சருமப் பொலிவு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் எலுமிச்சை பழம்.!

  • by
health and beauty secrets of lemon

சிட்ரிக் அமிலம் உள்ள எலுமிச்சை பழத்தின் அருமையை அனைவரும் அறிந்திருப்பார்கள். பொதுவாக சருமத்தை பொலிவாக்குவட்கற்க்கு, உடல் சூட்டை குறைப்பதற்கும் எலும்புச்சத்தை நம் பயன்படுத்தி வருகிறோம். இதை தவிர்த்து இதை உணவில் சேர்ப்பதன் மூலம் ஒருவிதமான புளிப்பு சுவை மற்றும் உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும் என்பதை நாம் நன்கு அறிந்திருப்போம். இதைத் தவிர இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.

உடல் எடையை குறைக்கும்

எலுமிச்ச பழத்தை தினமும் நாம் உணவில் உட்கொள்வதன் மூலமாக நமது உடல் எடை குறைக்கிறது. இதில் இருக்கும் அமிலங்கள் நம் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து கெட்ட கொழுப்புகளை அகற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. எலுமிச்சை நம் உடலில் கலக்கும் போது நமது உடலில் ஆன்டி பயோடிக்காக செயல்பட்டு நோய்த்தொற்றுகள் அண்டாமல் பார்த்துக் கொள்கிறது.

மேலும் படிக்க – காய்களின் தங்கம் கேரட் புற்று நோயை சரிசெய்யும்!

செரிமானத்திற்கு உதவும் எலுமிச்சை

எலுமிச்சை சாரை சூடான நீரில் கலந்து குடிப்பதன் மூலம் நமக்கு ஏற்படும் செரிமான பிரச்சனை அனைத்தையும் தீர்த்துவைக்கும். அதே போல் வாயு பிரச்சனை உள்ளவர்கள் இதை தினமும் குடித்து வந்தால் உங்கள் வாயு பிரச்சனையை அடியோடு ஒழியும். மேலும் செரிமான பிரச்சனை அதிகமாக உள்ளவர்கள் இதனுடன் சிறிது ஓமத்தை கலந்து சாப்பிடுவது நல்லது.

ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்

எலுமிச்ச பழத்தை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பெரும்பாலும் அனைவரும் அறிந்திருப்பார்கள் ஆனால் இது உங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கும் என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் முடிவில் எலுமிச்சை சாறை உட்கொள்வதன் மூலமாக நமமுடைய இரத்த அழுத்தத்தை சம நிலைப்படுத்துகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எலுமிச்சை சாரை பெண்கள் அருந்துவதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும்.

மேலும் படிக்க – மாசு நிறைந்த உலகில் உங்களை காத்துக்கொள்ள ஆயுத்தமாகுங்க.!

சருமம் மற்றும் கூந்தல்

நாம் எலுமிச்சை சாறை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் இருக்கும் நச்சு தன்மைகளை விலக்கி நமது சருமத்தை பொலிவாக மாற்றும்.

உங்கள் சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்ற அனைத்தையும் எலும்புச்சத்தை தேய்பதன் மூலமாக குணப்படுத்தலாம். அதேபோல் முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சை சாரை தலையில் தேய்த்து குளிப்பதன் மூலமாக உடனடி தீர்வு கிடைக்கும்.

இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட இந்த எலுமிச்சம் பழம் பத்து ரூபாய்க்கு மூன்று கிடைக்கும். இதைவிட மலிவான ஆரோக்கிய உணவை நாம் வாங்கவில்லை என்றால் நீங்கள் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன