ஆரோக்கியத்துடன் அழகு தரும் அதிமதுரம்

  • by

 இன்றைய கால கட்டத்தில்  நாம் வாழும் வாழ்க்கையானது  அதிகளவில் மாற்றங்களை கொண்டதாகவுள்ளது.   வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்கள் நம்மை நோயாளியாக்குகின்றது. அதனால் நம்மை காக்க நாம் பல்வேறு  மூலிகைகள், முன்னோர்கள் உருவாக்கித் தந்த வழிமுறைகளை நாட வேண்டியுள்ளது. 

சித்த மருத்துவம், ஆயுர் வேதத்தில்  சொல்லப்பட்டுள்ள மருத்துவ முறைகளை நாம் கையாண்டு   வாழ்வியல் முறைகளின்ம் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை போக்கலாம்.   இந்தியா மூலிகைகளின் சொர்கம் ஆகும். இது குறித்து நம் முன்னோர்கள் குறிப்புகளை  நமக்கு எடுத்துரைத்துள்ளார்கள்.நமது நாட்டில் வளரும் உயிரை காக்கும் மூலிகைகளில் ஒன்று அதிமதுரம் ஆகும். 

மேலும் படிக்க – சீரகம் கலந்த உணவு சாப்பிட்டால் நம்மை சீராக்கும்

அதிமதுரம் அமிர்தமா:

அதிமதுரம்

சுகப்பிரசவம் நடக்க அதிமதுரம் முக்கியப் பங்கு வகிக்கின்றது:

அதிமதுரப் பொடி வைத்து  குழந்தையை சுகப்பிரசவம் மூலம் பெற்று எடுக்கும் மருத்துவ முறை  சிறப்பு வாய்ந்தது ஆகும். அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை 40 கிராம் எடுத்து நன்கு பொடியாக்கி  பிறகு சிறிதளவு சூடான நீரில் அப்பொடிகளை நன்றாக கலந்து பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு வலி ஏற்படும்பொழுது இரண்டு முறை கொடுப்பது சுகப்பிரசவத்திற்கு  வலி வகுக்கும். 

வயிறு குடல்  பிரச்சனையை போக்கும்:

நீங்கள் பசி எடுத்து காலை உணவுகளை சாப்பிடாததால் வயிறு மற்றும் குடல்களில் அல்சர் புண்கள் ஏற்பட்டு அவதிப்படுகிறீர்களா, அப்படியெனில் அதிமதுரப்பொடியை நீரில்  நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரிசி கஞ்சியுடன் அந்நீரை குடிர்த்து வந்தால் வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் அல்சர் புண்கள் குணமாகும்.

அதிமதுரப் பொடியானது  வயிற்றில் ஏற்படும் பிற பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாகும். அதிமதுரப் பொடியாக்கி  சாப்பிடுவது தான் சிறந்த பலனை தரும். மூட்டுவலி பிரச்சனைகள் வாதம் ஆகியவை காற்றின் தன்மை அதிகரிப்பதால் உடலின் அனைத்து பகுதிகளிலிருக்கும் மூட்டு பகுதிகளில் வலி உண்டாவதோடு விறைப்புத்தன்மை உண்டாக்குகின்றது

மூட்டுவலி நிவாரணி:

அதிமதுர தூள் கலந்த நீரை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் பருகி வந்தால் மூட்டு வலிகள் நீங்கும். உடலின் வாதத்தன்மை அதிகரிப்பை கட்டுக்குள் கொண்டு வரும்.

மேலும் படிக்க – உடல் உறுப்பு தானத்தால் ஏற்படும் 5 நன்மைகள்..! 

சிறுநீரக பிரச்சனை:

சிறுநீரகங்கள் உடலில் சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஆகும்.  சிறுநீரக தொற்று நோய்களால் சிறுநீர்ப்பைகளில் புண்கள் ஏற்படுகிறது. அதிமதுரம் ஊறவைக்கப்பட்ட நீரை அவ்வப்போது அருந்தி வந்தால் சிறுநீர்ப்பையில் இருக்கும் கிருமிகள் அழிந்து, புண்கள் ஆறும். சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதையும் தடுக்கும் என்று சித்த மருத்துவ நூல்கள்  தெரிவிக்கின்றன. 

ஆரோக்கியம்

அதிமதுரத்தை  வெய்யிலில் காயவைத்து  பொடியாக்கி கண்டெய்னரில் சேகரித்து பேக்காக பயன்படுத்தும் பொழுது முகத்தை பொலிவு பெறச் செய்து அழக்காக்கின்றது. இதனை ஆறு மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம். இதன் மூலம் அதிமதுரத்தின் அற்புதங்கள் ஆரோக்கியம் மற்றும் அழகுக்கும் பயன்படுத்துவதன் மகத்துவம் அறியலாம். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன