கற்றாழை ஜெல்லில் இருக்கும் மருத்துவ குணங்கள்.!

  • by
health benefits of aloe vera gel

இயற்கை நமக்கு ஏராளமான மருந்துகளை செடிகள் மற்றும் பழங்கள் மூலமாக அளித்து வருகிறது. அதில் மிகச்சிறந்த மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்களில் முதலில் இருப்பது கற்றாழை. இது எளிதில் குறைந்த பராமரிப்பில் வளரும், மிக ஆரோக்கியமான செடியாகும். இதில் நாம் நினைத்துப் பார்க்காத ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளது. அது என்னவென்று இப்பதிவில் காணலாம்.

கருமையைப் போக்கும்

கற்றாழை ஜெல்லில் இருக்கும் தன்மையானது நம் முகத்தில் இருக்கும் கருமைகளை போக்கும் மற்றும் வெயில் தாக்கத்தினால் நாம் நிறம் கருமையாக மாறும், அப்போது இந்த ஜெல்லைப் பயன்படுத்தி மசாஜ் செய்தால் போதும். உங்கள் சருமம் பளபளவென்று இருக்கும். அதை தவிர்த்து இதை வெளியே செல்லும் முன் முகத்தில் தடவி சென்றுவிட்டால் வெயிலின் தாக்கம் எதும் உங்கள் சருமத்தை அண்டாது.

மேலும் படிக்க – நெல்லிக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

முதுமையை தடுக்கும்

ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே தங்கள் சருமம் முதுமை அடைந்ததைப் போல் காட்சியளிக்கும். இதைத் தடுப்பதற்கு நாம் தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்தில் பயன்படுத்தினால் நம் சருமம் என்றும் இளமையாக பளீரென்று இருக்கும். உங்கள் சருமத்தில் ஏற்படும் முகப்பருக்களையும் உடனடியாக அழைக்கும் தன்மையை இந்த கற்றாழை ஜெல் கொண்டுள்ளது.

சன்ஸ்கிரீன்

கற்றாழையை ஜல்லை நாம் சன்ஸ்கிரீன் ஆகவும் பயன்படுத்தலாம். எனவே அதிகமாக வெயிலில் செல்வதாக இருந்தால் முதலில் இதை சருமம் முழுக்க தடவிக் கொள்ள வேண்டும். இதனால் வெயிலினால் ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளையும் தடுக்கும். நீளமாக நகம் வளர்ப்பவர்களின் விரல்களில் நகங்கள் உடைந்து அவர்களுக்குள் மன உளைச்சல் ஏற்படும். இதை தடுப்பதற்கு நீங்கள் வளர்க்கும் நகத்தின் மேல் கற்றாழை ஜெல்லை தடவி சில மணி நேரம் ஊறவைத்து விடுங்கள். இதனால் உங்கள் நகங்கள் உறுதியாகி உடையாமல் இருக்கும்.

மேலும் படிக்க – தைராய்டு பிரச்சனையை தடுப்பதற்கு வழிகள்..!

கண்கள் மற்றும் உதட்டின் அழகு

கற்றாழை ஜெல்லை நம் சருமத்தில் பயன்படுத்தும் பொழுது நமக்கு பொலிவான சருமம் கிடைக்கும். அதை தவிர்த்து நம் உதடுகள் எப்போதும் மென்மையாகவும் இளஞ்சிவப்பாக இருப்பதற்கு நம் கற்றாழையுடன் சிறிதளவு ஆலிவ் ஆயிலை கலந்து தடவுவதன் மூலம் நாம் நினைத்துப் பார்க்காத அழகான உதடுகள் நமக்கு கிடைக்கும்.

கண்களில் உள்ள கரு வளையங்களை அகற்றுவதற்காக நம் கற்றாழை ஜெல்களை பயன்படுத்தலாம். இதனால் உங்கள் கண்கள் அழகாகவும் எல்லோரையும் கவரும் வண்ணத்தில் இருக்கும்.

எனவே இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட கற்றாழையை ஜெல்லில் நாம் சரியாக பயன்படுத்தி நம் சருமத்தை அழகாக்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன