வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் “பட்டர் ஃப்ரூடில்” இருக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of butter fruit

வெண்ணைப் பழம் என்பது மத்திய தரை பகுதியில் கிடைக்கக்கூடிய பழமாகும். சமீபத்தில் பிரபலமாகி வரும் இந்த பழம் ருசியில் எல்லோரையும் கவர்ந்துள்ளது. அதற்கு காரணம் அதில் இருக்கும் கொழுப்பு சுவைதான். இதைத் தவிர்த்து இந்த பழத்தில் ஏராளமான சத்துக்கள் மற்றும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தன்மைகளைக் கொண்டுள்ளது.

வெண்ணைப்பழத்தில் இருக்கும் சத்துகள்

வெண்ணெய் பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி6 மற்றும் ஈ அதிகமாக உள்ளது. இதில் அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு சத்து, நார்சத்து, பலவிதமான தாதுக்கள் அதிகளவில் அடங்கியுள்ளதால் உங்கள் உடலில் ஏற்படும் பலவிதமான நோயை இது தடுக்கிறது. எனவே இதன் சிறப்புகளை இப்பதிவில் காணலாம்.

மேலும் படிக்க – ஆவியில் வேகவைத்து சாப்பிடும் உணவுகளில் இருக்கும் ஏராளமான நன்மைகள்..!

இருதய பாதுகாப்பு

வெண்ணைப் பழத்தில் இருக்கும் பி6 மற்றும் ஃபோலிக் அமிலம் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. இதில் இருக்கும் நல்ல கொழுப்புகள் உங்கள் இருதயத்திற்குத் தேவையான சத்துக்களை அளித்து மாரடைப்பை குறைக்கிறது.

உடல் எடை அதிகரிக்க

உடல் மெலிதாக இருப்பவர்கள் தங்கள் உடல் எடையை அதிகரிப்பதற்காக வெண்ணெய் பழத்தை சாப்பிடலாம். இதில் இருக்கும் நல்ல கொழுப்புகள் உங்கள் உடலுக்கு தேவையான கொழுப்புகளை அளித்து உங்கள் எடையை சமநிலையில் வைக்க உதவும்.

வெண்ணைப் பழத்தின் எண்ணெய்

வெண்ணைப் பழத்தில் இயற்கையாகவே உள்ள எண்ணெய் உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை வலுவாக்க உதவுகிறது. இந்த பழத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தான் அழகு சாதன பொருட்களில் கலக்கிறார்கள். இதனால் வெண்ணை எண்ணெய்யை உங்கள் சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலமாக வறண்ட சருமம் அகற்றி உங்கள் சருமம் மிருதுவாக மாற்றும்.

நீரிழிவு நோய்

உங்கள் உடலில் இருக்கும் இரத்தத்தின் அளவை சமநிலையில் வைக்க உதவும் பழம்தான் வெண்ணெய் பழம். உங்கள் உடலுக்கு தேவையான இன்சுலின்கலை அளித்து உங்களை நீரிழிவு நோயில் இருந்து பாதுகாக்கிறது.

மேலும் படிக்க – செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

மூட்டு வலி நிவாரணம்

வெண்ணெய் பழத்தை சாப்பிடுவதன் மூலமாக உங்கள் எலும்புகள் வலுவடைகிறது. அதை தவிர்த்து உங்கள் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குறைத்து உங்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்கிறது. இதில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இரும்புச்சத்து உங்களுக்கு ஏற்படும் வலியைக் குறைக்கிறது.

இத்தகைய சிறப்புமிக்க வெண்ணெய் பழத்தை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் இல்லையெனில் வேகவைத்து சாப்பிடலாம். இதை பழரச கடைகளிலும் பழ ரசமாக குடிக்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன