ஒயிட் ஒயினில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா..?

health and medicinal benefits of drinking white wine

மது அருந்தினால் அது ஆரோக்கியத்திற்கு தீங்கானது என்று நமது அரசாங்கமே அவ்வப்போது சொல்லி வருகிறது. ஆனால் அதை நாம் அதிகமாக உட்கொண்டால் தான் நமக்கு தீங்கு என்பது பலருக்கும் புரிவதில்லை. அதுவே சிறிதளவில் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எடுத்துக் கொண்டால் அது மருந்தாகவும் பயன்படுகிறது. அப்படிப்பட்ட மது வகையை சேர்ந்தது தான் ஒயின். இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளது.

ஒயினில் இரண்டு வகைகள் உள்ளது ரெட் ஒயின் மற்றும் ஒயிட் ஒயின். இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்துவது ரெட் ஒயின்தான், இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்று அவர்கள் நன்கு அறிந்து இதை கொண்டாட்டங்களில் மற்றும் பண்டிகை நாட்களில் சிறிதாக குடும்பத்துடன் சேர்ந்து அருந்தி வருகிறார்கள். ஆனால் மேலை நாடுகளில் அதிகமாக ஒயிட் ஒயினை பயன்படுத்துகிறார்கள். இதில் அந்த அளவுக்கு ஆரோக்கியமான குணங்கள் உள்ளது.

மேலும் படிக்க – யாருக்கெல்லாம் சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது தெரியுமா?

ரெட் ஒயின் திராட்சை மற்றும் அதன் தோல் பகுதியை மொத்தமாக சேர்த்து தயாரிக்கப்படுகிறது அதுவே ஒயிட் ஒயின் தோல் பகுதியை மட்டும் நீக்கி விட்டு திராட்சையின் உட்புறத்தை சேர்த்து தயாரிக்கிறார்கள். இதை இரண்டையும் ஒப்பிடுகையில் ஒயிட் ஒயினில் அதிகமான சத்துக்கள் இருக்கின்றன.

ஒயிட் ஒயினில் கனிம சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் இருக்கின்றன. இதனால் ஒயிட்ஒயினை நாம் அருந்தும் போது நம் உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. இதில் கலோரிகள் இல்லாததால் உங்கள் எடையை குறைக்க உதவுகிறது.

தினமும் ஒரு டம்ளர் ஒயின் அருந்துவதன் மூலம் உங்கள் இருதய பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கிறது, பக்கவாதம் மற்றும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருப்பதினால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக உண்டாகிறது.

மேலும் படிக்க – விரைவில் கர்ப்பமாக விரும்பும் பெண்கள் இந்த உடற்பயிற்சியை கண்டிப்பாக செய்யணுமாம்…!

உங்கள் தூக்கமின்மை பிரச்சனையை இது தீர்த்து, உங்கள் நுரையீரல் செயல்பாட்டை இது சீராக்கும். இதனால் ஆரோக்கியமான நுரையீரலை நீங்கள் இதை அருந்துவதன் மூலம் பெறலாம். ஒயிட் ஒயின் குடிப்பதினாள் இரண்டாவது வகை சர்க்கரை நோயை 30% வரை குறைக்கிறது மற்றும் உங்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

சந்தைகளில் ரெட் ஒயினைவிட ஒயிட் ஒயின் விலை சற்று கூடுதலாகவே இருக்கின்றன. விலைக்கேற்ப இதன் மருத்துவ குணங்களும் அதிகமாக இருப்பதினால் முடிந்தவரை மாதத்திற்கு ஒரு முறை இதை குடும்பத்துடன் அருந்துவது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன