புதினா இலை சாப்பிட்டு வந்தால் புத்துணர்ச்சியுடன் வாழலாம்

  • by

புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. இது உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது ஆகும். இதனை நாம் முழுவதுமாக எடுத்து  கொள்ளலாம். உடலில் உள்ள சத்துக்களை காக்கும். நாம் எந்தளவிற்கு எடுத்துக் கொள்கின்றோமோ அந்தளவிற்கு நன்மை பெறலாம். 

புதினாவில் உள்ள சத்துக்கள் உடல் சூட்டை தணிக்கும் மேலும் இது உள் நாக்கு வளர்த்தல்  பிரச்சனையை போக்குகின்றது. இது உடலுக்கு வெப்பம் தரும் நோய்களை தடுக்கின்றது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும்.

மேலும் படிக்க: நெல்லிக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

ஆஸ்துமா :

புதினா சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த  முடியும். இது புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும். பனா உடலுக்கு வெப்பம் தருவதால் மூல நோய்கள் உள்ளவர்கள் இக்கீரையை தவிர்க்கலாம். 

புதினா இலையானது ஆரோக்கியம் நிறைந்த உணவாகும். புதின இலையின் மகத்துவத்தை நாம் அனைவரும் அறிந்திருத்தல் நல்லது ஆகும். இது உடலில்  ஏற்படும் பாதிப்புகளை நாம் சரி செய்கின்றது. 

உடலில்  தொண்டைப்புண் இருந்தால்  போக்கும். புதினா கீரையை நாம்  வாரம் இரு முறை சாப்பிட்டு வர வேண்டும்.  தொண்டையில் ஏதாவது சிக்கல் ஏற்படும் பொழுது  குணப்படுத்த இந்த பற்றைப் போட்டு வருதல் நலம் பயக்கும். 

புதினா கீரையை நாம் தினமும் எடுத்து சாப்பிட்டு வந்தால் அதனை நாம் உடலில் ஏற்படும்   பொருமல் சிக்கல் நீங்கும். உடலில் உள்ள அழுக்குகளை நீக்கும். மணமூட்டியாக இது திகழுகின்றது. வாசனையை அதிகரிக்கின்றது. 

புதினா இலையின் மகத்துவமானது அனைவருக்கும் உடல்  ஆரோக்கியத்தை அதிகரித்து தருகின்றது. இது சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. பிரியாணி சமைக்கும் பொழுது புதினாவை சுவை மற்றும் மணம் கொடுக்கும் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். 

மேலும் படிக்கும்: மன அழுத்தத்தை குறைப்பதற்காக நாம் பின்பற்ற வேண்டிய வழிகள்.!

உடலில் ரோகம் போக்கும்:

நமது உடலில்  உருவாகும் வயிற்றுப் புழுக்களை  ஒழித்து வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. சளி, கபம் போன்ற சிக்கல்களை  இது தீர்க்கும் ஆற்றல் வாய்ந்த ஒன்று என கூறலாம். 

பழச்சாறு பரிமாறும் பொழுது அதன் மேல் ஓரிரு புதினா இலைகளைத் தூவி பரிமாறலாம். நாம் குடிக்கும் நீரிலும் கூட போட்டு வைக்கலாம். இதனால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

 மனித உடலில் ஏற்படும் பித்த பாத எரிச்சலுக்கு, ஒரு கைப்பிடி புதினாவுடன் கல் உப்பு கலந்து அதனை வறுத்து சூட்டுடன் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி எரிச்சல் உண்டான பாதப் பகுதியில்  ஒத்தடம் ஒற்றி எடுக்க எரிச்சலானது குறைகின்றது. 

புதினாவுடன் எலுமிச்சை கலந்து   குடிக்கும் பொழுது உடல் ஆரோக்கியமானது பெருகும்.   புதினாவானது  உடலில் ஏற்படும் தலைவலி நரம்பு வலி, கீழ் வாதம் ஆகிய  வலிகளை போக்குகின்றது. 


மேலும் படிக்க: ஜப்பானிய குடிநீர் மருத்துவம்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன