உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் ரோஜா இதழின் சாறு..!

  • by
health and beauty benefits of rose petals juice

ரோஜா பூக்கள் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து உலகத்தில் இருப்பதற்கான சான்றுகள் இருக்கின்றன. நாம் காதல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்திவரும் ரோஜா பூக்களில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன. பண்டைய கால சீனர்கள் மற்றும் ரோமானியர்கள் இதை அதிகமாக பயிரிட பயன்படுத்தினார்கள். ரோஜா பூக்களில் இருந்து எடுக்கப்படும் சாரில் நமக்கு கிடைக்கும் நன்மைகளை காணலாம்.

இந்தியாவில் ரோஜாக்கள்

சீனா மற்றும் ரோமானியர்களின் வழியில் ரோஜாப்பூக்கள் இந்தியாவிற்குள் வந்தது. இதை தோட்டங்களில் அழகை அதிகரிப்பதற்காக மற்றும் இதில் இருக்கும் நறுமணத்தைக் பெறுவதற்காகவும் ரோஜா பூக்களை பயன்படுத்தி வந்தோம். இந்தியப் பெண்களை ரோஜா பூக்கள் பெரிதாக கவர்ந்துள்ளது. இதனால் ஆண்கள் ஒரு பெண்ணை காதலிக்கிறார்கள் என்பதை சொல்வதற்கு ரோஜா பூக்களை அவர்களுக்கு பரிசாக அளித்து வந்தார்கள். இதை தவிர்த்து ரோஜா பூக்களின் ஏகப்பட்ட நன்மைகள் நமக்கு இருக்கின்றன, அவை என்னவென்று பார்ப்போம்.

மேலும் படிக்க – நீண்ட காலமாக தலையணையை மாற்றாமல் இருப்பவரா நீங்கள்?

ரோஜா சாற்றில் இருக்கும் சக்திகள்

ரோஜா பூக்களில் ஏராளமான செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இருக்கின்றன. ஃபினைல்எத்தானல், க்ளோ ரோஜினிக் அமிலம், டான்னின், சையானின், கரோட்டின், சர்க்கரைகள் போன்ற வேதிப்பொருட்கள் ரோஜாமலரில் உள்ளது.

சரும அழகிற்கு ரோஜாப்பூ

ரோஜா பூ இதழ்கள் மற்றும் பயிற்றம் பயிரை சம அளவில் எடுத்து ஒன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். அதனுடன் நான்கு அல்லது ஐந்து பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து அதிலிருந்து எடுக்கப்படும் சாறினை நமது சருமம் முழுக்க தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இதனால் உங்கள் சருமத்தில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளும் விலகி உங்களுக்கு மென்மையாகவும், பொலிவான சருமத்தை அளிக்கும்.

ரத்த விருத்திக்கு உதவும் ரோஜா மலர்கள்

உங்களில் உடலில் ரத்த விருத்தி அதிகரிக்க வேண்டுமென்றால் ரோஜா மலர்களின் மூலமாக செய்யப்படும் குல்கந்தை தினமும் சாப்பிட வேண்டும். இதை வீட்டிலேயே எளிமையான முறையில் செய்வது எப்படி என்பதை காணலாம். ரோஜா இதழ்களை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து விடவேண்டும். பின்பு அதை 12 மணி நேரம் அப்படியே ஊற வைத்து அடுத்த நாள் கைகளில் நன்கு கசங்கிக் கொள்ள வேண்டும். பிறகு அதை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுள் சர்க்கரையைக் கலந்து மீண்டும் கொதிக்கவிட வேண்டும். அது கெட்டியான நிலையை அடைந்தவுடன் அதை இறக்கி அதனுடன் பன்னீர் சேர்த்து கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இதை தினமும் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் ரத்தம் விருத்தியடையும்.

மேலும் படிக்க – பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

வயிற்று வலியை குறைக்கும்

நமக்க வெப்பத்தினால் ஏற்படும் வயிற்று வலியை ரோஜா சாரினை அருந்துவதன் மூலமாக உடனடித் தீர்வு கிடைக்கும். இதனால் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் குணமடையும்.

இதைப் போல் ரோஜா பூக்களினால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன எனவே ரோஜா பூக்கள் எஸ்என்ஸ்ஐ வீட்டில் தயாரிக்கலாம். இல்லையெனில் கடைகளிலும் வாங்கிக் கொள்ளலாம். அதைப் பயன்படுத்தி உங்கள் சருமம் மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன