வாழ்வை ஒளிர செய்யலாம் துளசியின் மருத்துவம்

  • by

ஆற்றல் வாய்ந்த துளசி: 

 தினமும்  துளசி இலைகளைத் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் வாழ்நாள் முழுவதும் வராது  ஆகையால் நமது வீட்டில் அந்த காலத்தில் துளசி வணங்கும் முறை இருந்தது. . ஜீரண சக்தியும் புத்துணர்ச்சியும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தைப் போக்கும் ஆற்றல் வாய்ந்தது ஆகும். 

கிருமி நாசினி 

 உடலில் ஆரோக்ய நிவாரணி  ஆகும். இது உடலுக்கான கிருமிநாசினியாக இருக்கின்றது.  தினமும் துளசியை சாப்பிட்டு வருதல் சிறப்பு ஆகும். . துளசி இலையைப்போட்டு ஊறவைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் நம்மை  தாக்காது. 

 கோடைக்காலத்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும் என்பது முன்னோர்கள் பயன்படுத்தி தெரிவித்த் உண்மை ஆகும். 

துளசி

எலுமிச்சையும் துளசி : 

   இது ஆன்மீகம் மற்றும் நோய் தீர்க்கும்  நிவாரணி ஆகு,. துளிசி இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு மைபோல் அரைத்து அந்த விழுதைத் தோலில் தடவி வந்தால் பல நாட்களாக இருக்கும் படை, சொறி, சிரங்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். 

 துளசி சிறுநீர்க்கோளாறு உள்ளவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு சாப்பிட்டு  வருவது சிறப்பு ஆகும். துளசி சாப்பிட்டு வரும்பொழுது. கூடவே உடலுக்குத் தேவையான அளவுக்கு தண்ணீர் பருகுகிற பிரச்னையும்  குறையும். 

 துளசியானது ஆற்றல் வாய்ந்த ஒன்றாகும். இது  காய்சலைத் தடுக்கக்கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில் கண்டறிந்து பயன்படுத்தியுள்ளனர். உடலில் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தக்கூடிய வல்லமை துளசிக்கு உண்டு என்பதை நாம்  உணர வேண்டும். 

துளசியானது  உடலில் ஏற்படும் நோய்களை போக்கும் ஆற்றல்  வாய்ந்தது உடல் மனம் இரண்டையும் ஒரு சேர்த்து செயல்படுதலில் இது முக்கியப் பங்கு வகிக்கின்றது. இதனை  நாம் எவ்வாறு எடுத்துச் செல்கின்றோம் என்பதில்தான் அனைத்தும் உள்ளது. 

மேலும் படிக்க : உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் ஓமவல்லி.!

உடலில் ஏற்படும் கொப்புளங்களுக்குத் துளசி இலையை நீர்விட்டு அரைத்துப் பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும் இதில் உள்ள ஆண்டி ஏஜெண்ட் அனைத்து சிக்கல்களையும் சரி செய்யும்.  சரும நோய்களுக்கு துளசிச்சாறு ஒரு சிறந்த நிவாரணி இதனை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பூசிவருதல் நலம் பயக்கும். 

துளசி தொடர்ந்து பயன்படுத்தி வரும் பொழுது  வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்க முடியும். 

துளசிச்சாறு:

துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சம அளவு எலுமிச்சைச்சாறு கலந்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்துக் குளித்துவர பேன் பொடுகுத் தொல்லை  ஒழியும் அத்துடன் துளசி இலையுடன் ஓமவல்லி இலை இதுவும் ஆற்றல் வாய்ந்தது ஆகும். 

துளசி இலையை இடித்துப் பிழிந்து அந்தச் சாறுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். துளசியை நாம் எவ்வாறு உடலில்   பூசி வர வேண்டும் என்பது அவசியம் ஆகும். 

துளசி

வெட்டுக் காயங்களுக்குத் துளசி இலைச்சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும்.  துளசியில் தொற்றுகளை அழிக்ககூடிய ஆற்றல் உணடு என்பது ஆகும்.

வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களைக் கட்டி வைத்தாலும் வீட்டைச் சுற்றி துளசிச் செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது. ஆகவே துளசி  இலை, ஓம வல்லி இலை மற்றும் நொச்சி இலை, வேப்பிலை ஆகியவற்றை சேர்க்து நன்றாக அரைத்து அதனுடன் சுத்தமான நாட்டு பசு மாட்டுச் சாணம் சேர்த்து அதனை உருளை வடிவத்தில் சிறிது துண்டுகளாக்கி வெய்யிலில் காய வைக்க வேண்டும். வெய்யிலில் காய வைத்த துண்டுகளை நாம் கொசு மற்றும் பூச்சி ஒழிப்பு சுருளாகப் பயன்படுத்தலாம்,  

துளசி இலை ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மைப் பலநோய்களிலிருந்து காக்கிறது. உடலில் ஆன்ம சக்தியானது பெருக துளசி முக்கியப் பங்கு வகிக்கின்றது. 

சுத்தமான மண்பானைத் தண்ணீரில் கொஞ்சம் துளசி இலைகளை வைத்து அந்தத் தண்ணீரை அடிக்கடி குடித்து வந்தால் எந்த நோயும் ஏற்படாது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்க தினமும் ஒரு கைப்பிடி அரிசி போதுமானது ஆகும்.

மேலும் படிக்க: குப்பை இலைகளில் இருக்கும் நன்மைகள்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன