நான் அறிந்த உலகத்தின் உத்தம காதலன்!

  • by

உலகத்தின் உத்தம காதலன் இவர் அனைவரிலும் சிறந்த அன்பானவர்,  காலத்திற்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொள்வதில் வல்லவர் இவரைப் போல் சிறந்த காதலன் நான் அறிந்ததில்லை.    நீங்கள் அறிந்ததுண்டா, நான் அறிந்த இவரைப் போல் இனி ஒரு காதலன் இனி கிடைக்கமாட்டான். 

உத்தம காதலன்: 

உத்தம காதலன் இவர்,  கண்கணிகளில் காதல் பேசும் நாயகன் இவர், தனது காதலிக்காக மீண்டும் பிறப்பு எடுத்து வந்தவர் தனக்கு இரு மனைவிகள் இருந்த   போதிலும் உலகிற்கே தன் காதலை கம்பீரமாக அறிமுகம் செய்து வைத்த காதலின் பேரரசன். 

மேலும் படிக்க: அன்பின் அடுத்த பரிமாற்றம் அழகிய முத்தம்

பெண்களின் விருப்பமானவன்: 

பெண்களின் விருப்பமானவன் இந்த காதலன் இவன்   காதலுக்கு இலக்கணமானவன். தன் காதலிக்கு என்று தனி ஒரு இடம் கொடுத்தவன்.  தன் இதயத்தை அவளுக்கு தாரை வார்த்தவன் இந்த இனிய காதலன். 

தர்மங்கள் பல பேசுவான்,  எது தர்மம் என கற்றும் கொடுப்பான். அன்பானவன்  காதலில் உண்மையானவனாக இருந்தான். தன் மீது இருந்த விமர்சனங்களை எல்லாம் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வான். 

வாழ்வனைத்தும் தான் கொண்ட கடமையை செய்தான்.  அனைவருக்கும் அன்பானவனாக இருந்தான். தன் இதயத்தவளை அறிந்த  அவளுக்காக பல செய்தார்.  

தன்  காதலிக்காக மீண்டும் பிறப்பெடுத்தான். அவளை நோக்கி  தன் இளமை பருவத்தை கழித்தான். அவளை விட்டு வெளியேறியபோதும் அவளை எண்ணியே தன் பணியை முடித்தான்.  தன்னை சுற்றி பல பெண்கள் இருந்தும் தன் இதயத்தில் இருந்த காதலிப் பற்றி உரக்க் உலகுக்கு அறிவித்தான்.  உலகமும் சுற்றமும் அவனை எண்ணி நகையாடியது ஆனால் இவனோ அவளை ஆழமாக நேசித்தான். 


 அவளை நேசிக்கும் பொழுது தினம் தினம் காதல் பரிசுகள் கொடுத்தான்.   அவன் உருவாக்கும் காணம் அவளை மட்டும் அல்ல சுற்றியிருந்த மங்கையரை எல்லாம் மயக்கியது.  ஆனால் அத்தனை பேர் தன்னை சுற்றியிருந்தும் இவன் இதயம் என்னமோ தன் அவளான ராதையை நோக்கியே சுற்றியது. 

மேலும் படிக்க: காதலர் தினத்தில் கலக்கலான திட்டங்களோட ஜமாயுங்க!

காதல் நாயகன் கண்ணன் : 

இந்த காதல் நாயகனுக்கு பெண்களை எப்படி அனுவகுவது என்று  தெரிந்திருந்தது. இவன் பெயர் கண்ணன், ஆம் குழல் ஊதும் கோபியரின் பிரிய கண்ணன், ராதை எனும் பேதையின் காதலன்  கிருஷ்ணன் ஆவான். 

அப்டேட்டடு கிருஷ்ணன்: 

கிருஷணனா அவன் கடவுள் அவரையா பேசினேன்  என நினைக்கின்றிர்களா, அவன் கொடுத்த காதல்தான் நம்மை இன்று ஆட்டுகின்றது.  அவன் செய்த மாயம்தான் நம்மை நகர்த்துகின்றது. அவன் தன் காதலியோடுதான் காலத்தை கடத்தினான் என்பது  அவன் உரைத்தது. மதுரா சென்றது முதல் மடியும் வரை தன் பணியை திரௌபதி நட்பின் வாழ்க்கையை காக்க இந்த  காதல் அரசன் தூணாய் இருந்தான். 16 ஆயிரம் பெண்களின் வாழ்க்கையை காப்பற்றி அவர்களை மணந்து அவர்களோடு வாழ்ந்தான்.  ஆனால் இந்த காதல் நாயகன் தன் ராதை எனும் கோதையை இதயத்தில் வைத்து நேசித்தான் இவன் நித்திய காதலன் இவனை உணர்ந்துதான் நான் காதலிக்க  தொடங்கினேன். இவன் காதல்தான் எனக்கு காதல் கற்றுக் கொடுத்தது. 


உலக காதலை எல்லாம் புரட்டிப் பாருங்கள் இவன் காதல்  சாயல் இல்லாத காதலர்கள் இருந்தால் எனக்கு தெரிவியுங்கள். தெரிந்து கொள்ள ஆவல். 

மேலும் படிக்க: வாயை மூடி பேசும் காதலுக்குள் வம்பு இருக்காது

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன