தமிழ்தாய் கோவில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா!!!

  • by
have you heard about the tamizh thaai temple

தமிழ் தாய்க்கு என்று பாடல் உள்ளது. ஆனால் தமிழ் தாய்க்கு என்று கோயில் உள்ளதா. ஆம் இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி எனும் ஊரில் தெற்கே அமைந்துள்ளது இந்த தமிழ் தாய் கோயில்.

தோற்றம்

தமிழ் தாய்க்கு என்று கோயில் எழுப்ப வேண்டும் என்பது கணேசன் அவர்களின் நெடுநாள் கனவு. அவரது கனவை நனவாக்கும் வகையில் முன்னாள் முதல்வரான திரு கருணாநிதி அவர்கள் 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று தமிழ் தாய்க்கு கோயில் கட்டுவது என தீர்மானிக்கப்பட்டு கால்கோள் விழா நடந்தது. தமிழக அரசு ஒதுக்கிய நிதியின் மூலம் இந்த கோயில் கட்டப்பட்டு 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று திறக்கப்பட்டது. இன்றளவும் தமிழ் தாய்க்கு இக்கோவிலில் வழிபாடு நடந்து வருகிறது.

மேலும் படிக்க – மூலீகை சாம்பிராணி முக்கால வினையை போக்கும்

வடிவம்

இங்கு கருவறையில் தமிழ் தாய் நான்கு கைகளுடன் தாமரை பீடத்தில் அமர்ந்து இருப்பது போல காட்சி தருகின்றாள். வலது கையில் சுடரையும், இடது கையில் யாழையும் வைத்திருக்கிறார். கீழ் வலக்கையில் ருத்ராட்ச மாலையும் கீழ் இடக்கையில் சுவடியும் இருப்பது போல் காட்சி தருகிறார். பண்டைய கால மன்னர்களான சேர சோழ பாண்டியர் ஆகிய மூவரும் தமிழ் மொழியை போற்றி வளர்த்தனர் என்பது நாம் அறிந்தது. எனவே இதை பறைசாற்றும் வகையில் அவர்களின் சின்னங்களான வில்,புலி, மீன் ஆகியவற்றை தமிழ்த்தாயின் பின்புறத்தில் உள்ள திருவா ச்சியில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ்தாயின் வலது கால் கீழே தொங்கியவாறு இடது கால் மடித்த நிலையிலும் வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த் தாயின் கால்களில் வரலாற்று சிறப்புமிக்க சிலம்பையும் தந்தையையும் அறிவித்திருக்கின்றனர். 

வழிபாடு

இந்த திருவுருவச் சிலைக்கு மலர்களாலும் நறுமணப் புகைகளைக் கொண்டும் வழிபாடு நடத்தப்படுகிறது. 

மேலும் படிக்க – ஆன்மீகத்தில் பயன்படுத்தப்படும் உப்பின் பயன்கள்..!

இந்தத் தமிழ் தாய்க்கு ஆடை அணிகலன்கள் மற்றும் மாலை போன்றவை அணிதல் கூடாது. மா பலா வாழை இளநீர் தேங்காய் தேன் பால் சர்க்கரை போன்ற பல பொருட்கள் தமிழ் தாய்க்கு படைக்கலாம். இந்த கோயிலில் வழிபாடு முடிந்த பிறகு இங்கு படையலுக்கு கொடுத்திருக்கும் தேங்காய் பழம் முதலியவற்றை வயதில் முதிய ஒருவருக்கு கொடுத்துவிட்ட பிறகு மற்றவர்களுக்கு சந்தனம் மலர் சர்க்கரை போன்றவை கொடுக்கப்படுகிறது. இந்த தமிழ்த் தாய்க்கு “தமிழ்தாய் பிரபந்தம்” என்று அந்தத் தாயைப் பற்றி ஒரு நூல் வெளியிடப்பட்டுள்ளது. இதிலுள்ள பாடல்களை நாள்தோறும் கோயிலில் ஓதுவார் இசைக்க வழிபாடு நடைபெறுகிறது. இந்த கோயிலை கம்பன் அறநிலை நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. இந்த கோயில் தமிழுக்கும் தமிழகத்துக்கும் என்றும் பெருமை சேர்ப்பதற்காக அமைந்திருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன