கேரட்டில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

  • by
health benefits of carrot

கேரட் முதன்முதலில் ஆப்கானிஸ்தானிலிருந்து தான் இந்தியாவுக்கு வந்தது. சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாக வெளி நாட்டு மக்கள் அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளை அவர்கள் குடிபெயர்ந்த நாடுகளுக்கு கொண்டு சென்றார்கள். அப்படி இந்தியாவுக்குள் நுழைந்தது தான் கேரட். குளிர்ந்த சூழலில் உருவாகும் இந்த கேரட் தமிழகத்தில் ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களில் விளைவிக்கப்படுகிறது. மண்ணுக்கு அடியில் உருவாகும் இந்த இனிப்பு மிக்க கேரட்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

கண்களை பாதுகாக்கும்

கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை உயர்த்த உதவுகிறது. கேரட்டை நாம் பச்சையாக சாப்பிடு வதன் மூலம் இந்த பீட்டா கரோட்டின் உங்களுக்கு முழுமையாக கிடைக்கிறது. இதனால் கண்பார்வை அதிகரிப்பது மட்டுமல்லாமல் கண்களில் புரை ஏற்படுதல் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படும் கண் குறைபாடு நோய்கள் என அனைத்தையும் தவிர்த்து உங்களை பாதுகாக்கிறது.

மேலும் படிக்க – துணிகளை துவைப்பதற்கு முன் இதை பயன்படுத்துங்கள்..!

புற்றுநோயை தடுக்கும்

கேரட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உங்களுக்கும் உண்டாகும் புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் வராமல் இருப்பதற்கு தினமும் கேரட் சாப்பிடுவது அவசியம். இதில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதினால் மற்ற எந்த பிரச்சினைகளும் உங்களுக்கு ஏற்படாது.

இதயத்தின் ஆரோக்கியம்

கேரட்டை நாம் சாப்பிடுவதன் மூலமாக நம் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகள் அனைத்தும் விலகுகிறது. அதைத் தவிர்த்து உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் செய்கிறது. இதயத்தில் உள்ள ரத்த செல்கள் மற்றும் இரத்த நாளங்கள் வலுவடைய செய்து உங்கள் பித்த சுரப்பை அதிகரிக்கிறது.

மூளையின் திறன்

உங்கள் மூளை ஒரு குறிப்பிட்ட வயதுவரை ஆற்றலாக இருக்கும், அதன் பிறகு வயது அதிகரிப்பின் காரணத்தினால் உங்கள் மூளையின் திறன் குறைய வாய்ப்புள்ளது. இதைத் தடுத்து உங்கள் மூளை என்றும் இளமையாகவும், ஆற்றலாக இருப்பதற்கு நாம் கேரட்டை சாப்பிட வேண்டும்.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இயற்கை உணவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே இவர்கள் பீட்டா கரோடின் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள கேரட் எடுத்துக் கொள்வதின் மூலமாக அவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைகிறது.

மேலும் படிக்க – மரங்கள் மற்றும் செடிகள் நம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம்..!

சருமத்தைப் பாதுகாக்கும்

புற ஊதா கதிர் வீச்சினால் ஏற்படும் புற்றுநோயை தடுப்பதற்கு நாம் கேரட்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது தவிர்த்து உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன், எப்போதும் பளபளப்பாக இருப்பதற்கு உதவுகிறது.

உங்கள் பற்கள், ஈறுகள் வலுவாக இருப்பதற்கு கேரட் பயன்படுத்தலாம். இதில் நார்சத்து அதிகமாக இருப்பதால் உங்களின் உணவை மிக எளிதில் ஜீரணமாக்கி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை தடுக்கிறது. ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்ட கேரட்டை பச்சையாகவோ அல்லது வேக வைத்தும் சாப்பிடலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன