மருதம் மரத்தின் இருக்கு மகத்தான வாழ்வியல் மருத்துவம்

  • by

இந்தியாவின் சிறப்பே இயற்கையின் கொடை ஆகும். இங்குள்ள மரங்களில் வாழ்வியலுக்கு உதவும். இயற்கையின் கொடையான மருதமரம் அறிவோம். மருதமரத்தின் பழங்கள்  உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றது. இலையானது கூம்பு வடிவத்தை ஒத்திருந்தது. இந்த மரமானது பழுப்பு நிறத்தில் அமைந்தது ஆகும். மருதமரமானது செப்டம்பர் மாதம் நவம்பர் மாதம் வரை கனியானது  பெருகும் இந்து உடலுக்கு ஆற்றல் மிகுந்த ஒன்று. இந்த மரம் சுகாதாரத்தை காக்கும் தன்மைகள் மிகுந்துள்ளது. 

மருதம்

மருதமரம் அர்ஜீனா மரம் என அழைக்கப்படுகின்றது. இந்த மரத்தின் பட்டையில் அதிகபடியான ஊட்டச் சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன,  கோ- என்சைம், கே – 10 டான்னிக் அமிலம் ஃபிளாவனாய்டுகளில் மெக்னீசியம், துத்த நாகம், தாமிரம் மற்றும் கால்சியம் போன்ற தனிமங்கள்  மிகுந்து காணப்படுகின்றது. இந்த மரம் சுற்றுப்புறத்தில் உள்ள காற்றினை இது சுத்தப்படுத்தும். நமது ஆரோக்கியத்தை அதிகபடுத்தும். 

மருதம் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை சரி செய்யும்,  மூச்சினை சீராக்கும். இதன் பட்டையை பொடியை சூடான பாலில் கலந்து  தேநீராக குடித்து வரும் பொழுது உடல் பலப்படும். இந்தப் பட்டையை உடலில் சேர்க்கும் பொழுது இதய நோயை குணப்படுத்தலாம்.

சிறுநீரகத்தின் கல்லை கரைய வைக்கின்றது.  மருதமரம் பட்டையை தினமும் டீயாக குடித்தால் பெருத்த உடல்  மெலிந்து சிராகும். இதயம் சம்மந்தப்பட்ட நோய்களை இது தடுக்கின்றது. மாதவிடாய்  உதிரப் போக்கு எனபது பெண்களுக்கு 40 வயதில் நிற்கும் இது பெரும்பாட்டை போக்கும் ஆற்றல்  வாய்ந்தது ஆகும். 

மருதம்

மருத இலைகள் துவர்ப்பு சுவையுடையது இதனை கசாயமாக சாப்பிட்டு வரலாம். மன அழுத்ததை குறைக்கும், சுக்ல சுரப்பியை  எனபடும் சிறு நீர் சிக்கலை குறைக்கும். வெடிப்பை இது சரி செய்ய மருத இலையை அரைத்து சாப்பிட்டு வர வேண்டும்.  உடலுக்கு புத்துணர்ச்சியை அதிகரித்து கொடுப்பதில் இதற்கு ஏதுமில்லை எனலாம். இதயத்தை வலிமைப்படுத்திக் கொடுக்கும். இதயத்தை வலிமை ஆக்கி கொடுக்கும். மருத   காயை நட்டு கஞ்சியோடு ஊரவைத்து விதையிட்டால் உடலை காக்கும். மருதப் பட்டையின் குடலில் உள்ள குறைகளை போக்கும். ஒற்றை தலைவலியை சரி செய்யும். மூட்டு வலியை குறைக்கும். ரத்த அழுத்ததை  இது சீராக்கும்,. மருதமரம் பக்கவாதத்தை போக்கும்.  


மேலும் படிக்க: நாட்டுப் பழங்கள் ஹைப்ரிட் பழங்கள் எவ்வாறு வேறுபாடு  கண்டறிவது???

மருதமரங்கள் அதிகம் கொண்ட காடுகள் இருந்ததால்  அந்த பகுதி மதுரை என அழைக்கப்படுகின்றது. மருதமரம்  இதய அடைப்புகளை எல்லாம் இலகுவாக சரி செய்யும். மருத மர பட்டையை  சரி செய்யும். சர்க்கரை நோயை சீராக்கும். மருதம் பட்டை ஆவாரம் பட்டை சம அளவில் ஏலம்,  சுக்கு, சூரணமாக்கி குடித்தால் உடலுக்கு மாபெரும் ஆற்றல் கிடைக்கும். மருதபட்டையில் இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்து காணப்படுகின்றது.  இது ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். பாரம்பரிய மரமான மருதமரம் குறித்து அறிந்து கொள்ள இங்கு நமக்கு நேரம் இல்லை. இழந்த மரங்கள் மறந்து போனோம் பரவாயில்லை. இருக்கின்ற மரங்களை காப்போம்.

மருதம்

  நமது வாழ்வியலில் இயற்கைக்கு என தனி மகத்துவம் உண்டு அதனை பேணி காத்தோமேயானால் நிச்சயம் நமது வாழ்வானது சிறக்கும். இன்று உலகை அச்சுறுத்தும் கொரானா போன்ற கொள்ளை நோய்கள் எல்லாம் நம் நாட்டு வாயிலில் கூட நின்றிருக்காது. பழமையை  காத்து புதுமையாக வாழும் பொழுது வாழ்கையானது என்றும் ஆரோக்கியமும் அதில் இருந்து மகிழ்ச்சியும் பொழ்ங்கும். நமது அன்றாட வாழ்வியல் குறைகள்தான் நம்மை இப்படி அவசர கதியில் ஓட வைக்கின்றது அதனை உணர்ந்து கொண்டு நமது அசுர வேகத்தில் மரந்து  போன பழைய வாழ்க்கையை மீண்டும் திரும்ப முயற்சிப்போம்.

மேலும் படிக்க: மூலிகை விளக்கு இருந்தால் சுற்றி பாதுகாப்பு கிடைக்கும்! 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன