விளக்கெண்ணையில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

  • by
health benefits of castor oil

ஆமணக்கு என்னும் தாவரத்திலிருந்து எடுக்கப்படுவது தான் விளக்கெண்ணெய். இந்தியா முழுவதும் பல இடங்களில் இந்த தாவரத்தை விளைவிக்கிறார்கள். எனவே மிகப் பெரிய நிறுவனங்கள் விளக்கெண்ணை உற்பத்திகளை பெரிதாக செய்துவருகிறார்கள். சிறிய கிராம தொழிலாளர்கள் விளக்கெண்ணையை வீட்டிலேயே உற்பத்தி செய்கிறார்கள். எல்லா தேவைகளுக்கும் விளக்கெண்ணெய் பயன்படுத்தினால் இதன் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியா பிரேசில் மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் தான் ஆமணக்கு மரங்களை அதிகமாக வளர்க்கிறார்கள். இது 5 முதல் 12 மீட்டர் வரை வளரக்கூடியது. இதிலிருந்து எடுக்கப்படும் ஆமணக்கு கொட்டைகளை விளக்கெண்ணை உற்பத்திக்காக பயன்படுத்துகிறார்கள்.

குழந்தை பாதுகாப்பு

விளக்கெண்ணையை கொண்டு உடலில் எங்கு எது ஏற்பட்டாலும் அதை தடுக்க முடியும். கண், மூக்கு, செவி, வாய் என எல்லா இடத்திலும் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு வயிறு கழியக் கொடுப்பதற்கு விளக்கெண்ணையை பயன்படுத்துவார்கள். இதை எல்லா வயதானவர்களுக்கும் சீதபேதி வரும் சமயங்களில் கொடுக்கலாம்.

மேலும் படிக்க – பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

மலச்சிக்கலைத் தடுக்கும்

மலச்சிக்கல் உள்ளவர்கள் இரவு தூங்குவதற்கு முன்பு சிறிதளவு விளக்கெண்ணையை குடித்துவிட்டு உறங்கினால் அடுத்த நாள் காலை உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏதும் ஏற்படாது.

தோல் பராமரிப்பு

சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற தோல் பிரச்சனை உள்ளவர்கள் விளக்கெண்ணையை அதன்மேல் தடவினால் அவர்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். அதைத் தவிர்த்து உங்கள் சருமத்தை மென்மையாகவும் பொலிவுடனும் மாற்றும்.

வீக்கத்தை குறைக்கும்

எங்கேயாவது அடிபட்டு வீக்கம் ஏற்பட்டால் அதை உடனடியாக குறைப்பதற்கு விளக்கெண்ணையை கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். தசைகள் இருக்கி கொள்வதினால் ஏற்படும் சுளுக்குகளை அகற்றவும் விளக்கெண்ணெய் உதவுகிறது.

கூந்தல் ஆரோக்கியம்

எல்லோருக்கும் கூந்தல் ஆரோக்கியமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டிய எண்ணம் இருக்கிறது. நீங்கள் தினமும் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயில் சிறிதளவு விளக்கெண்ணையை சேர்த்து உங்கள் கூந்தலுக்கு பயன்படுத்தி வந்தால் உங்கள் கூந்தல் உதிர்தல் குறையும். இளநரையை அகற்றி உங்கள் முடியை அடர்த்தியாக வைத்துக்கொள்ளும்.

மேலும் படிக்க – ஆப்பிள் சீடர் வினிகரின் பயன்கள்.!

கண்கள் பாதுகாப்பு

கணினி முன்பு அமர்ந்து வேலை செய்பவர்களாக இருந்தால் இரவு உறங்குவதற்கு முன்பாக சிறுதுளி விளக்கெண்ணையை கண்ணில் விட்டு உறங்குவது நல்லது. ஆனால் கண்கள் மட்டும் உடலுக்கு எடுத்துக்கொள்ளும் விளக்கெண்ணையை தரமானதாக பார்த்து வாங்க வேண்டும்.

பாத வெடிப்புகள்

பித்தம் அதிகரிப்பதால் ஒரு சில பெண்களுக்கு பாத வெடிப்புகள் ஏற்படும். இதனால் வலி மற்றும் எரிச்சல் அதிகமாகும். எனவே இதை உடனடியாக தடுப்பதற்கு இரவு உறங்குவதற்கு முன்பு நம் பாதங்களில் விளக்கெண்ணையை தேய்த்து விட வேண்டும். இதை தொடர்ந்து செய்வதன் மூலமாக உங்கள் பாதங்கள் அழகாகும்.

முன்னோர்கள் விளக்கெண்ணையை அதிகமாக பயன்படுத்துங்கள் என்று நமக்கு வலியுறுத்தி உள்ளார்கள் எனவே அவர்கள் சொல் கேட்டு நம் ஆரோக்கியத்தை அதிகரிக்க தினமும் விளக்கெண்ணையை பயன்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன