காதலுக்கு மட்டுமல்ல., உடல் ஆரோக்கியத்திற்கும் ரோஜாப்பூ.!

health and medicinal benefits of drinking tea with rose leaves

ரோஜாப்பூ என்றவுடன் எல்லோர் மனதிலும் தோன்றுவது காதல்தான் ஏனென்றால் ஒவ்வொரு காதலர் தின கொண்டாட்டங்களின் போது ரோஜாப்பூவின் பங்கு மிக அதிகம். இதை வைத்துதான் நாம் ஒருவரை காதலனாக பார்க்கிறோமா அல்லது நண்பராக பார்க்கிறோமா என்பதை வெளிப்படுத்த முடியும். இப்படிப்பட்ட ரோஜாப்பூவின் ஒரு வகையான ரோஸ்ஷிப் ரோஜா பூவை கொண்டு நாம் தேனீர் அருந்தி வந்தால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ரோஜாப் பூவின் வாசம் மற்றும் சுவை எப்போதும் ஒரு தனித் தன்மையைக் கொண்டது இப்படிப்பட்ட பூவின் குடும்பத்தை சேர்ந்த இந்த ரோஸ்ஷிப் நமது உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. இது நமது உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பது மட்டுமல்லாமல் நமது இருதயத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.

மேலும் படிக்க – காளானில் உள்ளது கட்டுக்கடங்கா சத்துக்கள்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த தேநீரை குடித்தால் அவர்களின் உடம்பில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. இதை தவிர்த்து இதை அருந்துவதன் மூலம் நீரிழிவு பிரச்சினையில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். ரோஸ்ஷிப் தேநீரை அருந்துவதன் மூலம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். அது மட்டுமல்லாமல் உங்கள் சருமத்தை பொலிவுடன் வைப்பதற்கும், உங்கள் உடல் எடையை குறைப்பதற்கும் இது உதவுகிறது.

இந்த தேனீரை வீட்டில் மிக எளிமையான முறையில் நாம் தயாரித்துக் குடிக்க முடியும். இந்த தேநீரில் சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து குடிப்பது மிகவும் நல்லது. கூடுதல் நறுமணத்திற்கு புதினா இலைகளையும் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

இது காட்டு ரோஜா என்பதினால் அதிகமாக காடுகள் உள்ள பகுதிகளிலேயே கிடைக்கின்றன. இதை முடிந்தவரை வாங்கி பயன் பெறுவது நல்லது. இந்த தேநீர்  எந்த ஒரு பக்க விளைவையும் தருவதில்லை ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் எதிர்ப்பால் அவர்களை மேலும் பாதிப்படைய செய்யும் எனவே இவைகளை தவிர்த்து மற்ற அனைவரும் இந்த தேநீர் அருந்தலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன