பட்டுபோன்ற கூந்தல் பளப்பளக்க வேண்டுமா !

  • by

கூந்தல் பராமரிப்பு என்பது இன்றைய அவசர உலகத்தில் அவசியமான ஒன்றாகவுள்ளது.  நமது கூந்தல் மிக அழகாக, கருமை நிறத்துடன், நீளமாகவும், அடர்த்தியாகவும் பட்டுபோன்ற சில்கியாக இருக்க ஆசையாக இருக்கும்.

கூந்தல் அழகுடன் பேண், பொடுகு இல்லாமல், முடி உதிராமல் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.  முடி உதிராமல் இருக்க வேண்டுமா, கூந்தல் நுனியில் வெடித்திருப்பது, தலை சொட்டை ஆவது, ஆங்காங்கே திட்டுதிட்டுடாக சொட்டையாவது, நரைமுடி வருவது, தலை அரிப்பு ஆகியவையும் கூந்தல் உதிர்வதோடு தொடர்புடையதுதான். பலவிதமான ஷாம்பு, கண்டிஷனர், கூந்தல் தைலம் எல்லாம் முயற்சி செய்து, ஒன்றும் பலனில்லையா உங்களுக்கான ரிமெடி தருகின்றோம். 

மேலும் படிக்க: இயற்கை அழகிற்கு பழங்களின் ஃபேஸ் மாஸ்க்..!

ஹேர் பேக்

தேவையான பொருட்கள்:

கூந்தல் வளர்ச்சியுடன் பட்டுபோன்ற பளபளப்பாக சில்கியாக இருக்க ஒரு ஹேர் பேக் அவசியம் அது குறித்து இங்கு கொடுத்துள்ளோம்.

செம்பருத்திப்பூ – 1 கை அளவு

செம்பருத்தி இலை – 1 கை அளவு

பச்சைப்பயிறு – 2 தேக்கரண்டி

முட்டை – 1

தேன் – 1 தேக்கரண்டி

வெந்தயம் –  தேக்கரண்டி அரைத்தது

பால் – 1 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய்- 1 தேக்கரண்டி

செய்முறை:

முட்டையின் வெள்ளைப் பகுதியை மட்டும் முதலில் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு மிக்ஸி ஜாரில் முட்டையின் வெள்ளைக்கரு, பால், தேன், பாசிப்பயிறு தண்ணீரில் ஊரியது, செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க: அழகுசாதன பொருட்களால் ஏற்படும் ஆபத்துகள் !!!

கூந்தலில் இதை பேக்காக போட்டு வரலாம். .  அதற்கு முன் நன்றாக திப்பி இல்லாமல் அரைத்து, அதோடு தேங்காய் எண்ணெய் கலந்து, தலையில் எல்லா இடங்களிலும் நன்றாக படும்படி விரல்களால் தடவிக் கொள்வது அவசியம்  ஆகும். தலை முடியின் வேரில் இருந்து நுனி வரை தடவி விட வேண்டும். இந்தக் கலவையானது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் அப்படியே ஊறவிடுங்கள். பிறகு ஷாம்பூ வைத்து அலசலாம்.

ஹேர் பேக்

 பாசிப்பயிறு மகிமை:

பாசிப்பயிறு – தலையில் இருக்கும் தூசுகளையும், பொடுகையும் நீக்கும், கூந்தலை சுத்தம் செய்யும், முடி உதிர்வதை தடுக்கும்; பாசிப்பயிறு பதிலாக கடலை மாவு கூட பயன்படுத்தலாம்.

செம்பருத்திப்பூ மற்றும் இலையானது தலையில் ஆங்காங்கே ஏற்படும் சொட்டையை குணப்படுத்தும், கூந்தல் வளருவதற்கு துணை புரியும். முட்டையானது முடி உதிர்வதை தடுக்கும், முடி வெடிப்பதை குணப்படுத்தும், கூந்தலுக்கு பட்டுபோன்ற பளபளப்புத்தன்மை கொடுக்கும். 

தேன்  ஒரு  ஆன்டி பாக்டீரியல் பண்புகள் கொண்டது, நுண் கிருமிகளை எதிர்த்து போராடும் ஆற்றல் உடையது.  அழுக்குகளை களையும், முடி உதிர்வதை கட்டுப்படுத்தி, ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். 

பால் தலையை ஆரோக்கியமாக வைக்க உதவும், கண்டிஷனர் போல இருந்து அழகாக்கும்.

மேலும் படிக்க: பொலிவான முகம் பெற இந்த பேஷ்வாசை பயன்படுத்துங்க

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன