ஏராளமான நன்மைகளை தரும் கிராம்பு.!

  • by
Health Benefits Of Cloves

நாம் உணவுகளில் ஒருசில உணவுப் பொருட்களை ஏன் பயன்படுத்துகிறோம் என்று தெரியாது. அது போல் தான் பிரியாணி மற்றும் சிக்கன் கிரேவி களில் நாம் கிராம்புகளை பயன்படுத்துகிறோம். தெரியாமல் இதை நாம் மென்று விட்டால் உடனே நாம் இதை துப்பி விடுவோம். அத்தகைய காரம் கொண்ட இந்த கிராம்பு இல்லை எனில் நம் உணவு ருசிக்காது. அதை தவிர்த்து இதை சாப்பிடுவதன் மூலம் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கிறது.

பற்களை பாதுகாக்கும்

நாம் வாங்கும் பேஸ்ட் மற்றும் பல் பொடிகளில் கிராம்பு இருக்கிறது என்று விளம்பரப்படுத்துகிறார்கள், அதைத் தவிர்த்து பற்களின் வலியை குறைக்கும் மருந்துகளில் கூட கிராம்பின் மனம் வரும். எனவே பற்களில் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானதாக இருப்பது இந்த கிராம்பு. இதன் மூலமாக செய்யப்படும் கிராம்பு எண்ணெய்யை பயன்படுத்தி நம் பல் வலியை குறைக்க முடியும். இதைத்தவிர்த்து பல் சொத்தை, வாய் துர்நாற்றம் உடல் துர்நாற்றம் போன்ற அனைத்தையும் கிராம்பை கொண்டு அழிக்க முடியும்.

மேலும் படிக்க – தயிர் சாதம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் நடக்குமா?

வாந்தி மற்றும் குமட்டல் ஏற்பட்டால் கிராம்பை வாயில் போட்டுக் கொள்ளுங்கள். இது உங்கள் குமட்டல் உணர்வை தடுத்துவிடும்.

உடல் சோர்வு

ஒரு சிலருக்கு அதிகாலையில் உடல் சோர்வு அதிகமாக இருக்கும். அதேபோல் கர்ப்பிணி பெண்களும் காலை எழுந்தவுடன் சோர்வுடன் காணப்படுவார்கள். இதைத் தடுப்பதற்கு நாம் 10 கிராம்பினை எடுத்து அதில் சிறிது புளி மற்றும் பனை வெல்லத்தை சேர்த்து நீரில் போட்டு கொதிக்க விட்டு தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் உடல் சோர்வு நீங்கி விடும்.

சளி இரும்பல்

கிராம்பை வெதுவெதுப்பான நீரில் போட்டு தேன் கலந்து குடித்து வந்தால் சளி குறையும், அதேபோல் இரும்பல் பிரச்சனைகள் தீரும், வயிற்று உப்பசம் ஏற்பட்டால் உடனடி நிவாரணம் தரும்.

மேலும் படிக்க – புற்று நோய் செல்களை புதைக்கும் காய்கறிகள்!

பாலுணர்வை வலுப்படுத்தும்

கிராம்பை உன்வதின் மூலமாக ஆண் பெண் இருவருக்கும் இடையே பாலுணர்வு அதிகரிக்கும். இதனால் உறவுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மன அழுத்த பிரச்சனையையும் கிராம்பினால் குறைக்க முடியும். இதன் நறுமணம் நம்மை இதமாக வைத்துக்கொள்ளும்.

இனிமேல் கிராம்பை உணவிலிருந்து ஒதுக்காமல் அதை மென்று சாப்பிடுங்கள். அதன் ருசி உங்களை வெறுக்க செய்தாலும் அதில் இருக்கும் ஆரோக்கிய குணம் உங்கள் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன