வாழை இலையின் மகத்தான நன்மைகள்..!

  • by
health benefits of banana leaf

கல்யாணம் மற்றும் அனைத்து சுபகாரியங்களுக்கும் பயன்படுத்துகிற வாழை இலையில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. வாழை மரத்தில் எல்லா பாகங்களும் நமக்கு பயன்தரக்கூடியவை. அத்தகைய பயன்தரும் முழு வாழை மரத்திலிருந்து எடுக்கப்படும் வாழை இலையில் எந்தத் தீங்கும் இல்லாமல் நமது உடல் ஆரோக்கியத்திற்கு முழு உதவியாக இருக்கும்.

கிருமிகளை அகற்றும் வாழைஇலை

வாழை இலையில் உள்ள குளோரோபில் எனும் வேதிப் பொருளால் நமது குடல் மற்றும் வயிற்றில் இருக்கும் புண்கள் குணமடையும். நாம் உண்ணும் உணவில் இருக்கும் கிருமிகளை அகற்றி நமது உணவை எளிதில் செரிமானம் செய்ய உதவும்.

வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தார்கள் என்றால் நாம் அவர்களை கவனிப்பதற்கு வாழையிலையை தான் நாம் முதலில் அவர்களுக்கு உணவுகளை அளிக்க பயன்படுத்துவோம். ஏனென்றால் அவர்கள் ஆரோக்கியத்தின் மீது அக்கறை வைத்துள்ளோம் என்பதை காண்பிப்பதற்காக.

மேலும் படிக்க – கரோனா வைரஸில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?

சரும ஆரோக்கியத்திற்கு வாழை இலை

வாழை இலையில் தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் நம்முடைய தோல் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். அதேபோல் தோல் சார்ந்த நோய்களை எதிர்த்து உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளும். இதை தவிர்த்து உங்கள் கூந்தலை கருமையாக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. அதைத் தவிர்த்து இளம் வயதில் ஏற்படும் நரைகளை தடுக்கிறது.

தீக்காயங்களுக்கு சிறந்த மருந்து

நாம் வாழை இலையின் மேல் சூடான உணவுகளை பரிமாறும் போது அது அந்த சூழ்நிலையை உள்வாங்கி அதை குளிர்ச்சியாக மாற்றுகிறது. அதைத் தவிர்த்து அதன் மூலமாக எந்த வேதியல் மாற்றங்களும் அடையாமல் நம் உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதையேதான் ஒருவர் தீக்காயமடைந்தால் அவர்களின் மேல் வாழை இலையை போர்த்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். இதனால் தீக்காயம் பாதிப்பு அதிகரிக்காமல் உங்கள் உடலை குளிர்ச்சியாக மாற்றும்.

மேலும் படிக்க – வாழையின் வனப்பு சோலைபோல் உடலுக்கு தரும் செழிப்பு..!

கலாச்சாரம் பயன்கள்

நம் பாரம்பரிய முறைகளில் உணவுகளை சமைத்து இது போன்ற கலாச்சார மிக்க வழிகளில் உணவுகளை அருந்துவதன் மூலமாக கிடைக்கும் நன்மைகள் அதிகம். அதுமட்டுமல்லாமல் நாம் எப்போது வாழை இலையில் உணவு சாப்பிடுகிறோமோ அப்போது உணவுகள் மீதியானாலும் அந்த வாழை இலையுடன் நாம் உணவை வெளியே எறிந்து விடுவோம். இதனால் அந்த மீதி உணவுகளை, வாழை இலையுடன் ஆடு மாடு என மற்ற விலங்குகள் உண்டு பயன்பெறும்.

எனவே இன்றும் பல உணவகங்களில் வாழைஇலையின் மூலமாகதான் உணவுகளை பரிமாறுகிறார்கள். அவர்களுக்கு தெரிந்திருக்கும் அதன் பயன்கள் நாம் அறிந்து வாரத்தில் ஒரு முறையாவது வாழை இலையின் மூலமாகவும் உணர்வுகளை அருந்தும் பழக்கங்களை கொள்ள வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன