ராஜ்மா சாப்பிட்டி வந்தால் ராஜா போல் தேகம் ஆரோக்கியம் பெறும்..!

health-benefit-of-rajma

வட இந்தியர்கள் அதிகமாக உணவுகளில் பயன்படுத்தும் உணவுப் பொருள்தான் ராஜ்மா. இது பார்ப்பதற்கு நம்முடைய கிட்னியை போல் இருக்கும். இதை சிவப்பு கிட்னி பீன்ஸ் என்றே அழைப்பார்கள். இந்த ராஜ் மாவில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன, அதனால் நமது உடல் ஆரோக்கியம் எவ்வாறெல்லாம் மாற்றமடைகிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.

மெக்னீசியம் அதிகம் உள்ள ராஜ்மா

ராஜ்மாவில் மெக்னீசியம் அதிகமாக இருப்பதினால் அது உங்கள் எலும்பு மற்றும் பற்களை வலுவடையச் செய்கிறது. அதை தவிர்த்து இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்களின் ரத்த அளவையும் கட்டுக்குள் கொண்டுவந்து நீரிழிவு தொல்லையிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.

மேலும் படிக்க – மெல்லிய இசையில் உடலும் மனதும் மேம்படும்

குறைவான கொழுப்புகள்

இது உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவை குறைத்து ரத்த போக்கை சீராக்குகிறது. இதனால், இதய கோளாறுகள் மற்றும் ரத்தக் குழாய் அடைப்புகள் போன்ற பிரச்சினைகளில் இருந்து உங்களை விடுவிக்கிறது. இதில் பைபர் சத்துக்கள் அதிகமாக இருப்பதினால் உங்களின் கல் மற்றும் மண்ணீரலை சுத்தமாக வைத்துக் கொள்கிறது.

சரும பாதுகாப்பிற்கு ராஜ்மா

உங்கள் உடலுக்குத் தேவையான நீர் சக்தியை ராஜ்மா அளிக்கிறது. இதனால், உங்கள் சருமம் எப்போதும் வறட்சியடையாமல் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும். அதைத் தவிர்த்து உங்கள் ஹார்மோன்களிலும் இது போன்ற பாதிப்புகள் ஏதும் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு உங்களை பார்த்துக் கொள்கிறது. இதனால் உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் சருமங்கள் கூட பாதுகாப்பாக இருக்கும்.

மேலும் படிக்க – புத்துணர்ச்சி பொங்கும் ஆரோக்கியம் அதுவே ரோஜா

ரத்த அழுத்தத்தை குறைக்கும் ராஜ்மா

ஒருநாளைக்கு நம் உடலுக்குத் தேவையான பொட்டாசியத்தை இந்த ராஜ்மா தருகிறது. இதனால் நமது உடலில் ரத்தங்கள் சீரான நிலையில் வெளியிடுவதினால் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏதும் ஏற்படாமல் உங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் அவர்களின் ரத்த அளவை சமநிலைப்படுத்துவதற்காக அதிகளவிலான மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இந்த மாத்திரைகள் நாளடைவில் உங்கள் சிறுநீரகத்தை பாதித்து செய்யும். இதை தவிர்ப்பதற்கு பொட்டாசியம் அதிகம் உள்ள பழங்களை அல்லது ராஜ்மா போன்ற உணவுகளை உண்பது நல்லது.

உடல் பருமனை தடுக்கிறது

ராஜ் மாவில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதினால் உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறது. இதனால் உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் அனைத்தும் வெளியேறி என்றும் ஒல்லியாக இருக்கலாம். அதேபோல் ஒரு கப் ராஜ்மாவை சாப்பிடுவதனால் நமக்கு பசி எடுக்கும் தன்மை குறைந்துவிடும். இதனால் நீண்ட மணி நேரம் நாம் வேறு எந்த உணவையும் உண்ணாமல் ஆரோக்கியமாக இருப்போம்.

மேலும் படிக்க – உங்க குழந்தைங்க அதிகமாக ஸ்மார்ட் போன் பயன்ப்படுத்திகிறார்களா?

கண்களுக்கு சிறந்தது

ராஜ்மாவில் இருக்கும் வைட்டமின் ஏ சத்துக்கள் உங்கள் கண்களின் பலத்தை அதிகரிக்கிறது. இதனால் பார்வைக் குறைபாடு, பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

இதில் கொழுப்புச் சத்துக்களும் அதிகமாக இருப்பதினால் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல்கள் மற்றும் உடல் வலிமையை அதிகரிக்க ராஜ்மா உதவுகிறது. எனவே இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பதை உணர்ந்து உங்கள் மளிகை பொருள்களை வாங்கும் லிஸ்டில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன