ஆஸ்டியோமலாசியா என்ற எலும்பு நோயால் இந்தியர்களுக்கு பாதிப்பு.!

has your bone softened then it will possibly this disease

நோய் நொடி இல்லாமல் வாழ்வது என்பது இக்காலத்தில் அரிதாகிவிட்டது. நாளுக்கு நாள் புதுப்புது விதமான நோய்கள் உருவெடுத்து வருகிறது. இதில் பாதிப்புக்குள்ளாகும் அனைவரும் மருத்துவமனையும், மாத்திரையும் கையுமாக இருக்கிறார்கள். இப்போது புதிதாக எலும்பு சம்பந்தப்பட்ட நோய் அதிக அளவில் பரவி வருகிறது. இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இந்தியா மற்றும் இந்திய துணை கண்டத்தில் இருப்பவர்களுக்கு இந்த நோய் அதிகமாக ஏற்படுகின்றது.

ஆர்த்ரிடிஸ் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவைகள் எலும்பு சம்பந்தமான நோய்கள் என்று பலருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் ஆஸ்டியோமலாசியா என்ற நோய் புதிதாக இணைந்துள்ளது. இது எலும்பை பாதிப்புக்குள்ளாவது மட்டுமல்லாமல் எலும்பை மென்மையாக செய்கிறது இதனால் நம் எலும்பு மிக எளிதில் உடையக் கூடிய வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க – மன அழுத்தத்தை குறைப்பதற்காக நாம் பின்பற்ற வேண்டிய வழிகள்.!

வைட்டமின் டி மற்றும் எலும்புக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் குறையும் நிலையில் இந்த நோய் நமக்கு ஏற்படுகிறது. நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சக்திகள் மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் டி போன்றவைகள் இருந்தால் நமது எலும்புகள் வலுவடையும் ஆனால் எப்போது இது அனைத்தும் நம் உடம்பில் ஏற்றுக்கொள்ளப்படாமல் போகிறதோ அப்போது இருந்தே இந்த ஆஸ்டியோமலாசியா நோய் நமக்கு ஏற்படுகிறது.

சூரிய ஒளி நேரடியாக நம்மீது படும்போது அதிலிருந்து வைட்டமின் டி சத்துக்கள் நமக்கு வந்து சேர்கிறது ஆனால் சூரிய ஒளி படாத நாடுகளில் இந்த வியாதி அதிகளவில் பரவி வருகிறது. இதை தவிர்த்து இந்தியர்களின் சருமத்தினால் சூரிய ஒளியை அதிகமாக ஏற்க்க முடியாது இதனால் இவர்களும் இதனால் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சராசரியாக உலக அளவில் ஆயிரத்தில் ஒருவருக்கு இந்த வியாதி வருகிறது.

மேலும் படிக்க – உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் ஓமவல்லி.!

உணவு முறைகளில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தான் நாம் உண்ணும் வைட்டமின் டி சத்தை உறிஞ்சுகிறது. ஆனால் நமக்கு இந்தப் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் இது தடைபடுவதால் இவர்களுக்கும் ஆஸ்டியோமலாசியா என்ற நோய் வருகிறது.

இது வருவதற்கான அறிகுறிகள் நமது எலும்புகள் சில பகுதிகளில் அவ்வப்போது வலிகள் உண்டாகும் இது மட்டுமில்லாமல் கை, கால்கள் மற்றும் வாயைச் சுற்றியுள்ள பகுதிகளில் உணர்வின்மையை ஏற்படுத்தும், நமது இருதயம் சீரான இடைவெளியில் துடிக்காமல் போகும், இதுபோன்ற அறிகுறிகள் தான் இந்த வியாதி நமக்கு வந்திருக்கும் என்பதை சொல்கிறது.

மேலும் படிக்க – பெண்களுக்கான அந்த நாட்கள் நிவாரணி

எனவே இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து தப்புவதற்காக நாம் முன்னெச்சரிக்கையாக வைட்டமின் டி உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் அப்படியில்லையென்றால் இதன் சக்தி உள்ள முட்டையின் மஞ்சள் கரு, மீன்கள், பால், தயிர், தானியங்கள், உலர்ந்த பழங்கள் மற்றும் கீரை வகை உணவுகளை உட்கொண்டால் இந்த பிரச்சனை இருந்து நம்மால் தப்பிக்க முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன