உளுந்து சாப்பிட்டால் ஊரை வெல்லும் பலசாலியாகலாம்

  • by

நமது வீட்டில் தினமும் இடலி  தோசை என ஆளாய் பறக்கின்றோம் அதில் கலந்திருக்கும் உளுந்துதான் நமது உணவை ஆற்றல்வாய்ந்ததாக உருவாக்குகின்றது. 

களி அந்தகாலத்தில் மிகவும் பிரசித்தம் வாரம் முறை அரிசி  வடித்த பழைய கஞ்சி, சின்ன வெங்காயம் சாப்பிட்டு வந்த தலைமுறைகளில்  நோய் நொடி எதுவும் இல்லை. ஆனால் காலப் போக்கில் உணவு முறைகள் மாறும் பொழுது அதற்கேற்ப ஆற்றலும் மாறும். 

மேலும் படிக்க: அழகையும் ஆரோக்கியத்தையும் பராமரிக்க வெந்தயம் போதுமே..!

இட்லி,  தோசையில்  ராகி களி, கம்மங்கூலுக்கு  இருக்கும் சக்தி இல்லை என்ற குறையை போக்கவே உளுந்து கலக்கப்பட்டது. அரிசி மாவில் உளுந்து கலந்து சுடும் இட்லி தோசையானது சுவையே அலாதியானது ஆகும்.  உளுந்து அந்த கால கருப்பு உளுந்து சேர்க்கப்பட்டது அவற்றில் பல சத்துக்கள் உள்ளன. 

உளுந்து

வெள்ளுழுந்து: 

வீட்டில் தீபாவளி, பொங்கல், ஆடி அமாவாசை போன்ற  விஷேச தினங்களில் தான் இட்லி தோசை எல்லாம் செய்து சாப்பிடுவது வழக்கமாக இருந்தது.  

 இன்று அனைவருக்கும் டக்குனு  சமைக்க வரும் உணவு என்றால் அது தோசை மற்றும் இடலி ஆகும். இன்றோ ஹோட்டல் பெருகிவிட்ட சூழ்நிலையில் நாம் நினைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் எதையும் சாப்பிட முடியும். 

உளுந்து பயன்கள்

உடல் வலு பெற உளுந்து வேண்டும்:

கடும் நோய் குணமாக  , உடல் பலவீனமானவர்களுக்கும் உளுந்து  கஞ்சி சாப்பிட்டு வரலாம்.

மேலும் படிக்க: காளானில் உள்ளது கட்டுக்கடங்கா சத்துக்கள்

உளுந்து உணவுகள்:

 உளுந்து உணவுகளின் அவசியம்  தேவையானது ஆகும். உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ, அரிசியுடன் கலந்தோ உண்டு வந்தால்  உடல் வலிமை பெறும். உடலின் எலும்பு, தசை, நரம்புகள் ஊட்டமடைந்து உடல் ஆற்றலுடன் செயல்படும். 

உடல் சூடு தணிக்கும் உளுந்து:

உடலின் பாதிக்கு மேற்பட்ட நோய்க்கு உடல் சூடு காரணமாக இருப்பதால் அதனை தணிக்கும் அருமருந்து உளுந்து ஆகும்.  அதிக வேலை கடின இலக்கு, பயணங்கள்  போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும். 

ஓய்வில்லா உழைப்பவர்கள் நீங்கள் உங்களுக்கு உற்ற நண்பன் உளுந்து உணவாகும். இது மேலும் தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு  போக்கும். 

உளுந்துடன் சுக்கு, வெந்தயம், தவிடு நீக்காத பச்சரிசியுடன் உளுந்து சேர்த்து, பனை வெல்லம் கலந்து களி செய்து சாப்பிடால் உடல் சூடு குறையும். 

உளுந்து பயன்கள்

உடலில் தாது விருத்தியாக்கும்:

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். உளுந்தை காய வைத்து பொடி செய்து நெய் காய்ச்சி ஊற்றி உருண்டை பிடித்து வைத்து தினமும் சாப்பிட்டு வர உடல் பலம் பெறும். 

உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.

விழுந்தால் உளுந்து உண்:

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும். அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் வாரம் ஒரு முறையாவது உளுந்து கஞ்சியோ களியோ சாப்பிட்டு வரலாம். .

குழந்தைகளுக்கு வரம்:

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பதால் ஆரோக்யம் ஆவார்கள்.  இது குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும். இடுப்பு எலும்பை பலமாக்கும். 

மேலும் படிக்க: முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன