ஆவாரம் பொடியில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

  • by
health benefits of aavaram poo

ஆவாரம் பூக்கள், இலைகள் மற்றும் அதன் செடி கூட பலவிதமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. நம் ஊரில் சாதாரணமாக வளரும் இந்த ஆவாரம் பூக்களை அமெரிக்கா போன்ற நாடுகளில் தோட்டங்களில் வைத்து வளர்த்து இதன் மருத்துவ பண்புகளை பெற்று வருகிறார்கள். இத்தகைய ஆவாரம் பூவை காய வைத்து பொடியாக்கி நாட்டு மருந்துக்கடைகளில் ஆவாரம் பொடியாக விற்கிறார்கள். அதை பயன்படுதுவதினால் நமக்கு ஏற்படும் நன்மைகளை இப்பதிவில் காணலாம்.

வயிற்றுப் போக்கை குணப்படுத்தும்

ஆவாரம் பொடியை நாம் தினமும் சிறிதளவு சாப்பிடுவதன் மூலமாக நமக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண் மற்றும் மலச்சிக்கல் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்தும்.

மேலும் படிக்க – கத்தரிக்காய் பிரியர்களா நீங்கள்?? முதலில் இதைப் படியுங்கள்.!

உடல் எடையை குறைக்கும்

தினமும் ஆவாரம் பொடியினால் செய்யப்பட்ட டீ குடிக்கும் பொழுது உங்கள் உடலில் உள்ள கொழுப்புகள் விலகி உங்கள் உடல் எடையை குறைக்கும் என இதன் மூலமாக செய்யப்பட்ட ஆய்வில் நிருபணமாகி உள்ளது.

தொற்றுக்களை அகற்றும்

இதில் இருக்கும் தன்மை உங்கள் குடலில் உள்ள புழுக்கள் மற்றும் தொற்றுக்களை. அகற்றும். அதேபோல் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது. ஒரு சில புழுக்கள் குடலில் தங்கி உங்கள் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகிறது, எனவே அதை அழிக்கும் சக்தி கொண்டது தான் இந்த ஆவாரம் பூ பொடி.

ரத்தக் கசிவை தடுக்கும்

உங்கள் உடலுக்குள் அல்லது வெளிப்புறத்தில் ஏற்படும் ரத்தக்கசிவை உடனடியாக நிறுத்தும் ஆற்றல் கொண்டது இந்த ஆவாரம் பூ பொடி. ஒரு சிலருக்கு உடலில் ரத்தக் கசிவுகள் ஏற்படும், இதனால் நம் உடல் நலம் பெரிதளவு வாதிக்கும். இதை தடுப்பதற்கு நாம் ஆவாரம் பொடியை சாப்பிட வேண்டும்.

மேலும் படிக்க – சப்ஜா விதையின் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

கர்ப்ப காலப் பயன்கள்

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த ஆவாரம் பொடியை சிறிதளவு எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இதை குறுகிய அளவு எடுத்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும். தொடர்ந்து எடுப்பதனால் அவர்களின் உடல் நலம் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

உங்கள் குடல் பாதுகாப்பு, உடல் பாதுகாப்பு மற்றும் உடலுறுப்பு பாதுகாப்பு என எல்லா வகையிலும் உதவும் இந்த ஆவாரம்பூவை நாம் முடிந்தவரை குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். இதை அதிகமாக எடுப்பதன் மூலமாக உங்களின் கல்லீரல், மண்ணீரல் மற்றும் பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சிறிதளவு, வாரத்திற்கு ஒரு முறை இதை எடுத்துக் கொள்வது சிறந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன