கருப்பு எள் உடலுக்கு ஆரோக்கியமனதுங்க..!

health benefits of black sesame

சிறுவயதில் தின்பண்டங்கள் என்றாலே நம் கடைக்குச் சென்று முதலில் வாங்கி சாப்பிடுவது எள்ளுருண்டையாகவே இருக்கும். ஆனால் காலப்போக்கில் நாம் பாரம்பரிய இனிப்பு வகைகளை மறந்து, உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் அதாவது உங்கள் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் இனிப்புகளை வாங்கி சாப்பிடுகிறோம். நம் முன்னோர்கள் நமக்காக ஏகப்பட்ட நன்மைகள் நமக்கு செய்து விட்டு சென்று இருந்தாலும் அதை எதையும் நாம் கடைப் பிடிக்காமல், இன்று நாம் ஆரோக்கியமற்ற உணவுகளை பின் தொடர்ந்து வருகிறோம்.

நம் நாவிற்கு ருசியை அதிகரிப்பதற்காக நாம் ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். ஆனால், அதற்கு சற்று இடைவெளிவிட்டு ஆரோக்கியமான உணவுகளை நாம் அவ்வப்போது எடுத்துக்கொள்வது நல்லது. அது போன்ற ஏகப்பட்ட மருத்துவ குணங்களை கொண்ட உணவுதான் கருப்பு எள் இதை தினமும் ஒரு சிறிய உருண்டை சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு ஏற்படும் பல விதமான புற்றுநோய் மற்றும் பல பிரச்சனைகளை இது குணப்படுத்தும்.

மேலும் படிக்க – கருப்பை நீர்க்கட்டிகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்???

பண்டிகை நாட்களில் வீட்டில் செய்யப்படும் முறுக்கு, சீடை, ஓட்டவடை, எள்ளுருண்டை போன்ற உணவுகளில் நம்மை அறியாமலேயே எள்ளை கலந்து வருகிறோம். இவை அனைத்திற்கும் காரணம் முன்னோர்கள் நம் வீட்டு பலகாரங்களில் எள் சேர்த்துக் கொள்வதை பரிந்துரைத்தது தான். இந்த எள்ளில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன, அதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

எள்ளில் அண்ட் ஆக்சைடு, ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற அனைத்தும் எள்ளிற்க்கு வலு சேர்க்கிறது.

தாய்லாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் எள்ளை வைத்து ஆய்வுகள் செய்துள்ளார்கள். இந்த ஆய்வின் முடிவில் அவர்களுக்கு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கொடிய நோயாக கருதப்படும் புற்றுநோயை இது மிக எளிதில் வரவிடாமல் தடுக்கிறது. அதேபோல் புற்று நோய் வந்தவர்கள் எள்ளை உட்கொள்வதினால் அந்த செல்களை அழிக்க உதவுகிறது. பின்பு மூளை செல்களை மறு உற்பத்தி செய்ய உதவுகிறது. அதேபோல் பெண்கள் எள்ளை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. அதேபோல் புற்றுநோய் செல்களை ரத்த நாளங்களில் வளர விடாமலும் இது பார்த்துக் கொள்கிறது.

பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்று நோய் போன்றவைகளையும் இது எதிர்க்கிறது. உங்கள் குடலில் ஏற்படும் கொழுப்புகளை அகற்றி புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது. கூடுதலாக உங்களுக்கு பல நன்மைகளை எள் தருகிறது. முடி உதிர்தல், இளநரை, நியாபக மறதி போன்ற அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. உங்கள் உடம்பில் சேர்ந்து இருக்கும் உடல் கழிவுகளை அனைத்தையும் போக்கி உங்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

மேலும் படிக்க – கோடைக் காலங்களில் உடலில் குளிர்ச்சியாக வைப்பதற்கான வழிகள்..!

இரண்டு வகையான எள் இருக்கும் நிலையில் வெள்ளை எள்ளை விட கருப்பு எள்ளே மிக ஆரோக்கியமானது. தினமும் காலையில் நாம் அருந்தும் ஓட்ஸ் கஞ்சி அல்லது பழைய கஞ்சிகளில் எள்ளை கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது. உங்களுக்கு வேறு ஏதாவது நோய் பாதிப்புகள் இருந்தால் அல்லது வேறு ஏதாவது சிகிச்சைகள் மேற்கொண்டிருந்தார் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு எள்ளை உட்கொள்ள வேண்டும். அதேபோல் கர்ப்பிணி பெண்கள் எள்ளுருண்டையை தவிர்ப்பது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன