்மைதான். ஆனால், அது இதயத்தில் படிந்து ரத்தநாளங்களில் படிந்து மாரடைப்பை ஏற்படுத்துகிறது என்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாக இருக்கிறது. ஏனெனில் மாரடைப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதற்கு தேங்காய் எண்ணெய்  பயன்படுத்துவதால் மட்டுமே மாரடைப்பு வருகிறது என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.

தேங்காயில் இருக்கும் மோனோ லாரிக் அமிலம் மாரடைப்பு வருவதை தடை செய்யும் மருந்துகளின் முக்கிய காரணியாக பயன்படுத்தப்படுகிறது.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மலச்சிக்கலை தீர்க்கும் அருமருந்தாக தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.

மேலும் படிக்க – சீனாவின் பாரம்பரிய மருந்தும் மற்றும் போதிதர்மனின் செயலும்..!

யாரெல்லாம் தேங்காய் எண்ணெயை தவிர்க்க வேண்டும்

மாரடைப்பு உள்ளவர்கள், உடலில் அதிக கொழுப்பு உடையவர்கள் இவர்கள் எல்லாம் மருத்துவர்களின்  அறிவுரைப்படிதேங்காய் எண்ணையை குறைவாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம் மருத்துவர்கள். 

தேங்காயை அப்படியே உணவில் சேர்த்துக் கொண்ட நம் முன்னோர்கள் எல்லாம் நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆரோக்கியமாக தான் வாழ்ந்து இருக்கிறார்கள் இன்று நவீன அறிவியல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் தான் நம்மை பல நோய்களுக்கும் ஏற்படுத்துகிறது நம்முடைய பாரம்பரிய கலாச்சார உணவை மறந்து போவது தான் இதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது நம் உணவு பாரம்பரியத்தின் அடையாளமாக இருக்கும் தேங்காயை மீட்டறிந்து அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டு நலமுடன் வாழ்வோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன