நெல்லிக்காய் மற்றும் திருபல பொடியை சாப்பிட்டு நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்..!

  • by
gooseberry and tiripala powder can increase immune power

திரிபலா பொடி என்றால் மூன்று விதமான பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட பொடி என்ற பொருள். இந்த மூன்று பொருள் என்னவென்றால் அதில் ஒன்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் நெல்லிக்காய், தோல் பதனிடல், பெல்லேறிக் மியிரோபாலன் போன்றவை களைக் கலந்து செய்யப்படுவது இந்த திரிபலா பொடி.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

ஆயிரமாயிரம் காலங்களாகவே திரிபலா பொடியை ஆயுர்வேத மருத்துவத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு மிக முக்கியமான காரணம் இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதுதான். நம் உடலுக்குள் இருக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் குணம் திருபலா பொடிக்கு அதிகமாக உள்ளது.

மேலும் படிக்க – கொரானாவுக்கு காரணமான உணவுகள் அதை தவிர்ப்பது எப்படி

செரிமானத்திற்கு உதவும்

வயது அதிகரிப்பதினால் ஒரு சிலருக்கு செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. அதிலும் 30 வயதைக் கடந்தவுடன் செரிமான பிரச்சனை ஏற்பட்டால் அதற்குக் காரணம் உங்களின் உணவு முறை. எனவே இதை சரி செய்வதற்காக தினமும் இரவில் திரிபலா பொடியை நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதன் மூலமாக செறிமானமாகி மலச்சிக்கல் போன்ற பிரச்சினையும் உங்களுக்கு வராது.

ரத்த சோகை பிரச்சினை

இரத்த சோகை பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்காக நமது உடலில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். எனவே உங்கள் ரத்தத்தில் அணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் திரிபலா பொடியை தினமும் சாப்பிடுங்கள்.

மேலும் படிக்க – இஞ்சியை இப்படியெல்லாம் கூட சாப்பிடலாமா???

சர்க்கரை நோயை குணப்படுத்தும்

சர்க்கரை நோய் உங்களுக்கு வர விடாமல் தடுப்பதற்கு நீங்கள் திரிபலா பொடியை நீரில் கலந்து குடிக்கலாம். இதன் மூலமாக உங்கள் ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை சமமாக வைத்துக்கொள்ளும். அதிக சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள சர்க்கரை தாக்காமல் இருப்பதற்கு திருமலபடி பயன்படுகிறது.

அதேபோல் புற்று நோய் உண்டாக்கும் செல்களை அழிக்கும் தன்மை இதற்கு உண்டு. இதை தவிர்த்து உடல் பருமன் பிரச்சனை, தலைவலி, சுவாசப் பிரச்சனை போன்ற அனைத்தையும் தீர்ப்பதற்கு திரிபலா பொடி உதவுகிறது. சமீபத்தில் நோய்த்தொற்றுகள் அதிகமாக பரவி வருவதால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். எனவே இது ஏராளமாக திருபலா பொடியில் இருக்கிறது. எனவே இதை தினமும் எடுத்துக் கொண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன