பாசிப்பருப்பு என்கிற பச்சை பருப்பில் இருக்கும் மருத்துவ குணங்கள்.!

  • by
Green Gram Health Benefits

உங்கள் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்காக நாம் தினமும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்தகைய ஆரோக்கியத்தை தரும் உணவு தான் பச்சைப்பயிறு. இதை தினமும் உணவில் சேர்ப்பதன் மூலமாக நமது சருமம், கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும்.

இரத்தசோகை

இரும்புச் சத்து குறைபாடினால் ஏற்படும் பிரச்சனைதான் ரத்தசோகை. உங்கள் ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது நமது ரத்தத்தின் வேகம் குறைந்து ரத்தசோகை பிரச்சனை ஏற்படும். இதனால் நம் மனநிலை எப்போதும் மந்தமாக இருக்கும். இதைத் தடுப்பதற்கு தினமும் ஒரு கப் பச்சை பயிறை உணவில் சேர்த்தால் போதும்.

ஊட்டச்சத்து உணவு 

பொதுவாக விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் அல்லது மல்யுத்த போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவை மட்டுமே உன்வார்கள், பச்சை பயிறும் அந்த வகையைச் சேர்ந்ததுதான். எனவே தினமும் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்து தேவை என்றால் காலையில் ஒரு கப் பச்சை பயிரை சாப்பிட்டால் போதும். இதனால் அன்றைய நாள் உங்களுக்கு தேவையான அனைத்து ஆற்றலும் கிடைத்து மேலும் வேறு எந்த உணவிலும் கவனம் செலுத்தாமல் பார்த்துக் கொள்ளும்.

மேலும் படிக்க – பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

உடல் எடை குறையும்

பச்சை பருப்பில் 100 கலோரிகளுக்கு மேல் இருக்காது எனவே இதை உன்வதினால் உங்கள் பசியை உடனடியாக தீர்த்து மேலும் பசி எடுக்காமல் பார்த்துக் கொள்ளும். இதன் மூலமாக நாம் வேறு எந்த உணவும் உண்ணாமல் நமது உடல் எடையை நம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

சரும பிரச்சனையை தீர்க்கும்

வெயிலில் அதிகமாக சுற்றினால் நம் சருமம் வறட்சியடைந்து பெரிதாக பாதிக்கப்படுகிறது. இதன் மூலமாக சரும புற்றுநோய் கூட ஏற்படலாம் எனவே தினமும் உணவில் பச்சை பயறை சேர்ப்பதன் மூலமாக உங்கள் சருமத்தை பாதுகாத்து புற்றுநோய் ஏற்படும் செல்களை அழிக்கிறது.

மேலும் படிக்க – ஆப்பிள் சீடர் வினிகரின் பயன்கள்.!

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

நம்முடைய ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்து கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். இதன் மூலமாக ரத்தத்தில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புகள் அனைத்தையும் அகற்றி விடும். இதனால் நமது இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

எனவே தினமும் உங்கள் உணவுகளில் பச்சை பயறை சேர்த்துக் கொள்ளுங்கள். இதுவரை பெரிதாக இதைப் பயன்படுத்தாமல் இருந்தால் இன்று முதல் இதை ருசியாக சமைத்து உங்கள் குடும்ப ஆரோக்கியத்தை அதிகரியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன