அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கு வேப்ப இலை..!

  • by
beauty and health benefits if neem leaves

இயற்கை நமக்கு அளித்த மிக முக்கியமான மூலிகை மரம் தான் இந்த வேப்ப மரம். இதிலிருந்து நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது, சாதாரணமாக வேப்ப மர அடியில் அமர்ந்தால் அதன் காற்று நமக்கு மன அமைதியைக் கொடுக்கும். இதைத் தவிர்த்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளையும் மற்றும் தொற்றுகளை அழிக்கும் தன்மை போன்ற அனைத்தும் வேப்பிலைக்கு உண்டு. இதில் இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் தன்மை இருக்கிறது, இதை தவிர்த்து வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழித்து நமது உடல் கழிவுகள் அனைத்தும் வெளியேற்ற வேப்ப இலை உதவுகிறது.

சரும அலர்ஜி

வேப்ப இலையில் இருக்கும் அண்ட் பாக்டரிய பண்புகள் உங்கள் சருமத்தில் உண்டாகும் எக்ஸிமா, கோபிஸ் போன்ற பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதைத் தவிர்த்து புற ஊதா கதிர் வீச்சினால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்க வேப்ப இலை உதவுகிறது. எனவே நீங்கள் குளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு அதை நன்கு கொதிக்க வைத்து அதைக் கொண்டு சருமத்தை கழுவுவதன் மூலமாக உங்கள் சருமம் பாதுகாக்கப்படும்.

மேலும் படிக்க – எலும்பிச்சை சாற்றில் நிறைந்துள்ள சத்துக்கள்!

வறண்ட சருமம்

வறண்ட சருமம் உள்ளவர்கள் வேப்ப இலையை பொடியாக்கி அதில் பால் மற்றும் தேனை சேர்த்து முகத்தில் பேஸ் மாஸ்க் போட்டு கொள்ளலாம். இதன் மூலமாக வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மென்மையான சருமம் கிடைக்கும். இதைத் தவிர்த்து உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து முகப்பருக்கள், காயங்கள் போன்ற அனைத்தையும் மறைத்து விடும். அதேபோல் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் வேப்ப இலையை கொதிக்க வைத்த நீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். ஓரிரு வாரங்களில் உங்கள் முகத்தில் இருக்கும் அனைத்து எண்ணெய்களும் விலகி எப்போதும் உங்களை பொலிவாக வைத்துக் கொள்ளும்.

விஷத்தை முறிக்கும்

சிறிய வகை பூச்சிகள் மற்றும் விஷத்தன்மை உள்ள பூச்சிகள் கடிப்பதால் ஏற்படும் வலியைக் குறைத்து அந்த காயத்தை ஆற்றும் தன்மை வேப்பிலைக்கு உண்டு. அதேபோல் ஒரு சில உணவுகளின் மூலமாக ஏற்படும் வயிற்றுப் பிரச்சனை மற்றும் வயிற்றில் இருக்கும் விஷாத்தன்மையை குறைக்க வேப்பிலை பயன்படுகிறது. எனவே வேப்பிலையை நன்கு அரைத்து அந்த சாறை சருமத்தின் தேய்ப்பதன் மூலமாக காயங்கள் மற்றும் வலிகள் அனைத்தும் குறையும். அதே போல் அதை குடிப்பதன் மூலமாக வயிற்றில் இருக்கும் அனைத்து பூச்சிகளும் அழிந்து விடும்.

புற்றுநோய் பாதிப்பு

சமீபத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் வேப்பிலையைக் கொண்டு புற்று நோய் உண்டாக்கும் செல்களை அழிக்க முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே புற்றுநோய் அபாயத்தில் இருப்பவர்கள் அதன் தன்மையை குறைக்க வேப்பிலையை பயன்படுத்துங்கள். அதேபோல் தொற்று வியாதிகளால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் உடல் உபாதைகளை தடுப்பதற்கு வேப்பிலை பயன்படுகிறது.

மேலும் படிக்க – வெந்தயமும் மனித வாழ்வின் ஆரோக்கியமும் அவசியம்!

இருதயப் பிரச்சினை

உடல் பருமன் அடைந்தவர்களுக்கு மிக எளிதில் இருதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே இது போன்ற நிலையில் இருப்பவர்கள் முடிந்தவரை தினமும் அதிகாலையில் வேப்ப இலை சாறை குடிக்க வேண்டும். இதனால் உங்கள் இரத்த ஓட்டம் சீராகி இருதயப் பிரச்சினை வராமல் பாதுகாக்கும்.

வேப்ப இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை காலை, மாலை என இருவேளை குடிப்பதன் மூலமாக மலேரியாவால் உண்டாகும் பாதிப்புகள் அனைத்தும் குறையும். அம்மை நோயினால் ஏற்படும் பிரச்சனையும் குறைத்து உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் தன்மை வேப்பிலைக்கு உண்டு. அதேபோல் சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான வழிகளில் உதவும். இந்த வேப்பிலையை மக்கள் அனைவரும் பயன்படுத்தி ஆரோக்கியம் இருக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன