மாடர்ன் உலகத்தின் மதிப்புமிக்கது கைதறி உடைகள்!

  • by

புடவை ரகங்கள் பல சமூக ஊடகங்களில் தான் டிரெண்டுகளை உருவாக்குவதில் புடவைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றது. புடவைகளை மிகவும் விரும்புவர்கள் செலிபிரிட்டிகளின் தோற்றத்திற்கு ஏற்றார் போல் செயல்படுவார்கள். இதனை புரிந்து கொண்டு, அதை மீண்டும் கொண்டு வருவதில் வெற்றியடைகின்றனர். புதிய டிசைன்களின் நேரங்களில் இவர்களின் மறு உருவாக்கம் புரொஃபஷனல் ஸ்டைலிஸ்ட்களைத் தோற்கடித்து விடும், பெரும்பாலான நேரங்களில், கூடுதல் பளபளப்பும் புடவையை அணியும் விதமும் எல்லா நாளிலும் அணிய முடியாததாக இதை மாற்றி விடுகின்றன.

புடவை நெய்து கொடுக்கும் குழுக்கள் தனித்து இருப்பதால் தினசரி சில்லறை விற்பனையாளர்கள் ஒருவருக்கொருவர் போட்டிப்போட்டு புதிய டிசைன்களைப் பகிர்ந்து கொள்வதையும், மேம்படுத்துவதையும் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். “சாரி பாக்டர்ஸ்” என்பது பிராண்ட்களை விளம்பரப்படுத்துகிறது.

புடவை அணிவதன் மேல் உள்ள உண்மையன விருப்பத்தை வெளிப்படுத்துகின்றனர் சிலர் புடவைகளில் டிசைன்கள் மேம்படுத்தி அணிகின்றனர். சிலர் தங்கள் புடவைகளை காண்பிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறார்கள் மற்றும் ஒரு சிலர் மட்டுமே தங்கள் தோற்றத்தை உண்மையில் மெருகேற்றி உருவாக்கி காட்டுகின்றனர். இந்திய நெசவுகளின் அடையாளத்தை பராமரித்து வளர்த்தெடுக்க இந்தத் தளம் ஒரு முக்கியமான பங்கை செலுத்துகின்றது.

மேலும் படிக்க – காதலில் நீங்கள் எந்த வகை என தெரிந்து காதலியுங்கள் !

புடவை வாங்குவதற்கு முன்பு, நமக்கு பிடித்த நிறங்கள், விலைகள் போன்ற பல விஷயங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இணைய தளங்களில் சில்லறை விற்பனை மையங்கள் போன்றவற்றை ஒப்பிட்டு பாருங்கள். என்ன வாங்க வேண்டும் என்று கடைகளில் உள்ளவர்கள் சொல்லும் வார்த்தைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைனிலேயே மார்க்கெட்டிங்கையும் விற்பனையையும் புரிந்து கொள்ளலாம்.

காஞ்சி காட்டன்:

இந்தியப் பெண்களுக்கு பருத்தி புடவைகள் பிடிக்கும், அதுவும் அட்டகாசமான நிறங்கள், பலவகை நிறங்கள், பெரிய நூலால் நெய்த பார்டர்கள் என்று காஞ்சி காட்டன்கள் மீண்டும் பிரபலமாகி வருகின்றன. தென்னிந்திய காட்டன்கள் என்று பொதுவாகப் பிரபலமாக குறிப்பிடப்படும் இதில், பாரம்பரிய மயில், அன்னம் மற்றும் யானைகள் போன்ற டிசைன்களும் பரவலாக இருக்கும். குறிப்பாக “ஆயிரம் புட்டா புடவை” மிகவும் பிரபலம்!

கலாஷேத்ரா காட்டன்

பளிச்சென்ற பிரஸ் லுக்குடன், டான்ஸ் புடவைகள் இப்போது பரவலாகப் பிரபலமாகி வருகிறது. பளிச்சென்ற நிறங்களில் புடவைகள் ஒட்டுமொத்த தோற்றத்தையும் உருவாக்குகின்றன, குறைவான விலையில் ஏற்ற சரியான புடவையைத் தேர்ந்தெடுக்க நீங்கள் கலாஷேத்ராவுக்கு சென்றால் போதும். ஏராளமான ஆன்லைன் விற்பனையாளர்கள் பவர்லூம் புடவைகளை கலாஷேத்ரா புடவைகள் என்று விற்கிறார்கள், இப்போதுதான் நுகர்வோருக்கு சரியான விவரங்கள் தெரியவருகிறது!

லினின் புடவைகள் கோடைகாலத்திற்கு ஏற்ற ஒரு துணி வகை, பல பெண்கள், பிரபல பிராண்ட்களில் மலிவான மாற்றை விரும்புகின்றனர். எல்லா லினின் துணியுமே ஒரு அரை மணிநேரத்தில் கசங்கி விடும் என்பது உண்மைதான், ஆனால் அவற்றில் சிலவற்றை கசங்கிய தோற்றத்திலும் அழகாக இருக்க செய்வதே லினினின் சிறப்பு. ஸ்மார்ட் ஆக்சஸ்ஸரிகள், பேஸ்டல் நிறங்களுடன் கச்சிதமாகப் பொருந்தும், இவை ஐஸ் கிரீம் மற்றும் கேக் போன்று தோன்றுவதாக சொல்கிறார்கள். பெய்ஜ் மற்றும் இயற்கை டோன்கள் லைனினின் துணியமைக்குப் பொருத்தமான அமைப்பில் இருக்கின்றன. லினின் புடவை இந்த சீசனுக்கு மிகவும் ஏற்ற ஒரு துணியாக இருக்கிறது.

மேலும் படிக்க – காலனிகளின் அற்புத வகைகள்..!

2020 ஜீ சினி விருது வாங்கும் விழாவில் நயன்தாரா பார்டர் கொண்ட அடர் மெரூன் நிற கைத்தறி புடவையை அணிந்து வந்திருந்தார். இந்த புடவைக்கு இவர் மேட்ச்சாக முழங்கை அளவு நீளமுள்ள ஜாக்கெட் அணிந்திருந்தார். செலிப்பிரிட்டிகள் கைத்தறி ரகங்களை அணிந்து வருவது அதன் பெருமைகளை இன்னும் உயர்த்திக் காட்டும்.

கம்ச்சாஸ்

செக்கர்டு புடவைகள் எப்போதுமே அவுட் ஆஃப் பேஷன் ஆகமால் நம்முடன் தொடர்ந்து பயணிக்கும். தென்னிந்தியாவில் பல நிற பாலும் பழமும் கட்டம் இன்றும் திருமண விழாக்களுக்காக வாங்கப்படுகின்றன. மேற்கு வங்காளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, மஸ்லின் துணியைப் போன்ற மிருதுவான கம்ச்சா துணிகள் அனைவரின் ஆடையையும் பளிச்சென்று தோற்றமளிக்க செய்யும், இதற்கு ஏற்றார் போல் மிக்ஸ் அண்ட் மேட்ச் செய்வதும் எளிமையானது.

கட்வால்ஸ்-

துங்க பத்திரா மற்றும் கிருஷ்ணா நதிகளுக்கு இடைப்பட்ட கட்வால் நகரத்தின் பிரபல கைத்தறி துணியானது ஒரு குறிப்பிடத்தக்க நெசவு ஆடைகளுள் ஒன்றாகும். கட்வால்ஸில் இரண்டு வகையான விருப்பத்தேர்வுகள் உண்டு, ஒன்று உடல் பகுதியில் எடைக் குறைவான காட்டனுடன் ஸ்டைலிஷான பட்டு ஜரி டிசைன் சேர்ந்து ஒரு வகையாகவும், மற்றொன்று முற்றிலும் பட்டால் நெய்யப்பட்ட கட்வால்ஸ் புடவைகளும் உள்ளன, இவற்றில் உள்ள நுணுக்கமான முந்தானை டிசைன்களால், எந்தவொரு நாளிலும் காஞ்சிபுரம் பட்டுக்கு மாற்றாக இவற்றை அணிய கூடிய வகைகளில் ஒன்றாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன