வைரஸ் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும் துளசி இலை.!

  • by
Health Benefit Of Tulsi

நாம் கோவிலுக்குச் சென்றால் அங்கு தீர்த்தமாக துளசியை தருவார்கள் அதைத் தவிர்த்து நாம் பல இடங்களில் பார்க்கக்கூடிய ஒரு இலைதான் துளசி இலை. துளசியில் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன இதை சாப்பிடுவதன் மூலம் நமக்கு ஏற்பட்டிருக்கும் மார்புச் சளி போன்றவைகள் அடியோடு தீரும். நம் உடம்பில் ஏற்பட்டுள்ள உடல் சூட்டை தடுத்து குளிர்ச்சி அடைய வைக்கும். துளசி இலையை நன்கு உலர வைத்து அதை பொடியாக்கி கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடுவதால் உடம்பில் இருக்கும் விஷத்தன்மை வெளியேறும். இதை பாலில் கலந்து கொஞ்சம் தேன் சேர்த்து சாப்பிட்டால், எந்த ஒரு கொடிய காச்சலாக இருந்தாலும் உடனடியாக குணமடையும். இத்தகைய ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட துளசியை நாம் வேறு என்னென்ன பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம் என்பதை காணலாம்.

எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும்

தினமும் ஒரு துளசி இலையை சாப்பிடுவதன் மூலமாக நமக்கு குடல் வயிறு மற்றும் வாய் சம்பந்தமான பிரச்சினைகள் எதுவும் உங்கள் வாழ்நாள் முழுக்க வராது. ஜீரணசக்தியை உண்டாக்குவது என்றால் உங்கள் சுவாசத்தை நன்றாக வைத்துக் கொள்ளும் இதனால் துர்நாற்றம் வீசாமல் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.

துளசி இலை சாப்பிடுவதினால் நமக்கு நரம்புக் கோளாறு ஞாபகச் சக்தி இன்மை காய்ச்சல் சளி இருமல் தொண்டை வலி நீரிழிவு நோய் இருதய நோய் ஆஸ்துமா சிறுநீரகக் கற்கள் போன்ற பிரச்சினைகள் அனைத்தையும் தடுக்கும். இந்தப் பிரச்சனைகள் உள்ளவர்களை குணப்படுத்தவும் உதவும்.

மேலும் படிக்க – தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்.!

மூலம் மற்றும் வாயு பிரச்சனைகளுக்கு 

துளசி சாறை நாம் கொஞ்சம் குடித்தால் நமக்கு இருக்கும் வாய்வு பிரச்சனைகள் சீக்கிரமாக குணமடையும். துளசி சார் என்னை தொடர்ந்து ஐந்து நாட்கள் குடிப்பதன் மூலமாக நமது மூலநோய் பரிபூரணமாக குணமடையும். உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைத்து நீரிழிவு நோயிலிருந்து உங்களை முழுமையாக பாதுகாக்கிறது.

சரும ஆரோக்கியத்திற்கு 

பிறகு துளசி சாற்றில் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு கலந்து நம் சருமத்தில் ஏற்பட்டுள்ள சொறி சிரங்குகளில் தடவினால் சில மாதங்களிலேயே எந்த தடையும் இல்லாமல் பரிபூரணமாக குணமடையும். 

மேலும் படிக்க – மஞ்சள் பாலில் இத்தனை நன்மைகளா ?

துளசி தீர்த்தம்

கோவில்களில் செய்யப்படும் துளசி தீர்த்தத்தைப் போல் வீட்டிலேயே நீங்கள் தயார் செய்யலாம் இதை தினமும் ஒரு குடிப்பதன் மூலமாக பல பிரச்சினைகளில் இருந்து உங்களை பாதுகாக்க முடியும் அதை தவிர்த்து டெங்கு மலேரியா போன்ற கொசுக்கள் மூலமாக பரவும் நோய்கள் உங்களை அண்டாது. துளசி மஞ்சள் தேன் இது மூன்றும் தனித்தனி மருத்துவ குணங்களை கொண்டுள்ளது எனவே இம்மூன்றையும் ஒன்றாக தண்ணீரில் சேர்த்து அருந்தி வந்தால் சளி ஜலதோஷம் என எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும்.

துளசி தேநீர்

துளசியை நாம் தே நீராகவும் அல்லது சாறாக மாற்றி அருந்தலாம். துளசி இலையுடன் வெல்லம் தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தேநீராக குடிப்பதன் மூலமாக உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கொடிய காட்சிகள் விரைவில் குணமடையும் அதேபோல், இதன் சாறை அருந்தும் போது மாலைக் கண் நோய்கள் விலகும்.

மேலும் படிக்க – குப்பை இலைகளில் இருக்கும் நன்மைகள்..!

உடல் சூட்டைத் தணிக்கும்

சந்தனப் பொடி மற்றும் துளசியை ஒன்றாக சேர்த்து குழைத்து உடல் சூடு அதிகரிக்கும் சமயங்களில் தலை தேவைப்பட்டால் உடம்புகளில் பத்து போட வேண்டும் இதனால் சூடு தணிந்து காய்ச்சல் குணமடையும்.

இத்தகைய மகத்தான துளசியை கோவில்களில் அதிகமாக வைத்துள்ளார்கள். எனவே எளிதில் கிடைக்கும் இந்த செடியை உங்கள் வீட்டில் வளர்ப்பது நல்லது. அதேபோல் இதனால் கிடைக்கும் பயன்களை தினமும் அனுபவிக்க தொடங்குங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன