குழந்தைகளுக்கு அதிகமாக பாக்கெட் உணவுகளை வாங்கிக் கொடுப்பவர்களா நீங்கள்???

  • by
health affects of children eating package foods

முன்பெல்லாம் முப்பது வயதை கடந்தவர்களை தாக்கும் ஒபிசிட்டி என்ற உடல் பருமன் நோய் இப்பொழுது 5 வயது குழந்தைகளையும் ஆட்கொண்டுள்ளது. அதற்கு காரணம் என்னவென்று நமக்கே தெரியும். இன்றைய நவீன வாழ்வியல் முறையில் நாம் உண்ணும் துரித உணவுகளும், உடனடி உணவுகளும் தான் காரணம்.

இன்று பல்வேறு நோய்களின் அடிப்படையாக இருக்கும் இந்த உடல் பருமன் பிரச்சனையை போக்குவதற்கும் குழந்தைகள் நலமுடன் வளமுடன் வாழ்வதற்காகவும் நாம் பாக்கெட்டில் அடைத்து வைத்துள்ள உணவுகளை கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பாக்கெட்டில் இருக்கும் உணவுகள்  சத்தானவை என்று எண்ணி நாம் வாங்கிக் கொடுக்கிறோம். ஆனால் அவை வெறும் காற்றடைத்த பைகள் மட்டும்தான் என்பது நமக்கு தெரிவதில்லை.

” நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம்” என்றார்கள் நம் முன்னோர்கள். ஆனால் நாமோ அந்த பழமொழியை தவறாக புரிந்து கொண்டு துரித உணவுகளை நொறுங்க தின்று கொண்டிருக்கிறோம். அதன் அர்த்தம் என்னவென்றால் நாம் உண்ணும் உணவை நன்றாக மென்று வயிற்றுக்குள் அனுப்ப வேண்டும்.

அப்போதுதான் அதனுடைய முழு சத்தையும் நம் உடல் உள்வாங்கிக்கொள்ளும். இதற்காக கூறப்பட்ட பழமொழி தான் இது. ஆனால் நாம் கொடுக்கும் பாக்கெட்டு உணவுகள் குழந்தைகள் வயிற்றுக்குள் போய் செய்யும் வேலைகள் அபாயகரமானதாக இருக்கின்றன.

மேலும் படிக்க – இயற்கை உணவை சாப்பிடுவதினால் கிடைக்கும் நன்மைகள்..!

பாக்கெட் உணவுகளை எவ்வாறு தயாரிக்கின்றனர் 

EXTRUSION TECH NOLOGY என்ற பெரும்பாலான தின்பண்டங்கள் தயாரிக்கப்படும முறை பற்றி நாம் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது அதிக சூட்டில் தானியங்களை பொரித்து எடுக்கும் இந்த தொழில்நுட்பத்தில் தான் பிரபல பண்டங்கள் அனைத்தும் தயாரிக்கப்படுகின்றனர்.

பாக்கெட் உணவின் செய்முறை, கலக்கப்படும் ரசாயனங்கள் 

உணவை வேக வைத்து பொரித்து எடுக்க என்று EXTURDER எந்திரத்தின் சிறு துளை ஒன்றின் மூலமாக தானியங்களின் மாவு 200 டிகிரிக்கும் மேலான சூட்டில் பொடித்து எடுக்கப்படுகிறது. அந்த பொரித்த உணவுகளை மேலும் சுவை ஊட்டுவதற்காக அதில்  விதவிதமான மசாலாக்கள் உப்புகள்  சோடியம் உப்புக்கள் சுவையூட்டிகள் மணமூட்டிகள்  நீர்ச்சத்து ஏறி விடாமல் இருப்பதற்காக உரிஞ்சும் வாயுக்கள் உணவை கெட்டுவிடாமல் காக்கும் வேதி உப்புகள்  ரசாயனங்கள் இவை அனைத்தும் சேர்க்கப்படுகின்றன.

உயிர் சத்துக்களை மாறுபாடு அடையச்செய்யும் பாக்கெட் உணவு

நாம் மேற்கூறிய அனைத்து ரசாயனங்களும் பாக்கெட்டின் பின்புறம் Approved Chemical Ingredients என்ற பெயரில் ஒளிந்திருக்கும். அதைப்பற்றியெல்லாம் நாம் கண்டு கொள்வதே இல்லை. ஐந்து ரூபாய்க்கு காற்று அடங்கிய பாக்கெட்டுகளில் இருப்பதால் அதுதான் சிறந்த உணவு என்று எண்ணிக்கொண்டு நம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படி அதிக சூட்டில் செய்யப்படும் உணவுகளில் இருக்கும் புரதங்களின் நிலை சற்று மாறுபட்டதாக இருக்கும். பெரும்பாலும் தானியங்களில்  இயற்கையாகவே உள்ள புரதம் கார்போஹைட்ரேட் ,கொஞ்சம் கொழுப்பு ஆகியவற்றோடு தன வாழ்நாளெல்லாம் தவமாய் தவமிருந்து தாவரங்கள் சேகரித்து வைத்திருக்கும் கனிமங்களும் மருத்துவ குணங்களும் அவர்கள் கொடுக்கும் சூட்டில் எங்கோ காணாமல் மறைந்து போகிறது.

சில நிறுவனங்கள் இந்த சூடேற்றிய பாக்கெட் உணவுகள் எந்த ஆபத்தையும் தருவதில்லை என்று கூறினாலும். அதில் எந்த சத்துக்களும் இல்லை என்பதையும் கூறுவதற்கு மறந்து போய்விடுகின்றனர்

பாக்கெட் உணவுகளினால் ஏற்படும் தீமைகள்

உடல் இயக்கத்திலும் உறுப்புகளின் வளர்சிதை மாற்றத்திலும் ஏற்படும் பாதிப்புகள் எண்ணிலடங்காதவையாக இருக்கின்றன.

உடல் பருமன் 

சீக்கிரமாக பருவமடைதல் குழந்தையின்மை பிரச்சனை.

மேலும் படிக்க – கொரானாவை கொன்று குவிக்கும் இந்தியா!

ஆண்மைக் குறைவு

அதற்கு காரணம் நாம் இன்று அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கும் இந்த பாக்கெட் உணவுகளும் துரித உணவுகளும் தான்.

குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சிற்றுண்டிகள் 

சிற்றுண்டிகள் என்பது நம் பழந்தமிழர் காலத்திலிருந்தே இருந்து வருகிறது. அவர்கள் தானியங்களை பயன்படுத்தி செய்த சிற்றுண்டிகள் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. குறைந்த நேரம் ஒதுக்கினால் போதும் நம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சிற்றுண்டிகள் ஆன எள்ளுருண்டை, சோளப் பணியாரம், கேழ்வரகு அடை, திணை அரிசி பாயசம் இதுபோன்று நாமே செய்து கொடுக்கலாம். இதைச் செய்யாமல் உடல் நலத்தை வீணாக்கும் பாக்கெட் உணவுகளை வாங்குவதை தவிர்ப்பதால் மட்டுமே நம் குழந்தைகளின் உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் பாதிக்காமல் இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன