ஆச்சரியம் தரும் நாஸ்கா கோடுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா!

  • by
have you heard about nasscom lines

உலகில் எவ்வளவோ மர்மமான விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு தகவல்தான் இன்று நாம் பார்க்க இருப்பது. நாஸ்கோ அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட இடம். ஒரு காலத்தில் வாழ்ந்த நாஸ்கோ மக்கள் எந்த பகுதிகளிலும் உள்ள மக்கள் கடைபிடிக்காத உணவு உடை கைவினைப்பொருட்கள் போன்ற வினோதமான நடைமுறைகளை பின்பற்றி வந்திருக்கின்றஆச்சரியம் தரும் நாஸ்கா கோடுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா!

நாஸ்கா இன மக்கள்

உலகில் எவ்வளவோ மர்மமான விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு தகவல்தான் இன்று நாம் பார்க்க இருப்பது. நாஸ்கோ அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட இடம். ஒரு காலத்தில் வாழ்ந்த நாஸ்கோ மக்கள் எந்த பகுதிகளிலும் உள்ள மக்கள் கடைபிடிக்காத உணவு உடை கைவினைப்பொருட்கள் போன்ற வினோதமான நடைமுறைகளை பின்பற்றி வந்திருக்கின்றனர். இவர்கள் தரையில் வரையப்படும் மிகப்பெரிய அளவிலான ஓவியங்களுக்கு பெயர்பெற்று விளங்கியுள்ளனர். இவர்கள் தான் நாஸ்கா இன மக்கள்.. இவர்கள் காடுகளை அழித்து அவர்கள் வாழ்நாட்களை நடத்தி வந்த காரணத்தினால் பிற்காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அழிந்து போயிருப்பார்கள் என்று வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன.

மேலும் படிக்க – பாதுகாப்பான பாரம்பரிய தமிழர்களின் பழக்க வழக்கங்கள்..!

நாஸ்கா கோடுகள் 

1926 ஆம் ஆண்டின் போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த நாஸ்கா இன மக்களால் வரையப்பட்ட நீண்ட கோடுகளை கண்டுபிடித்து, அதற்கு நாஸ்கா கோடுகள் என்று பெயரிட்டனர். இந்தக் கோடுகள் சுமார் 30 கிலோ மீட்டர் நீளம் உடையவை களாக உள்ளன. அதன்பிறகு 1930ஆம் ஆண்டின் போது ஆராய்ச்சியாளர்கள் இப்பதிவினை வானத்திலிருந்து கீழே பார்த்தபோது பெரும் ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் கீழ் இருந்து பார்க்கும்போது கோடுகளாக தெரிந்த அனைத்து ஓவியங்களும் வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது உருவங்களாக தெரிகின்றன. இந்தக் கோடுகள் வண்ணத்துப்பூச்சி குரங்கு பறவை திமிங்கிலம் போன்ற உருவங்களை காட்டுகின்றன.

20 நிமிட மழை 

அதன் பிறகே இவை சாதாரண கோடுகள் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் உணர்ந்தனர். மேலும் இதில் பல மர்மங்கள் உள்ளதையும் அவர்கள் அன்றே அறிந்து கொண்டனர். இந்த ஓவியங்கள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட தாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில் 300க்கும் மேற்பட்ட ஓவியங்கள் தரையில் இருக்கும் பாறைகளை நகர்த்தி, நிலங்களை தோண்டி சமமான அளவில் வரையப்பட்டுள்ளன. இந்த இடத்தில் வருடத்துக்கு வெறும் 20 நிமிடம் மட்டுமே மழை பெய்யும் என்று கூறினால் அதன் ஆச்சரியம்தானே. ஆமாம் இங்கு வருடத்துக்கு வெறும் 20 நிமிடம் மட்டுமே மழை பொழிகிறது. அதனால் தான் இங்கு காணப்படும் பாறைகளும் நிலமும் மக்கிய நிறத்திலேயே உள்ளன. இதனால் தான் இந்த ஓவியங்களும் மறையாமல் இருக்கின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வகையான கோடுகளின் மூலம் வரையப்பட்ட ஓவியங்கள் வேறு எந்த நாடுகளிலும் அல்லது பகுதிகளிலும் இல்லை என்பது பெருநாடு பெருமைப்படக்கூடிய ஒரு விஷயம்தான். இந்த நாஸ்காகாவை பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒவ்வொரு ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த பகுதி மர்மம் நிறைந்த பகுதியாகவே காணப்படுகிறது. யாராலும் ஒரு தீர்மானத்தை தெளிவாக கூற முடிவதில்லை.

மேலும் படிக்க – வீட்டில் இருந்து வேலை செய்வது எவ்வளவு முக்கியம்..!

அந்த காலத்திலேயே இந்த மக்கள் மிகவும் பெரும் விஞ்ஞானிகளாக தான் இருந்திருக்க வேண்டும். கீழிருந்து பார்க்கும்பொழுது கோடுகளாகவும், மேலிருந்து பார்க்கும் பொழுது ஓவியங்களாகவும் வரைய ஒரு திறமை வேண்டும். மீண்டும் ஒரு நல்ல தகவலோடு சந்திக்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன