உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் ஒரு டம்ளர் பூண்டு டி.!

health benefits and advantages of drinking garlic tea

ஆரோக்கியமாக வாழ்வதற்காகவே நாம் உணவு முறைகளை மாற்றிக் கொண்டு வருகிறோம். இது அனைத்தும் நாம் சுறுசுறுப்பாக இருப்பதற்காக செய்து வருகிறோம். இதனுடன் சேர்த்து தினமும் காலையில் ஒரு டம்ளர் பூண்டு டீயை குடித்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு நாம் மிக ஆரோக்கியமாக வாழ முடியும்.

பூண்டில் கொழுப்புகள் குறைவாகவும் அதே சமயத்தில் செலினியம், மாங்கனீசு நார்சத்து, வைட்டமின் சி மற்றும் பி6 இதில் அதிகமாக இருக்கிறது. இதனால் நம் உணவில்பூண்டு டீயை எடுத்துக் கொள்ளும் பொழுது இதன் சக்திகளும் நமக்குள் வந்தடைகிறது.

மேலும் படிக்க – உடற்பயிற்சிகள் இல்லாமல் ஒரே இடத்தில் வேலை செய்கிறீர்களா!

சாதாரணமாகவே பூண்டை நாம் உட்கொள்ளும் போது ரத்தத்தில் வேகத்தை குறைக்கும் கொழுப்புகளை இது அகற்றிவிடுகிறது இதில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் சக்திகளும் இருக்கிறது. இருதயத்தை பாதிக்கும் கொழுப்புகளை இது அழிக்கிறது.

இது கொழுப்பை அழித்து நமது எடை குறைய உதவுகிறது. நம் உடலில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினையையும் தீர்த்து வைக்கிறது. உதரணத்திற்கு சளி, ஜலதோஷம், நெஞ்சுச்சளி, இருமல் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளுக்கு இந்த பூண்டு டி ஒரு தீர்வாக உள்ளது.

பூண்டு டீயை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நமது சருமம் முதுமை ஆவதை தடுத்து இளமையாக வைத்துக் கொள்கிறது. இதுமட்டுமல்லாமல் புற்று நோய் உண்டாக்கும் செல்களை அழிக்கிறது. கல்லீரல் மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்க இது உதவுகிறது. இத்தனை அற்புதங்கள் உள்ள இந்தப் பூண்டு டீயை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க – தூங்குவதற்கான எண்ணங்கள் மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக உள்ளதா..!

பூண்டை சிறிதாக நறுக்கிக் கொண்டு பிறகு அதை நன்கு கொதிக்க வைக்க வேண்டும் பிறகு அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தினமும் அருந்தி வந்தால் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை சேர்க்க உதவும்.

நீங்கள் மற்ற ஏதாவது பிரச்சனைக்காக தினமும் மருந்துகளை எடுப்பவராக இருந்தால் இந்த பூண்டு டீயை அறுந்தலாமா.? வேண்டாமா.? என்று உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு இதை அருந்துங்கள் மற்ற அனைவருக்கும் இது மிக ஆரோக்கியமான ஒரு காலை தேநீர் ஆக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன