வியாதிகளை தீர்க்கும் சக்தி கருஞ்சீரகத்திற்க்கு உண்டு..!

  • by
health benefits of black cumin seeds

நாம் பாரம்பரிய முறையில் சமைப்பதற்கு ஏராளமான சமையல் பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளோம், ஆனால் இப்போது நாம் சமையலுக்கு ஒரு சில பொருட்களைப் பயன்படுத்தி சமைக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இது அனைத்திற்கும் காரணம் மக்கள் இதுபோன்ற தேவையில்லாத பொருட்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அதன் ஏற்றுமதியை மட்டுமே வியாபாரிகள் அதிகரித்து அந்த பொருட்கள் நமக்கு எளிதில் கிடைக்க உதவுகிறார்கள். இது போல் நாம் குறைவாக பயன்படுத்த கூடிய பொருட்களாக இருப்பது தான் கருஞ்சீரகம். நமது முன்னோர்கள் பாரம்பரிய சமையலுக்காக இந்த கருஞ்சீரகத்தை அதிகமாக பயன்படுத்தி வந்தார்கள். இதன் மூலமாக அவர்கள் வலிமையாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வந்தார்கள்.

ஆயுர்வேத உணவு

நமது முன்னோர்களை தொடர்ந்து நம் வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி போன்றவர்கள் இந்த கருஞ்சீரகத்தை அதிகமாக பயன்படுத்தி சமைத்த வந்தார்கள். இதன் மூலமாக அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பல ஆண்டுகளாகவே மிக ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். இதில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள், நார்ச்சத்து, புரதச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் இருப்பதால் இது எல்லா வித பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. இதன் பயனை உலக மக்கள் அறிந்து, இதற்கான ஏற்றுமதியை எல்லா நாடுகளும் அதிகரித்துள்ளார்கள்.

மேலும் படிக்க – ஏப்ரல் 14கிற்கு பிறகு நாம் என்ன செய்ய வேண்டும்..!

நீரிழிவு நோய்

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது தான் நமக்கு நீரிழிவு நோய் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே இதை குழந்தைகளுக்கு சிறுவயது முதல் கொடுப்பதன் மூலமாக அவர்களுக்கு நீரிழிவு நோய் என்று ஒரு பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொள்ள முடியும். அதே போல் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் இதை எடுத்துக் கொள்வதன் மூலமாக அவர்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கும். ஒரு சிலருக்கு ரத்த அழுத்தமும் ஏற்பட்டு அவர்கள் மயக்க நிலைக்கு தள்ளும் சூழல் நிகழ்கிறது. எனவே இவர்கள் கருஞ்சீரகத்தை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வதன் மூலமாக அவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

புற்றுநோயை தடுக்கும்

மேலை நாட்டினர்கள் கருஞ்சீரகத்தை அதிகமாக ஏற்றுமதி செய்வதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது இந்த கருஞ்சீரகம் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிப்பதுதான். இது இரத்தப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கல்லீரல், கர்ப்பப்பை, வாய், பெருங்குடல் போன்ற எல்லா புற்று நோய் உண்டாக்கும் செல்களை முழுமையாக அழிக்கிறது. எனவே இதன் பயனை நன்கு அறிந்து நாமும் இதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க – மே மாதம் 29 ஆம் தேதி என்ன நடக்கப்போகிறது..!

வயிற்றுப் பிரச்சினை

மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு ஏற்படும் அதிக அளவிலான வயிற்று வலியை குறைக்கும் தன்மை இதற்கு உண்டு, அதை தவிர்த்து வயிற்றில் ஏற்படும் புண், குடல் புண் போன்ற அனைத்தையும் குணப்படுத்த கருஞ்சீரகம் பயனாகிறது. பிரசவத்தின்போது பெண்களுக்கு கொடுக்கப்படும் லேகியத்தில் கருஞ்சிரகத்தின் பங்கு அதிகமாக இருக்கும். எனவே பிரசவத்திற்கு பின்னும், முன்னும் பெண்களை வலுவாக வைப்பதற்கும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதற்கும் தினமும் அவர்கள் உணவில் கருஞ்சீரகத்தை அதிகரியுங்கள்.

உங்களுக்கு எந்த ஒரு உடல் பிரச்சினை இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் கூட இந்த கருஞ்சீரகத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலமாக உங்களுக்கு வரவிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் ஆரம்பத்திலேயே தடுக்க முடியும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள் எனவே அந்த செல்வத்தை இது போன்ற உணவுகளின் மூலமாக அதிகரியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன