கொள்ளு பயிறை உணவில் சேர்ப்பதனால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள்.!

  • by
health benefits of adding horse seeds in your food

மனிதர்களின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்க்காகவே ஏராளமான பயிர்கள் மற்றும் தானியங்கள் இருக்கின்றன. அதில் பெரும்பாலானோர் பயன்படுத்தாமல் இருப்பது கொள்ளு. இது நம் குதிரைகளுக்கும் மற்ற கால்நடைகளுக்கும் உணவாக அளிக்கிறேம். இதை மனிதர்களும் உண்ணால் அவர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

உடல் எடையை குறைக்கும்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் கொள்ளை உணவாக எடுத்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் கலோரிகளை எரிக்கும் தன்மை உடற்பயிற்சி செய்யும்போது எவ்வளவு கலோரிகள் எரிகிறதோ அதற்கு இணையாக கொள்ளை உட்கொல்வதினால் நமது கலோரிகளை எரிக்கப்படுகிறது. இதில் கார்போஹைட்ரேட் போதுமான அளவு இருப்பதினால் எடை குறைந்தாலும் உங்களின் ஆற்றல் குறையாது.

மேலும் படிக்க – உடல் உறுப்பு தானத்தால் ஏற்படும் 5 நன்மைகள்..!

செரிமானத்தை எளிமையாக்கும்

கொள்ளு லேசான உணவு என்பதினால் நமது செரிமானத்தை எளிதாக்குகிறது. இதை தவிர்த்து மற்ற உணவுகளில் செரிமானத்திற்கு உதவுகிறது. இது அஜீரணக் கோளாறை சரி செய்வது மலச்சிக்கலை தடுக்கிறது.

ஹீமோகுளோபின்

கொள்ளில் கால்சியம், இரும்புச்சத்து, புரதம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருப்பதினால் உங்கள் இமோகுளோபின் கட்டமைப்பிற்கு உதவுகிறது. இதை உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது உங்களை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்துக் கொள்கிறது. எனவே உடல் குறைவு மட்டுமல்லாமல் உங்கள் சருமத்தையும் பாதுகாக்க உதவுகிறது.

ஆற்றலை அதிகரிக்கும்

கொள்ளை நாம் சாப்பிடும் பொழுது நமது அன்றாட நாளுக்குத் தேவையான ஆற்றல் அனைத்தும் கிடைக்கின்றன. அதைத் தவிர்த்து நம்முடைய பசியின்மை அதிகரித்து தேவையற்ற உணவுகளை தவிர்க்க வைக்கிறது. நம் உடல் எடை குறைவதற்கும் கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும். இதனால் நம் ஆற்றல் குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் கொள்ளை சாப்பிடும் போது நமது உடல் எடை குறைந்து ஆற்றலும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க – கோவைக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

சக்கரை நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்கிறது. அதைத்தொடர்ந்து நீரிழிவு நோயினால் உடல் எடை அதிகரிப்பையும் கட்டுப்படுத்துகிறது. சிறுநீரகக் கற்களை அகற்ற உதவுகிறது. அதைத் தவிர்த்து இனப்பெருக்க ஆற்றலையும் அதிகரிக்கச் செய்கிறது. குறைந்த விந்தணுக்கள் கொண்ட ஆண்களுக்கும், மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் குறைக்க உதவுகிறது.

பக்கவிளைவுகள்

கொள்ளில் பக்க விளைவுகள் என்று அதிகமாக இல்லை இருந்தாலும் இதை உண்ணுவதால் நமது உடல் உஷ்ணம் அடையும். எனவே இதை குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் உடல் சூட்டை அதிகரிப்பதற்காக சாப்பிடலாம். மற்ற சமயங்களில் குறைந்த அளவு எடுத்துக் கொண்டால் போதும்.

ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும்  ஆஸ்திரேலியாவில் கொள்ளுவை அதிகமாக விலைய வைக்கிறார்கள். இப்போது ஐரேபியர்களும் இதை உற்பத்தி செய்யத் தொடங்கி உள்ளார்கள். இதனால் கொள்ளின் நன்மை உலகெங்கும் பரவி உள்ளது. எனவே உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க கொள்ளை எப்போதாவது ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன