பாதாம், வாலநட்டில் உணவு குறிப்புகள்.!

health benefits of almond and walnut

நமது உடல் ஆரோக்கியத்திற்கு மற்றும் மூளையின் வளர்ச்சிக்கு நட்ஸ் உணவுகளே சிறந்தது. அதிலும், பாதாம் வால்நட் போன்ற உணவுகள் நாம் தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது உடல் பலமடங்கு ஆரோக்கியமாக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். சில காலங்களுக்கு முன்பு நாம் வேர்க்கடலையை தான் அதிகமாக பயன்படுத்தி இருந்தோம். ஆனால் எப்போது பாதாம் மற்றும் வால்நட் போன்ற நட்ஸ்கள் வந்ததோ அப்போதிலிருந்து வேர்கடலையை தவிர்த்து நாம் இந்த உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். நம் மாற்றத்திற்கு இணையாக இது பல மடங்கு ஆற்றலை நமக்கு தருகிறது.

பாதாம் மற்றும் நட்ஸ் உட்கொள்வதினால் நமது உடல் எடை அதிகரிக்கிறது என்று பலரும் சொல்கிறார்கள் ஆனால் உண்மையில் இவைகள் இரண்டிலும் நல்ல கொழுப்புகள் இருப்பதால் நம் உடல் எடையைச் சமநிலை வைப்பது மட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதிலும் நாம் பாதாமை உட்கொள்வதன் மூலம் நமது கெட்ட கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் வால்நட்டை பொறுத்தவரை உடல் எடையை அதிகரிப்பது இல்லை, அதே சமயத்தில் குறைகிறது என்பதும் தெளிவாக இன்று வரை தெரியவில்லை.

மேலும் படிக்க – தூங்குவதற்கு முன்பாக நாம் செய்ய வேண்டியவை..!

மூளை செயல்பாட்டிற்கு பாதாமை விட வால்நட்டே சிறந்தது. நமது மூளை ஆரோக்கியத்திற்கு கொழுப்புகள் உணவு மிகவும் நல்லது, ஆனால் இது நல்ல கொழுப்பாகவே இருக்க வேண்டும். இவைகளில் நல்ல கொழுப்பு அதிகமாக உள்ளது. எனவே இதை மூளை வளர்ச் சிக்காக நாம் பயன்படுத்தலாம். இதை நாம் குழந்தைகளுக்குக் கூட கொடுக்கலாம்.

வால்நட்டை காட்டிலும் பாதாம் பருப்பில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் அதிகமாக உள்ளது. பாதாம் பருப்பில் 40% ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்ற வைட்டமின் ஏ சத்து உள்ளது. ஆனால் வால்நட்டில் 2% தான் இருக்கிறது.

தினமும் நாம் நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நமது இதயம் ஆரோக்கியம் அடையும். பாதாம்பருப்பை உட்கொள்வதினால் உடம்பில் ஏற்படும் ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் இருந்து நம்மை பாதுகாக்கிறது. அதுவும் வால் நட்ஸில் ஒமேகா3 இருப்பதினால் இதயத்திற்கு வலு சேர்க்கிறது. வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 இரண்டுமே இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்று.

ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் பாதம் மற்றும் வால்நட்டை உட்கொள்வதால் அவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோயில் இருந்து தப்பிக்கலாம். அதேபோல் டயாபடீஸ் நோய் உள்ளவர்கள் இது சாப்பிடுவதன் மூலம் அவர்களின் இன்சுலின் அளவை சமநிலையில் வைத்து அவர்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

மேலும் படிக்க – நமது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க சீஸ் உண்மையில் உதவுகிறதா..!

பாதாம்பருப்பு நமது சருமம் மற்றும் கண்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கின்றன. அதை ஒப்பிடுகையில் வால்நட்டில் 2% தான் நமது சருமம் மற்றும் கண் பாதுகாப்பு உதவுகிறது.

பாதாம் மற்றும் வால்நெட் இரண்டும் மிக முக்கியமான ஒன்று அதிலும் பாதாமில் ஆறு குணங்கள் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் உணவில் இரண்டு சக்திகளும் தேவை என்பதனால் இதை சமநிலையில் உட்கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன