கற்பூரவல்லி இலையில் இருக்கும் மூலிகை குணம்

  • by

 ஓமவல்லி இலை மற்றும் கற்பூரவல்லி என அழைப்பார்கள். இது இயற்கையிலேயே   நல்ல மனம் கொண்டது ஆகும். மருத்துவ குணங்கள் கொண்ட ஓமவல்லி இலை குறிந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானது ஆகும். 

கற்பூரவல்லி ஒரு அற்புதம்: 

கற்பூரவல்லி ஒரு அற்புதமான மூலிகையாகும். இது ஆன்மீகத்தில் செல்வ ஆக்ஷ்ரண சக்தியாகவும் பலர் பயன்படுத்துகின்றனர்.    கற்பூரவல்லி இலையானது உடலில் ஏற்படும் சளித் தொல்லையை தீர்க்கும். இந்த அற்புத மூலீகையானது இந்தியா மற்றும் இலங்கையில் மட்டும்தான் காணப்படுகின்றனர். 

கற்பூரவல்லி

 ஓமவல்லி அற்புதம்: 

ஓமவ்ல்லி இலையானது அற்புத மருத்துவ குணங்களை கொண்டது இது தன்னில் சிறப்பான பணிகளை செய்கின்றது.  இது வளர 8 மாதம் வரை பிடிக்கும். 4 மாதங்களுள் தளிர் விட்டு செடியாகும். உடலில் ஏற்படும் வரட்டு இருமல்,  ஜலதோசத்திற்கு ஆவி பிடிக்கும் ஒன்றாக இது இருக்கும்.  

காய்ச்சல் காலத்தில் நாம் இலைச்சாறு நல்லெண்ணெய், சர்க்கரை  ஆகியவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடலாம். இது உடலில் ஏற்படும் அதிக  வெப்பத்தை குறைக்கின்றது. 

ஓமவல்லி இலையை தேனில் கலந்து குழந்தைகளுக்கு ஏற்படும் மார்பு சளி தொல்லையை போக்கச் செய்யலாம்.  குழந்தைகளின் அஜீரண் சிக்கலை தீர்ப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கின்றது.  

மருத்துவர்களின் உற்ற  துணை எனில் அதில் இதனை சேர்க்கலாம். நரம்புகளுக்கு சத்து அளிக்கும் மருந்தாகும்.  மனதில் ஏற்படும் சிக்கலை தீர்ப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கின்றது. சிறுநீர் சார்ந்த சிக்கலை தீர்க்க ஓமவல்லி உதவிகரமாக இருக்கும்.  இரத்ததை சுத்தப்படுத்தும் அரும்பெரும் மருந்தாக இருக்கின்றது.  

மேலும் படிக்க:ஆற்றல் தரும் ஆப்பிள்கள் சாப்பிட்டு வாங்க

குழந்தைகளுக்கு குடிக்க  வைக்க மற்றும் அவர்களுக்கு  இருக்கும் சிக்கல்களை இது தீர்க்க உதவும் ஒரு காரணியாக உள்ளது.  குழந்தைகள் குடிக்கும் நீரில் இந்த ஓமவல்லி இலையை நன்றாக அலசி போட்டு 1 மணி நேரம் கழித்து எடுத்துவிடலாம். 

கற்பூரவல்லி

உடலில் ஏற்படும் சூட்டை குறைத்து தலைக்கு இதம் தருவதுடன் ஓமவல்லி இலையை கொண்டு செய்யப்படும் பஜ்ஜியானது  உடலுக்கு மிகவும் நல்லதாகும். உடலில் ஏற்பட்டுள்ள தழும்பை போக்க ஓமவல்லி இலையானது பயன்படுகின்றது. இதனை கொண்டு உடலில் ஏற்படும்  பருக்கள், கட்டி ஆகிய அனைத்தும் நாம் சரி செய்ய முடியும். 

ஓமவல்லி இலைச்  சாற்றை எடுத்து அதனை நன்கு காய்ச்சி சாறெடுத்து நாம் குடித்து வந்தால்   புகைப்பிடிப்போருக்குள் நுரையீரல் சுத்தமாகும். விசப்பூச்சிகள் மற்றும் அனைத்தும் அண்டாமல்  இருக்க இது உதவிகரமாக இருக்கும். உங்கள் சுற்றுப்புரத்தில் விசப்பூச்சிகள் மற்றும் கொசுக்களின்  வருகையை தடுப்பதில் ஓமவல்லி இலையானது முக்கியப் பங்கு வகிக்கின்றது. 

கற்பூரவல்லி

கற்பூரவல்லி இலை கைம்ருந்து:

கற்பூரவல்லி இலையுடன், தூதுவளை, வல்லாரை கீரை ஆகியவற்றை கொண்டு நன்கு காய்ச்சி பணங்கற்கண்டுடன் குடித்தோமேயானால் நுரையீரல் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்து ஓடோடிவிடும்.கற்பூரவல்லி இலைக்கென ஒரு மருத்துவ மணமாந்து உண்டு, அந்த இலைகளில் கொழுப்பு, சோடியம், பொட்டாசியம் கார்போஹைட்ரேட் புரோட்டின் போன்றவை அடங்கியுள்ளது இதனை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வருவது சிறப்பானது ஆகும்.

மேலும் படிக்க: கரும்பு சாப்பிடுவதினால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன